Sunday, June 27, 2010

மனைவி

காற்றை கிழித்துக் கொண்டு தன்னை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்த அந்த பொருளை பார்க்கும் பொழுது செத்தோம் என்று தான் நினைத்தான் சிவராமன். கிட்டத்தட்ட 2 வருட ப்ராக்டிஸ் என்றாலும் எல்லா முறையும் தப்பித்து விட முடியுமா என்ன? அப்பொருள் அருகே வந்த பொழுது தான் யூகிக்க முடிந்தது. அது மற்றைய நாட்களைப் போல் சாதாரண நெளியக்கூடிய பாத்திரம் அல்ல. வலிமையான தோசைக்கல் என்று. எதிர்பாராத தருணத்தில் காயத்திரியால் வீசப்பட்ட தோசைக்கல். வால் நட்சத்திரம் பூமியை உரசிக் செல்வது போல சிவராமனின் தலையை லேசாக உரசிச் சென்று விட்டது. அந்த லேசான அடி மயக்கத்தை தரக்கூடிய அளவிற்கு இல்லையென்றாலும் அதிர்ச்சியில் மயங்கினான்.
ஹிஸ்டீரியாவை பற்றி நான் படித்திருந்த உளவியல் விஷயங்கள் அனைத்தும் நல்லவேளை மண்டையில் அப்படியே இருந்தது. ஆரம்ப காலங்களில் காயத்ரி அமைதியாகத்தான் இருந்தாள். பின் போகப்போக அவளது கோபம் எல்லை மீற ஆரம்பித்தது. கண்களை வெறிக்க வைத்துக் கொண்டு பற்களை நற நறவென கடித்தபடி 3000 வாட்சில் குரல் வளை வெடிக்க கத்திக்கொண்டு அவள் போடும் சண்டை இருக்கிறதே. (இரவு நேரங்களில் அவள் தூங்கும் பொழுது அவளுக்குத் தெரியாமல் அவள் நகங்களை வெட்டி விட்டாலும்) பத்ரகாளிதான் கண்முன் தெறிவாள். நாம் ஏன் பிளாஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது என்கிற முடிவிற்கு என்றோ வந்து விட்டேன். கணமான பாத்திரங்கள் ஏற்படுத்தும் காயங்கள் ஆற வெகு நாட்கள் பிடிக்கிறது. பாத்ருமில் வழுக்கி விழுந்த கதையையே 10 தடவைக்கு மேல் கூறினால் யார்தான் நம்புவார்கள்.
நந்தா. என் அதிபுத்திசாலியான நண்பன். என் காயங்களின் காரணத்தை என்றோ கண்டுபிடித்து விட்டான். துடிப்பு மிகுந்த துப்பறிவாளன். நான் வழுக்கி விழுந்ததாக கூறப்பட்ட பாத்ருமை பார்வையிட்டு. சில கேள்விகள் கேட்டான். பதில் கூறமுடியவில்லை. முழுக்க நனைந்தபின்..........ஒத்துக் கொண்டேன். கேலி செய்வான் என்று எதிர்பார்த்தேன். ஆறுதல் கூற ஆரம்பித்து விட்டான். தனக்குத் தெரிந்த சைக்காட்ரிஸ்ட் ஒருவரின் முகவரியை தந்து. காயத்திரியை அழைத்து செல்லுமாறு வற்புறுத்தினான். அவளிடம் உண்மையை கூறி கூட்டிச் செல்ல முடியுமா.? அதனால் தான். அந்த ஒரே கரணத்துக்காக மட்டும் தான். ஏதோ எனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பொய்களைக் கூறி அழைத்துச் சென்றேன்.
அவளிடம் பொய்களை கூறும் பொழுது என் விரல்கள் நர்த்தனம் புரிந்தன. சாரி நடுங்கியது. ஏனென்றால் என் முன் அநுபவம் என் விரல்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. காயத்திரியிடம் பொய் பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட முன் அநுபவம் விரல்களில் நடுக்கம் என்னும் செயல் மூலமாக அநிச்சையாக செயல்பட்டு கொண்டிருந்தது. ஆனால் இந்த பொய்க்கு தோசைக்கல் அடியை நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல வேளை தெய்வாதீனமாக பிழைத்துக் கொண்டேன்.
இவ்வளவிற்கும் நடுவில் என் மனதில் ஒரு சிறு குதூகலம். அந்த நந்தா இருக்கிறானே. என்னை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவன் செய்த செயல். கடந்த 5 வருடங்களாக நான் ஒரு நல்ல மனநல மருத்துவராக காலம் தள்ளி வருகிறேன். அந்த வயிற்றெறிச்சல். ஏதொ எனக்கு உதவி செய்ததாக அவன் செய்த காரியங்கள். வெளியில் இவ்வாறு என்னைப்பற்றி தம்பட்டம் அடித்திருக்கிறான். டாக்டர் சிவராமன் தனது நோயாளி மனைவியை ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பிக்க சென்றிருக்கிறார்.
இதன் மூலம் அவர் தான் ஒரு நல்ல மருத்துவர் இல்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹா ஹா ஹா. என்னைத் தவிர வேறு யாராவது காயத்திரியை தாக்கு பிடிக்க முடியுமா? நீங்களே கூறுங்கள். அதுவும் நிரூபிக்கபட்டு விட்டது. நந்தாவின் அறிமுக டாக்டர். அன்று தனியறையில் அலறிய அலறல் இருக்கிறதே. அந்த தேவகானத்தை வெளியில் இருந்து 2 நிமிடம் ரசித்து விட்டுத் தான் உள்ளே சென்றேன். ஆள் உயிரோடு தான் இருந்தான் நல்லவேளை. ஒவ்வொரு முறையும் கோபத்தின் உச்ச கட்டத்தில் அவள் மயங்கி விடுவாள்.
அவள் நிலைமை மோசமாகிவிடுமுன் அவளை காப்பாற்ற வேண்டிய கடமை என் மனதை நாள் தோறும் அரித்துக் கொண்டுதானிருக்கிறது. இவ்வளவிற்கும் பிறகும் அவள் மேல் அன்பு மாறாமல் இருப்பதற்கு நிச்சயமாக காரணம் உண்டு.கல்லூரியில் இளநிலை பட்டம் படிக்கும் காலத்திலிருந்தே அவள் பின் சுற்றிக்கொண்டிருந்தேன். அவள் வேறு மேஜர். நான் வேறு மேஜர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். அவளை கவருவதற்காக பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தேன். எனது மனோதத்துவ அறிவு அனைத்தையும் பிரயோகித்தேன்.
அவளுக்காக கொலைகாரனாக கூட மாறினேன். ஆம். அவள் முன் பைக் ஓட்டி காண்பிக்க வேண்டுமென்ற ஆவலில். (எனக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது) ஒரு ஓரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்த நாயின் மேல் ஏற்றி கொன்று விட்டேன். ஆனால் ஒரு நாள் அவள் என்னை திரும்பிப் பார்த்தாள். படையப்பா படத்தின் முதல்நாள். முதல்ஷோ. முதல் டிக்கெட்டை கைப்பற்றி இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை வெற்றி மாலையாக சூட்டிக்கொண்ட பொழுது. 5வது வரிசையில் அமர்ந்து கொண்டு அவள் பார்த்து கொண்டிருந்தாள் அன்று மாலையே அவள் என்னிடம் பேசினாள் இவ்வாறு.
‘சினிமா அது இதுன்னு சுத்துறத விட்டுட்டு ஒழுங்கா படிக்கலாம்ல. நீங்க நல்லா படிக்கக் கூடிய ஸ்டூடண்ட்னு நான் நெனைச்சுகிட்டு இருந்தேன்” சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள் எனக்கு லேசாக உறைத்துது. ஆனால் அடுத்து நான் கண்ட காட்சி மெய்மறக்கச் செய்தது. அவள் திரும்பி நடந்து செல்லும் பொழுது அந்த ஒற்றைச் சடை பின் புறம் அப்படியும் இப்படியுமாக ஆடிய ஆட்டம் எப்படி சொரணை வரும்.
என் வீரத்தை நிரூபிக்க மற்றுமொரு வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் கல்லூரியை சுற்றி நிறைய புதர்கள் உண்டு. அன்று காயத்ரியின் வகுப்பறைக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. மாணவிகள் கத்திய கதறல் ஏஃசி அறைக்குள் அயர்ந்திருந்த கல்லூரி முதல்வரின் செவிப்பறையை கிழித்து விட்டது. அனைவரும் ஓடினோம். மிக நீண்ட பாம்பு நிச்சயமாக பயந்து தான் ஆக வேண்டும். எனக்கு ஒன்றும் பயமில்லை இருப்பினும் அருவெருப்பாக இருந்தது. மிரண்டு போயிருந்த பாம்பு தலையை உயர்த்தியபடி தன்னை நெருங்கவிடாமல் படம் எடுத்து கொண்டிருந்தது. யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் நான் அந்த காரியத்தை செய்து விட்டேன்.
பாம்பிற்கு என்ன தெரியும் என் காதல் வெறியைபற்றி. பிடித்தால் சும்மா இருந்து விட்டு போக வேண்டியது தானே. இப்படியா கொத்துவது கன்னாபின்னாவென கண்ட இடத்தில். வாயில் நுரைதள்ள அசிங்கமாக போய் விட்டது. சடாரென கண்கள் இருண்டு தலைசுற்றி கீழே விழுந்து விட்டேன். சினிமாவில் வருவது போல் கடிபட்ட இடத்தில் இரத்தத்தை உறிஞ்சி என் உயிரை காப்பாற்றியவள் காயத்திரிதானாம். பின்தான் அதிர்ச்சி தரும் மற்றொரு விஷயம் எனக்கு வலிப்பு நோய் இருப்பது. எனது மருத்துவ அறிக்கையை பார்த்த பின்தான் தெரிந்தது. காயத்ரிதான் அதை என்னிடம் தயங்கியபடி எடுத்து கூறினாள்.
அதன் பின் அவளை பார்ப்பதை சிறிது சிறிதாக தவிர்த்தேன். அவளது வாழ்க்கை ஒரு வலிப்பு நோயாளியுடன் முடிந்து விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில். இந்த சிம்பத்தி என்கிற உணர்வு நம் நாட்டு பெண்களை பீடித்திருக்கும் வலிமையான நோய். அப்பொழுதான் எனக்கே புரிந்தது. கண்டுகொள்ளுங்கள் பெண்கள் கரையும் நேரம் எதுவென்று.
எனது கல்லூரிபடிப்பை முடித்து விட்டு புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சிறந்த மருத்துவர் ஒருவரிடம் அஸிஸ்டெண்டாக வேலையில் அமர்ந்தேன். எதிர்பாராத விதமாக காயத்ரியும் அதே ஹாஸ்பிட்டலில் அக்கவுண்டட்டாக சேர்ந்தாள். திருமணத்திற்கு பின்தான் தெரிந்தது அவள் என்னை விரும்பியே அங்கு வந்து வேலையில் சேர்ந்தாள் என்று.
அவள் தன் வெட்கத்தைவிட்டு என்னிடம் தன் காதலை கூற நான் மறுக்க அவள் பழைய விஷயங்களை ஞாபகப்படுத்த, நான் மீண்டும் மறுக்க அப்பொழுதே கவனித்தேன் அவ்வப்பொழுது பொங்கி எழும் கோபக்கணலை. பின் கடைசியாக தோற்றது நான்தான். அவளுடைய அன்பு அதீதமானது. என்னை தன் அன்பில் திக்குமுக்காட செய்துவிட்டாள்.
எனது வலிப்பு நோய் அதன் பின் எனக்கு வரவேயில்லை. எனது மருத்துவ ரிப்போர்ட் கூட நார்மல் ஆகவே இருந்தது. ஆனால் சமீப காலங்களில்தான் தெரிந்தது. காயத்திரி ஹிஸ்டீரியாவின் உச்சகட்டத்தில் வலிப்பு நோய்க்கு ஆளாகிறாள் என்று. நீங்கள் எப்படி எடுத்து கொள்வீர்களோ எனக்கு தெரியாது. நான் இப்படித்தான் எடுத்துக் கொண்டேன். என் மீது கொண்ட அதீதமான அன்பால் எனது நோயை தனதாக்கிக் கொண்டாள். அவள் என்றென்றும் என் இதயத்து பூலான் தேவிதான். அவளுடனான கலவரமான தருணங்களும் காதலின் வெளிப்பாடாகவே உணர்கிறேன். எனது உண்மையான அன்பை கடவுள் புரிந்து கொள்ளும் பட்சத்தில் அவளது நோய் கண்டிப்பாக குணமாகி விடும் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உள்ளது.
- சூர்யா
நன்றி கீற்று

நாயர் ஒரு டீ


‘நாயர் ஒரு டீ’


நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான் கார்த்திக். பேச்சுலர். சென்னையில் வந்து கடந்த 4 மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான். காலையில் குடிக்கும் அந்த டீ தான் காலை உணவு. நாயர் ஒருத்தர் தான் கடன் கொடுப்பார். அதனால் அவர் விஷத்தைக் கொடுத்தாலும் அதை குடித்துதான் ஆக வேண்டும்.


‘என்ன நாயர் டெய்லி நீங்க லிட்டர் லிட்டரா பால் வாங்குறிங்க, வாங்குற பாலெல்லாம் என்ன பண்றிங்க, டீ கேட்டா வெறும் டிக்காஷன் கொடுக்குறிங்க’‘


"ம், பால் இல்லாம் டீ போடுறதுக்கு நான் என்ன மந்திரவாதியா, நக்கல் பண்ணாம சாயாவ குடி"


’‘நீதான் சொல்ற சாயான்னு, ஆனா வெறும் சாயம் மட்டும் தான் இருக்கு’ சலித்துக்கொண்டான் கார்த்திக்.


‘நாயர் இன்னைக்கு பேப்பர் எங்க நாயர்’


‘தெரியலை’‘


என்னது தெரியலையா’


‘யோவ் பேப்பர் படிக்கணும்னா 2 ருபாய் கொடுத்து வாங்கிப் படி, அத விட்டுட்டு ஓசி பேப்பர் எல்லாம் எங்கிட்ட கேக்கக் கூடாது புரியுதா?’


‘ம் ......, உங்கிட்ட கேக்காம சி.பி.ஐ கிட்டயா போய் கேக்கமுடியும்’


‘போய் கேளேன் குடுத்தா வாங்கிக்கோயேன்’


‘சர்ர்ரிரி நாயர் இப்ப ஏன் கோவிச்சுக்கற, பேப்பர் தான கேட்டேன், இன்னைக்கு கிளாசிபைட்ஸ் வரும், ஏதாவது வேலைக்கு அப்ளை பண்ணலாம்னு கேட்டேன், அதுக்கு போய் இப்படி கோச்சுக்கிறியே’


உர்ரென்று கோபத்துடன் டீ போட்டுக் கொண்டிருந்தார் நாயர்.


‘இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதான, இந்தா புடி’ அடியிலிருந்து பேப்பர் எடுத்து கொடுத்தார் நாயர்.


‘நாயரே வர வர உமக்கு குசும்பு ஜாஸ்தியா போச்சு, எனக்கும் வேலை கிடைக்கட்டும் பாத்துக்குறேன்’


கைலியைத் தூக்கி கட்டியபடி ஓரக்கண்ணால் நாயரை முறைத்துப் பார்த்தபடி கையில் பேப்பருடன் நடையைக் கட்டினான் தனது அறைக்கு. கார்த்தியின் அறை நாயர் டீ கடைக்கு மேல் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தது. அறைக்கு சென்றவன் செய்தித்தாளைப் பார்த்து 2 முகவரிகளை குறித்துக் கொண்டான். கையோடு சென்று அப்ளை பண்ணினான். ஒரு வாரத்திற்குப் பிறகு இன்டர்வியூ கார்டு வந்தது. ஒன்று செவ்வாய் கிழமை மற்றொன்று புதன் கிழமை.


செவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் நாயருடன் சண்டை போட்டு முடித்துவிட்டு வேகவேகமாக கிளம்பி இன்டர்வியூற்கு சென்றான். மூன்று பகுதியாக இன்டர்வியூ நடந்தது. முதல் பகுதியில் தேறி விட்டான். இரண்டாவது பகுதி சற்று கடினமாக இருந்தது. மிக கடினமாகப் போராடி எப்படியோ தேறிவிட்டான். மூன்றாவது பகுதி ஜெனரல் டாக்கிங். சொதப்பி எடுத்து விட்டான். அத்தனை பேர் முன் ஆங்கிலத்தில் பேச முடியாமல் திணறியது, அவமானமாகி விட்டது. வெளியேற்றப்பட்டான்.


மாலை வேளையில் மனம் நொந்தவனாய் நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான்.


‘என்ன கார்த்திக் தம்பி........ டீ ......ஓ சாரி டிக்காஷன் வேணுமா’


கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றான். நாயர் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்,


‘நாம் பேசா விட்டாலும் அவனாக வம்புக்கிழுப்பானே இன்னைக்கென்ன சோகமா போறான்’ நாயர் குழப்பத்துடன் அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்.


சோகமாக உள்ளே சென்ற கார்த்திக் மறுநாள் காலை தான் வெளியே வந்தான்.


‘நாயர் ஒரு டீ’


‘என்ன கார்த்திக் நேத்து வேலைக்கு ஆள் எடுக்குறாங்கன்னு போனியே என்னாச்சு’ சிரித்துக் கொண்டே இயல்பாக கேட்டார்.


‘என்ன நாயர் நீ சிரிச்சுக்கிட்டே கேக்குறத பாத்தா நான் இன்டர்வியூல செலக்ட் ஆகாம போனத நெனைச்சு ரொம்ப சந்தோஷபடுற போல இருக்கு’


‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல’ என இழுத்தார்.


‘சரி இந்தா டீயக் குடி’


டீயை வாங்கி மெதுவாக உறிஞ்சினான்.


‘என்ன நாயர் இன்னைக்கு டீயில எதாவது கலந்துட்டியா’


‘ம், ஒரிஜினல் ஆரோக்கியா பால்ல போட்டது, ஒரிஜினல் டீ இப்படித்தான் இருக்கும்’


‘என்ன நாயர் திடீர் கரிசணம்’


‘அதெல்லாம் ஒண்ணுமில்லே, நீயும் இன்டர்வியூ அது இதுன்னு போற, நாளைக்கே வேலை கிடைச்சுடுச்சுன்னா என் கடன் பாக்கிய செட்டில் பண்ணிடுவல்ல அதான்’


‘ம்ம்ம்............ அப்படி சொல்லு சோழியன் குடுமி சும்மாவா ஆடும்’


டீயைக் குடித்து விட்டு அடுத்த இன்டர்வியூவிற்குப் போனான், நம்பிக்கை குறைந்தவனாய் காணப்பட்டான். ‘நாம எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும் நடக்குறது தான் நடக்கும்’ மனதிற்குள்ளேயே கூறிக்கொண்டான். இன்டர்வியூ நடந்தது. ஒவ்வொரு சுற்றையும் சுமாராகத்தான் முடித்தான். மூன்றாவது சுற்றை முடித்து விட்டு வெளியே வந்தான். மனதெல்லாம வெறுமை அப்பியிருக்க பொடி நடையாக நடந்தே வந்தான். சோகமாக நாயர் கடையை கடந்து மாடிக்கு சென்றான்.


3 நாட்களுக்குப் பிறகு, கார்த்திக்கிற்கு ஒரு போன்கால் வந்தது. புதன் அன்று நடந்த இன்டர்வியூவில் செலக்ட் பண்ணப்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் வந்து மேனேஜரை பார்க்கும்படியும் கூறப்பட்டது. கார்த்திக் துள்ளி குதித்தான். அந்த அபார்ட்மென்டில் உள்ள அனைவரிடமும் தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான். நண்பர்கள் அனைவரும் ட்ரீட் கேட்டார்கள். அவன் நிலைமை அனைவருக்கும் தெரியும். அட்லீஸ்ட் ஒரு டீ அது போதும் என்றார்கள். அனைவரையும் கூட்டிக் கொண்டு கீழே போனான்.


நாயர் கடைக்கு எதிர்த்தாற் போல் ஒரு டீ கடை இருந்தது. நாயரை வெறுப்பேற்ற வேண்டுமென்றே அனைவரையும் அந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்றான். நாயரின் முகம் செத்துப் போனது. அந்தப் பக்கமாக ஒரு தெரு நாய் போய் கொண்டிருந்தது. வெறுப்பில் இருந்த நாயர் கொஞ்சம் தண்ணீரைப் பிடித்து அந்த நாயின் மேல் ஊற்றினார்.


நாயை பார்த்து ‘இனிமே இந்த பக்கம் வந்தன்னா சுடுதண்ணியப் புடிச்சு மேல ஊத்திடுவேன் ஜாக்கிரதை’


கார்த்திக் வேண்டுமென்றே சத்தமாக கத்தினான்.


‘அண்ணே ஒரு ஏழு டீ போடுங்கண்ணே’


நாயர் கடையில் டம் டும் என்று பாத்திரம் உருண்டது.


இரண்டு நாட்களுக்கு முன்


இளமாறன், நாயர் டீ கடைமுன் தனது டூ வீலரை பார்க் செய்தான்


‘என்ன நாயர் நல்லா இருக்கிங்களா? பாத்து ரொம்ப நாளாச்சு’


‘அடடே இளமாறன் தம்பியா, நல்லாருக்கியாப்பா, பாத்து ரொம்ப நாளாச்சு, இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்க, ம், கல்யாணம் எதுவும் ஆயிடுச்சா ஆள் தடிச்சு போயிருக்க’


‘உங்ககிட்ட சொல்லாமையாண்ணே’


‘சரி இப்ப என்ன பண்ற’


‘டி.சி.எஸ் ல ஹெச் ஆரா இருக்கேன்’


‘அப்படீன்னா’


‘அதெல்லாம் உங்களுக்கு புரியாதுண்ணே விடுங்க’


‘எப்படியோ நல்லாருந்தா சரி’


‘சரி ஒரு டீயப் போடுங்க’


நாயர் இளமாறனுக்கென்று ஒரு ஸ்பெசல் டீயை போட்டார். அப்பொழுது கார்த்திக் சோகமாக மாடியிலிருந்து கீழே இறங்கி இன்டர்வியூ சென்று கொண்டிருந்தான். பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த நாயர் திரும்பி திரும்பி அவனையே பார்த்தார்.


‘என்ன நாயர் அந்த பையனையேப் பாத்துக்கிட்டுருக்கிங்க’


‘ஒண்ணுமில்ல நம்ம பையன் தான். பேரு கார்த்திக். மாடிலதான் குடியிருக்கான். எப்பவும் கலகலன்னு இருப்பான். என்னய சீண்டி பாக்கலண்ணா அவனுக்கு நிம்மதியாவே இருக்காது. இன்னைக்கு என்னமோ சோகமா போறான்’


‘என்ன பிரச்சனைன்னு உங்களுக்குத் தெரியாதா?’


‘அந்த பையன் ஊரவிட்டு வந்து நாலு மாசமா வேலை தேடிகிட்டு இருக்கான். ஒண்ணும் கை கூட மாட்டேங்குது. நேத்து கூட ஏதோ ஒரு பெரிய எடத்துக்குப் போய்ட்டு சோகமா வந்தான்’


‘தம்பி நீ தான் ஏதோ பெரிய கம்பெனில வேலை பாக்குறல, அவனுக்கு எதாவது பாத்து செய்யேன்’


இளமாறன் நேரத்தைப் பார்த்துவிட்டு எழுந்தான்.


‘சரிண்ணே பாக்குறேன், அப்ப நான் கௌம்புறேன்’


‘சரி தம்பி’


இன்று


நாயரின் வெறுப்பிற்கு நடுவே டீ பார்ட்டீ கோலாகலமாக முடிந்தது. நாயரை வெறுப்பேற்றியதில் அனைவருக்கும் உள்ளுர மகிழ்ச்சி. அன்று முழுவதும் அறையில் ஒரே கூத்தும் கும்மாளமுமாக கழிந்தது. ரேடியோவில் பாட்டை சத்தமாக வைத்து கொண்டு நடனம் ஆடினார்கள். நாயர் கடையில் அக்பர் காலத்தில் அடிக்கப்பட்ட வெள்ளை சுண்ணாம்பிற்கு பின்னிருந்த காரை பெயர்ந்து விழ ஆரம்பித்தது. நாயர் தனது கோபத்தை எல்லாம் பாத்திரங்களின் மேல் காட்டிக்கொண்டிருந்தார்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு


கார்த்தி கையில் அப்பாய்ன்மென்ட் ஆர்டருடன் சோகமாக வந்து கொண்டிருந்தான். நண்பர்கள் ஆர்டரை வாங்கி ஆவலுடன் பார்த்தார்கள். அதில் 22 ஆயிரம் ருபாய் சம்பளம் போட்டிருந்தது. தட்டிக் கொடுத்தார்கள். கட்டிப்பிடித்து கொண்டாடினார்கள். வாழ்த்துக்கள் கூறினார்கள். நாயர் மேலே குதிக்கும் சத்தம் கேட்டு கீழிருந்து கத்தினார்.


‘டேய் ரொம்ப குதிக்காதிங்கடா கீழே கடை இருக்குள்ள’


ஒருவன் மேலிருந்து கத்தினான்


‘நாயர் ரொம்ப பேசுன உன் கடை டீய எடுத்து உன் வாயிலேயே ஊத்திடுவேன் ஜாக்கிரதை’


‘டேய் டேய், காலைல டீ குடிக்க கீழ வருவதான, வா, டீல எலி மருந்த கலக்கி குடுக்குறேன்’


‘நாயர் நீ குடுக்குற டீயே எலி மருந்து மாதிரி தான் இருக்கு, நீ ஏன் டீ கடைன்னு போர்டு போட்டிருக்க எலி மருந்து கடைன்னு மாத்திரலாம்ல’


‘டேய் ராஸ்கல்களா யாருடா பல்லு மேல நாக்க போட்டு பேசுறது, அவ்ளோ ரோசம் இருந்தா கடன் பாக்கிய செட்டில் பண்ணிட்டு பேசுங்கடா, துச்சா பசங்களா’ நாயர் கோபத்தில் உறுமினார்.


மணி 10 தொட்டது. நாயர் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். யாரோ டீ கேட்டார்கள்.


‘நாயர் டீ’


‘டீ யெல்லாம் முடிஞ்சு போச்சு சார்’ எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தார். கார்த்திக் உட்கார்ந்திருந்தான். நாயர் ஒன்றும் பேசவில்லை வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். பின் மனம் கேட்காமல் எழுந்து தனக்கு வைத்திருந்த பாலில் டீ போட்டு கொடுத்தார். கார்த்திக் அமைதியாக குடித்தான். அமைதியாக எழுந்து படியேறினான். பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த நாயர் பாதியில் எழுந்து வந்து ஆச்சர்யத்துடன் பார்த்தார் அமைதியாக செல்லும் கார்த்திக்கை.


‘என்னாச்சு இவனுக்கு’ யோசனையாக வந்தவர், கார்த்திக் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு பைவ் ஸ்டார் சாக்கலேட் இருந்ததைப் பார்த்தார்.


மெலிதாக சிரிப்பு வர அதை இடது கையால் எடுத்து பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்.


- சூர்யா


நன்றி கீற்று

நாயர் ஒரு டீ

‘நாயர் ஒரு டீ’


நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான் கார்த்திக். பேச்சுலர். சென்னையில் வந்து கடந்த 4 மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான். காலையில் குடிக்கும் அந்த டீ தான் காலை உணவு. நாயர் ஒருத்தர் தான் கடன் கொடுப்பார். அதனால் அவர் விஷத்தைக் கொடுத்தாலும் அதை குடித்துதான் ஆக வேண்டும்.


என்ன நாயர் டெய்லி நீங்க லிட்டர் லிட்டரா பால் வாங்குறிங்க, வாங்குற பாலெல்லாம் என்ன பண்றிங்க, டீ கேட்டா வெறும் டிக்காஷன் கொடுக்குறிங்க’‘


"ம், பால் இல்லாம் டீ போடுறதுக்கு நான் என்ன மந்திரவாதியா, நக்கல் பண்ணாம சாயாவ குடி"


’‘நீதான் சொல்ற சாயான்னு, ஆனா வெறும் சாயம் மட்டும் தான் இருக்கு’ சலித்துக்கொண்டான் கார்த்திக்.


‘நாயர் இன்னைக்கு பேப்பர் எங்க நாயர்’


‘தெரியலை’‘


என்னது தெரியலையா’


‘யோவ் பேப்பர் படிக்கணும்னா 2 ருபாய் கொடுத்து வாங்கிப் படி, அத விட்டுட்டு ஓசி பேப்பர் எல்லாம் எங்கிட்ட கேக்கக் கூடாது புரியுதா?’


‘ம் ......, உங்கிட்ட கேக்காம சி.பி.ஐ கிட்டயா போய் கேக்கமுடியும்’


‘போய் கேளேன் குடுத்தா வாங்கிக்கோயேன்’


‘சர்ர்ரிரி நாயர் இப்ப ஏன் கோவிச்சுக்கற, பேப்பர் தான கேட்டேன், இன்னைக்கு கிளாசிபைட்ஸ் வரும், ஏதாவது வேலைக்கு அப்ளை பண்ணலாம்னு கேட்டேன், அதுக்கு போய் இப்படி கோச்சுக்கிறியே’உர்ரென்று கோபத்துடன் டீ போட்டுக் கொண்டிருந்தார் நாயர்.‘இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதான, இந்தா புடி’ அடியிலிருந்து பேப்பர் எடுத்து கொடுத்தார் நாயர்.‘நாயரே வர வர உமக்கு குசும்பு ஜாஸ்தியா போச்சு, எனக்கும் வேலை கிடைக்கட்டும் பாத்துக்குறேன்’கைலியைத் தூக்கி கட்டியபடி ஓரக்கண்ணால் நாயரை முறைத்துப் பார்த்தபடி கையில் பேப்பருடன் நடையைக் கட்டினான் தனது அறைக்கு. கார்த்தியின் அறை நாயர் டீ கடைக்கு மேல் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தது. அறைக்கு சென்றவன் செய்தித்தாளைப் பார்த்து 2 முகவரிகளை குறித்துக் கொண்டான். கையோடு சென்று அப்ளை பண்ணினான். ஒரு வாரத்திற்குப் பிறகு இன்டர்வியூ கார்டு வந்தது. ஒன்று செவ்வாய் கிழமை மற்றொன்று புதன் கிழமை.செவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் நாயருடன் சண்டை போட்டு முடித்துவிட்டு வேகவேகமாக கிளம்பி இன்டர்வியூற்கு சென்றான். மூன்று பகுதியாக இன்டர்வியூ நடந்தது. முதல் பகுதியில் தேறி விட்டான். இரண்டாவது பகுதி சற்று கடினமாக இருந்தது. மிக கடினமாகப் போராடி எப்படியோ தேறிவிட்டான். மூன்றாவது பகுதி ஜெனரல் டாக்கிங். சொதப்பி எடுத்து விட்டான். அத்தனை பேர் முன் ஆங்கிலத்தில் பேச முடியாமல் திணறியது, அவமானமாகி விட்டது. வெளியேற்றப்பட்டான்.மாலை வேளையில் மனம் நொந்தவனாய் நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான்.‘என்ன கார்த்திக் தம்பி........ டீ ......ஓ சாரி டிக்காஷன் வேணுமா’கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றான். நாயர் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்,‘நாம் பேசா விட்டாலும் அவனாக வம்புக்கிழுப்பானே இன்னைக்கென்ன சோகமா போறான்’ நாயர் குழப்பத்துடன் அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்.சோகமாக உள்ளே சென்ற கார்த்திக் மறுநாள் காலை தான் வெளியே வந்தான்.‘நாயர் ஒரு டீ’‘என்ன கார்த்திக் நேத்து வேலைக்கு ஆள் எடுக்குறாங்கன்னு போனியே என்னாச்சு’ சிரித்துக் கொண்டே இயல்பாக கேட்டார்.‘என்ன நாயர் நீ சிரிச்சுக்கிட்டே கேக்குறத பாத்தா நான் இன்டர்வியூல செலக்ட் ஆகாம போனத நெனைச்சு ரொம்ப சந்தோஷபடுற போல இருக்கு’‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல’ என இழுத்தார்.‘சரி இந்தா டீயக் குடி’டீயை வாங்கி மெதுவாக உறிஞ்சினான்.‘என்ன நாயர் இன்னைக்கு டீயில எதாவது கலந்துட்டியா’‘ம், ஒரிஜினல் ஆரோக்கியா பால்ல போட்டது, ஒரிஜினல் டீ இப்படித்தான் இருக்கும்’‘என்ன நாயர் திடீர் கரிசணம்’‘அதெல்லாம் ஒண்ணுமி;ல்லே, நீயும் இன்டர்வியூ அது இதுன்னு போற, நாளைக்கே வேலை கிடைச்சுடுச்சுன்னா என் கடன் பாக்கிய செட்டில் பண்ணிடுவல்ல அதான்’‘ம்ம்ம்............ அப்படி சொல்லு சோழியன் குடுமி சும்மாவா ஆடும்’டீயைக் குடித்து விட்டு அடுத்த இன்டர்வியூவிற்குப் போனான், நம்பிக்கை குறைந்தவனாய் காணப்பட்டான். ‘நாம எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும் நடக்குறது தான் நடக்கும்’ மனதிற்குள்ளேயே கூறிக்கொண்டான். இன்டர்வியூ நடந்தது. ஒவ்வொரு சுற்றையும் சுமாராகத்தான் முடித்தான். மூன்றாவது சுற்றை முடித்து விட்டு வெளியே வந்தான். மனதெல்லாம வெறுமை அப்பியிருக்க பொடி நடையாக நடந்தே வந்தான். சோகமாக நாயர் கடையை கடந்து மாடிக்கு சென்றான்.3 நாட்களுக்குப் பிறகு, கார்த்திக்கிற்கு ஒரு போன்கால் வந்தது. புதன் அன்று நடந்த இன்டர்வியூவில் செலக்ட் பண்ணப்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் வந்து மேனேஜரை பார்க்கும்படியும் கூறப்பட்டது. கார்த்திக் துள்ளி குதித்தான். அந்த அபார்ட்மென்டில் உள்ள அனைவரிடமும் தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான். நண்பர்கள் அனைவரும் ட்ரீட் கேட்டார்கள். அவன் நிலைமை அனைவருக்கும் தெரியும். அட்லீஸ்ட் ஒரு டீ அது போதும் என்றார்கள். அனைவரையும் கூட்டிக் கொண்டு கீழே போனான்.நாயர் கடைக்கு எதிர்த்தாற் போல் ஒரு டீ கடை இருந்தது. நாயரை வெறுப்பேற்ற வேண்டுமென்றே அனைவரையும் அந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்றான். நாயரின் முகம் செத்துப் போனது. அந்தப் பக்கமாக ஒரு தெரு நாய் போய் கொண்டிருந்தது. வெறுப்பில் இருந்த நாயர் கொஞ்சம் தண்ணீரைப் பிடித்து அந்த நாயின் மேல் ஊற்றினார்.நாயை பார்த்து ‘இனிமே இந்த பக்கம் வந்தன்னா சுடுதண்ணியப் புடிச்சு மேல ஊத்திடுவேன் ஜாக்கிரதை’கார்த்திக் வேண்டுமென்றே சத்தமாக கத்தினான்.‘அண்ணே ஒரு ஏழு டீ போடுங்கண்ணே’நாயர் கடையில் டம் டும் என்று பாத்திரம் உருண்டது.இரண்டு நாட்களுக்கு முன் இளமாறன், நாயர் டீ கடைமுன் தனது டூ வீலரை பார்க் செய்தான்‘என்ன நாயர் நல்லா இருக்கிங்களா? பாத்து ரொம்ப நாளாச்சு’‘;அடடே இளமாறன் தம்பியா, நல்லாருக்கியாப்பா, பாத்து ரொம்ப நாளாச்சு, இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்க, ம், கல்யாணம் எதுவும் ஆயிடுச்சா ஆள் தடிச்சு போயிருக்க’‘உங்ககிட்ட சொல்லாமையாண்ணே’‘சரி இப்ப என்ன பண்ற’‘டி.சி.எஸ் ல ஹெச் ஆரா இருக்கேன்’‘அப்படீன்னா’‘அதெல்லாம் உங்களுக்கு புரியாதுண்ணே விடுங்க’‘எப்படியோ நல்லாருந்தா சரி’‘சரி ஒரு டீயப் போடுங்க’நாயர் இளமாறனுக்கென்று ஒரு ஸ்பெசல் டீயை போட்டார். அப்பொழுது கார்த்திக் சோகமாக மாடியிலிருந்து கீழே இறங்கி இன்டர்வியூ சென்று கொண்டிருந்தான். பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த நாயர் திரும்பி திரும்பி அவனையே பார்த்தார்.‘என்ன நாயர் அந்த பையனையேப் பாத்துக்கிட்டுருக்கிங்க’‘ஒண்ணுமில்ல நம்ம பையன் தான். பேரு கார்த்திக். மாடிலதான் குடியிருக்கான். எப்பவும் கலகலன்னு இருப்பான். என்னய சீண்டி பாக்கலண்ணா அவனுக்கு நிம்மதியாவே இருக்காது. இன்னைக்கு என்னமோ சோகமா போறான்’‘என்ன பிரச்சனைன்னு உங்களுக்குத் தெரியாதா?’‘அந்த பையன் ஊரவிட்டு வந்து நாலு மாசமா வேலை தேடிகிட்டு இருக்கான். ஒண்ணும் கை கூட மாட்டேங்குது. நேத்து கூட ஏதோ ஒரு பெரிய எடத்துக்குப் போய்ட்டு சோகமா வந்தான்’‘தம்பி நீ தான் ஏதோ பெரிய கம்பெனில வேலை பாக்குறல, அவனுக்கு எதாவது பாத்து செய்யேன்’இளமாறன் நேரத்தைப் பார்த்துவிட்டு எழுந்தான்.‘சரிண்ணே பாக்குறேன், அப்ப நான் கௌம்புறேன்’‘சரி தம்பி’இன்றுநாயரின் வெறுப்பிற்கு நடுவே டீ பார்ட்டீ கோலாகலமாக முடிந்தது. நாயரை வெறுப்பேற்றியதில் அனைவருக்கும் உள்ளுர மகிழ்ச்சி. அன்று முழுவதும் அறையில் ஒரே கூத்தும் கும்மாளமுமாக கழிந்தது. ரேடியோவில் பாட்டை சத்தமாக வைத்து கொண்டு நடனம் ஆடினார்கள். நாயர் கடையில் அக்பர் காலத்தில் அடிக்கப்பட்ட வெள்ளை சுண்ணாம்பிற்கு பின்னிருந்த காரை பெயர்ந்து விழ ஆரம்பித்தது. நாயர் தனது கோபத்தை எல்லாம் பாத்திரங்களின் மேல் காட்டிக்கொண்டிருந்தார்.இரண்டு நாட்களுக்குப் பிறகுகார்த்தி கையில் அப்பாய்ன்மென்ட் ஆர்டருடன் சோகமாக வந்து கொண்டிருந்தான். நண்பர்கள் ஆர்டரை வாங்கி ஆவலுடன் பார்த்தார்கள். அதில் 22 ஆயிரம் ருபாய் சம்பளம் போட்டிருந்தது. தட்டிக் கொடுத்தார்கள். கட்டிப்பிடித்து கொண்டாடினார்கள். வாழ்த்துக்கள் கூறினார்கள். நாயர் மேலே குதிக்கும் சத்தம் கேட்டு கீழிருந்து கத்தினார்.‘டேய் ரொம்ப குதிக்காதிங்கடா கீழே கடை இருக்குள்ள’ஒருவன் மேலிருந்து கத்தினான் ‘நாயர் ரொம்ப பேசுன உன் கடை டீய எடுத்து உன் வாயிலேயே ஊத்திடுவேன் ஜாக்கிரதை’‘டேய் டேய், காலைல டீ குடிக்க கீழ வருவதான, வா, டீல எலி மருந்த கலக்கி குடுக்குறேன்’‘நாயர் நீ குடுக்குற டீயே எலி மருந்து மாதிரி தான் இருக்கு, நீ ஏன் டீ கடைன்னு போர்டு போட்டிருக்க எலி மருந்து கடைன்னு மாத்திரலாம்ல’‘டேய் ராஸ்கல்களா யாருடா பல்லு மேல நாக்க போட்டு பேசுறது, அவ்ளோ ரோசம் இருந்தா கடன் பாக்கிய செட்டில் பண்ணிட்டு பேசுங்கடா, துச்சா பசங்களா’ நாயர் கோபத்தில் உறுமினார்.மணி 10 தொட்டது. நாயர் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். யாரோ டீ கேட்டார்கள்.‘நாயர் டீ’‘டீ யெல்லாம் முடிஞ்சு போச்சு சார்’ எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தார். கார்த்திக் உட்கார்ந்திருந்தான். நாயர் ஒன்றும் பேசவில்லை வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். பின் மனம் கேட்காமல் எழுந்து தனக்கு வைத்திருந்த பாலில் டீ போட்டு கொடுத்தார். கார்த்திக் அமைதியாக குடித்தான். அமைதியாக எழுந்து படியேறினான். பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த நாயர் பாதியில் எழுந்து வந்து ஆச்சர்யத்துடன் பார்த்தார் அமைதியாக செல்லும் கார்த்திக்கை.‘என்னாச்சு இவனுக்கு’ யோசனையாக வந்தவர், கார்த்திக் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு பைவ் ஸ்டார் சாக்கலேட் இருந்ததைப் பார்த்தார்.மெலிதாக சிரிப்பு வர அதை இடது கையால் எடுத்து பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்.- சூர்யா

ராகவன் உயிர் துறந்தான்

சாலையோர மேடையில் தூணில் சாய்ந்தபடி மேய்ந்து கொண்டிருந்த அந்த இரு கண்களுக்கும் சொந்தக்காரன் ராகவன். 35 வயதைக் கடந்திருந்த அவனது இளமை தனக்கு ஜோடி சேர்க்க ஒரு பெண்ணைத் தேடியது. பஸ்ஸ்டாப், தான் வேலை பார்க்கும் இடம், திருவிழா, பேருந்து நிலையம் போன்ற இடங்களிலெல்லாம் அவனது கண்கள் தன்னிச்சையாய் தேட ஆரம்பித்தது பெண்களை. தனது இரு தங்கைகளுக்குத் திருமணம் செய்யும் பகீரத போராட்டத்தில் 35 வயதைத் தொலைத்திருந்தான். வேலை, வேலை என ஓய்வில்லாத போராட்டத்தில் தொலைந்து போன வாழ்க்கையைத் தூசி தட்டிப் பார்க்க முயற்சித்தான். தனது பள்ளிக் கால சேட்டைகளை தனக்குள் அசைபோட்டு ரசித்துக் கொள்வான். கடந்த ஏழு வருடங்களாக வராத ஏக்கமும் எதிர்பார்ப்பும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது ராகவனை.

எந்தப் பேருந்தும் நிற்காத அந்த பேருந்து நிறுத்தத்தில், அந்த பேருந்து அன்று வந்து நின்றது. பயணிகளை வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்த 10 நொடி இடைவெளியில் அந்த ஜன்னலோரக் கன்னியின் கண்களை சந்தித்தான் ராகவன். 30 வயதைக் கடந்திருப்பாள் போல. ராகவன் விழிகளை விதைக்க ஆரம்பித்தான் அவள் கண்களில். கண்கள் கூச அவள் பார்த்த பார்வை அவனது வியர்வை சுரப்பிகளை உயிர்ப்பித்தது. குதித்தெழும்பிய குரல் நாண் வறண்ட தொண்டையை வருடியது. உறுமிய பேருந்து தனது உயிர்ப்பை நினைவூட்டியது. பெரிதாக உறுமிக் கொண்டு சென்ற பேருந்து கண்களை பிடுங்கிக் கொண்டு சென்றது கொத்தாக. ராகவன் கண்ணற்ற குருடனானான். விழிகளை தொலைத்தவன் வீதி வழியே வீட்டுக்கு நடந்தே சென்றான்.

கண்களை பிடுங்கிச் சென்ற கன்னியின் நினைவு, ராகவனின் ராத்தூக்கத்தை சாப்பிட்டது. ராகவன் சாப்பிடவில்லை. பசி வந்தால் பத்தும் பறந்து போகும், ஆனால் ஒரு பெண்ணின் நினைவு பசியையும் மறக்கச்செய்யும் என்பது எல்லோரும் உணர்ந்த, யாருக்கும் தெரியாத விஷயம். ஜன்னல் வழியே நிலாவை பார்த்துக் கொண்டிருந்தான். நிலாவில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலாவிலும் பஸ் ஓடியது அவளை சுமந்து கொண்டு. விடிய விடிய கனவு கண்டான் தூங்காமல். இவ்வளவு உற்சாகமான இரவு, இவ்வளவு வேகமான இரவு, அவன் வாழ்க்கையில் சந்திக்காத முதல் இரவு.

மறுநாள் அலுவலகத்தில் ராகவனால் வேலைகள் செய்யப்பட்டன. மதியம் ராகவனால் உணவு சாப்பிடப்பட்டது. அவன் ஒரு அஃறிணைப் பொருளானான். கண்களை இழந்த குருடன் கடமைகளைச் செய்தான். பெண்ணிச்சையில் தன்னிச்சையாய் செயல்பட்டான். என்ன வேலை செய்தான் என்றால் எதுவும் தெரியாது. மது அருந்தியவனைப் போல மயக்கத்தில், சாதுவைப் போல நித்திரையில் நினைவில்லாமல் மனத்தின் மிதப்பில், நினைவின் கதகதப்பில் மாலை வரை வேலை செய்தான். மாலை உயிர்ப்பித்தது அவனை. மாலை தூக்கம் கலைத்தது அவனை. மாலை தண்ணீர் தெளித்தது அவன் முகத்தில். நித்திரை கலைந்த அவன் நினைவில் அவள் முகம் அழைத்தது அவனை. மறைந்தான் அவ்விடம்.

அந்த பேருந்து நிறுத்தம் பக்தனின் தவப்பீடமாய் ஜொலித்தது. கண்கள் சுளுக்க ஒவ்வொரு பேருந்தாய் தேடினான் தேவதையை. பக்தனின் பரிதவிப்பு பன்மடங்காகியது. அவ்வளவு கூட்டத்திலும் அவளைக் காணும் ஆவல் அவளைக் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கை, தன்னம்பிக்கையின் வியாக்யானத்தில் விவேகானந்தருக்கு இரண்டாமிடம் தான். காத்திருப்பதின் வேதனையும் சுகமும், ஒட்டு மொத்த தாக்குதலை நடத்தியது. எரிமலைக் குழம்பு கடல் நீரில் கலப்பது போல, சுடவைத்து குளிரவைத்து, வேதனைப்படுத்தி, சுகப்படுத்தி வார்த்தெடுக்கப்பட்டான் காதல் ஜுரத்தில். உருக்குலைந்த இரும்புக் குழம்பு வார்ப்பைத் தேடியது உருப்பெற. சத்தமில்லாத புயல், ரத்தமில்லாத போர், இனிமையான கொலை, மென்மையான விபத்து அவன் சந்தித்த அழகான வேதனை, வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்தில். ராகவனின் ஒவ்வொரு செல்லிலும் ஆயிரம் ஊசிகள் குத்தி நின்றது மொத்தமாக.

அந்த கத்திக் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். பற்றி எரிந்தான். பாதம் தளர்ந்தான். அந்த கூர்மை ஆயுதம் கருத்தில் குத்திச் செருக இரத்தம் கசிந்தான் இனிமையாய். மற்றுமொரு தாக்குதல் கஜினியின் மகளோ இவள். இவள் கண்கள் தரும் காயம் புரிய வைப்பது பெண்ணின் வீரம்.

பார்வை நேரம் தொடர ஊர்ந்தது பேருந்து. அது எப்பொழுது காந்தமானது. இழுக்கப்பட்டான். ஈர்க்கப்பட்டான் ராகவன். இன்னொரு இரவை இவள் நினைவு கொல்லும். இன்னொரு இரவு இவனையும் கொன்றுவிடும். தற்காப்பு நடவடிக்கையாய் ஓடிச் சென்று தொற்றிக் கொண்டான் பேருந்தில். கூட்டத்தின் நடுவில் அந்தக் கண்களைத் தேடினான். கண்கள் கிடைத்தன கண்களுக்கு. திரும்பிப் பார்த்த அந்த இரு கண்களை அந்தப் பாலைவனத் தலை (சொட்டைத் தலை) மறைத்தது. இவள் கண்கள் பார்த்த திசையில் அந்த பாலைவனத்தின் கண்களும் திரும்பிப் பார்த்தன. அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள்.

ராகவனின் மண்டைக்குள் பலத்த சத்தம், மண்டைக்குள் இடி இடித்தது போன்றதொரு உணர்வு. "என்ன உரிமையாக தொட்டு பேசுகிறான், சொந்தக்காரனாக இருப்பானோ?" மண்டையில் முடி இல்லாத கிழவன் தந்தையாகத்தான் இருக்க முடியும். அந்த ஒரு நிமிடம் உலுக்கல் ஏற்பட்டது பேருந்துக்குள் இல்லை. ராகவனின் மனதுக்குள். மனதிற்குள் மாமனாருக்கு மரியாதை செலுத்தினான். இவ்வளவு அழகான மகளைப் பெற்ற மாமனாரின் மலர்ப் பாதங்களை ஒற்றி எடுத்தான் தனது இமைகளால். தன் காதலியின் தோள்களில் மாமனாரின் கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தான்.

பேருந்து பயணம் செய்த தூரம் தெரியவில்லை அவனுக்கு. அவர்கள் இறங்கிய அதே இடத்தில் அவனும் இறங்கினான். பின் தொடர்ந்தான். தெருக்களும், சந்துகளும் கடந்து போயின. அந்த தெரு முனையில் தரையிலமர்ந்து மல்லிகைப் பூவை முழ‌ம் போட்டுக் கொண்டிருந்த பூக்காரியிடம் நின்றார்கள். அந்தப் பாலைவனம் பைக்குள் கையை விட்டு சிறிது பணத்தை எண்ணிக் கொடுத்து அரை முழப் பூவை அள‌ந்து வாங்கியது. ராகவனின் இதழில் புன்சிரிப்பு.

"அடுத்த வருடம் நான் வாங்கிக் கொடுப்பேன்"

கண்களை சிமிட்டிக் கொண்டான். பூவை வாங்கிய பாலைவனம், மேகம் போன்ற அவளது அழகிய கூந்தலில் கையோடு சேர்த்து பூவை திணித்தது. ராகவனின் நெஞ்சை பிளந்து சென்ற அந்த பீரங்கிக் குண்டு முதுகு வழியாக சென்றது. இருப்பினும் தன்னைத் தேற்றிக் கொண்டான். இன்னும் ஐம்பது சதவீதம் உயிர் இருந்தது அவன் உடலில். கண்களில் இன்னும் கண்ணீர் வரவில்லை.

தனது இருண்ட கண்களின் வழியாக ராகவன் பார்த்தான். அந்த பாலைவனம் தத்தி தத்தி தளர் நடையில், அவளது இடைபிடித்து நடந்து சென்றது. என்னதான் தந்தையாக இருந்தாலும், பெற்ற மகளின் இடைபிடிப்பானா? கேள்விக் கணைகள் நெஞ்சை துளைக்க, களையிழந்த முகத்தில் தெளிவை வரவழைத்துக் கொண்டு முகம் சுளிக்க பின் தொடர்ந்தான். அந்த பெரிய வீட்டின் முன் நாய் குரைக்கும் சத்தத்தைத் தொடர்ந்து வேலைக்காரனின் வரவேற்பில் உள்ளே நுழைந்தார்கள் இருவரும்.

அப்போது அப்பா என்று கத்திக் கொண்டு ஒரு குழந்தை ஓடி வந்து அந்தக் கிழவனை கட்டிப்பிடித்துக் கொண்டது. ராகவன் தனது சகிப்புத் தன்மையின் உதவியோடு சகித்துக் கொண்டான். இந்த வயதில் அந்தப் பாலைவனத்துக்கு ஒரு குழந்தையா? தன் காதலிக்கு ஒரு தங்கச்சியா? தனக்கு ஒரு மைத்துனி இருக்கிறாள், அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் பொறுத்துக் கொண்டான்.

கிளைமாக்ஸ்

அந்த குழந்தை வேகவேகமா அந்த கிழவரை விட்டு கீழே இறங்கியது. ஓடிச்சென்று அந்த பெண்ணின் கைகளுக்குள் தஞ்சம் அடைந்தது. அந்தக் குழந்தை தனது கொஞ்சும் மழலைக் குரலில் கேட்டது.

"அம்மா அம்மா எனக்கு சாக்கலேட் வாங்கிட்டு வந்திங்களா"

ராகவன் உயிர் துறந்தான்.

- சூர்யா
நன்றி கீற்று

Tuesday, June 22, 2010

தமிழ் மொழியும் சினிமாவும்

தமிழ்நாட்டில் அதிகமாக தவறு செய்த ஒரு அரசியல்வாதியை உயிருடன் எமதூதர்கள் மேலுலகுக்கு அழைத்து செல்கின்றனர். விசாரணை நாள் வந்தது. எமன் தனது அரியனையில் கம்பீரத்தடன் அமர்கிறார்.

"ம் இன்று என்ன வழக்கு"

சித்ரகுப்தன் தலைதாழ்ந்து பவ்யமாக கூறுகிறார்.

"எமதர்மரே, இதோ இந்த மனிதன், தமிழ் மொழியை காக்கிறேன் என்ற பெயரில் பல தவறுகளை செய்துவிட்டான்"

"என்னென்ன தவறுகளை செய்திருக்கிறான்"

"98 சினிமா பேனர்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன, 120 கட்அவுட்கள் சாய்க்கப்பட்டுள்ளன, 14 சினிமா திரைகள் பிளேடு போடப்பட்டுள்ளன"

"பிளேடு என்றால் என்ன சித்ரகுப்தா"

"அது ஒரு கூரிய ஆயுதம் அரசே"

"சரி மேலும் கூறு"

"22 சினிமா தயாரிப்பாளர்கள் கடத்தப்பட்டனர், சினிமா எதிர்ப்புp பேரணிகள் என்ற பெயரில் டிராபிக் செய்ததில் 2 கர்ப்பிணிப் வெண்கள் உயிரை விட்டுள்ளனர் மற்றும் கலவர நேரங்களில் 8 ஆண்கள் உயிரை விட்டுள்ளனர்
"நிறுத்து சித்ரகுப்தா, என்ன எல்லாம் சினிமா சினிமா என்றே வருகிறது. தமிழ் மொழிக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது சித்ரகுப்தா"

“அரசே அதை நான் இவரிடம் பலமுறை கேட்டுவிட்டேன். ஒவ்வொரு முறையும் என்னை குழப்புகிறார். என்னை குழப்பிய வகையில் எழுத்து வேலை பெண்டிங் நிறைய உள்ளது. ஆகவே தாங்கள் இந்த வழக்கில் நேரடியாக ஆஜராகி உடனடி முடிவெடுத்து தண்டனை வழங்க வேண்டும்.”

"சரி இன்றிலிருந்து இந்த மனிதன் சுத்தமான தமிழ் மொழியிலேயே பேச வேண்டும். மாற்று மொழியை உபயோகித்துப் பேசினால், எண்ணெய் சட்டியில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடு"

"உங்கள் கட்டளை அரசே"

அரசியல்வாதியை எமதூதர்கள் பூமிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர்.
அரசியல்வாதி நேராக தன் வீட்டுக்குச் சென்றார். ஒரு கத்தியை எடுத்து தனது நாக்கை வெட்டிக் கொண்டார்.

-சூர்யா

நன்றி கீற்று

ஆணாதிக்கம்

சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்து விட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கத்தின் படி அது உண்மைதான் என்று என்னால் குத்துமதிப்பாக கூற முடியும். இறந்து போன அந்த மனிதருடன் எப்படி நான் விவாதம் செய்து உறுதி செய்து கொள்வது. விவாதத்திற்குரிய அந்த உருவம் மிகுந்த சிரமத்தின் பேரில் முயற்சி செய்து கொண்டிருந்தது. அதன் முயற்சி என்னை பயமுறுத்துவதற்காக என்பது இறுதியில் தான் எனக்குத் தெரிய வந்தது. அது தனது வாயை 180 டிகிரிக்கு கோணலாக்கி வக்கனை காட்டியது. பின் தன் விழிகளை வெளியே கொண்டு வந்து காட்டி மிரட்டியது. பின் தனது நாக்கை ஒரு மீட்டர் அளவிற்கு வெளியே கொண்டு வந்து என்னைப் பார்த்தது. நான் ஏதோ சிந்தனையில் இருப்பது போல் தோன்றியதோ என்னவோ அது வெறுத்துப் போய்விட்டது.

என்மேல் அந்த உருவத்துக்கு கடும் கோபம் வந்து விட்டது போல. என்னை ஏதோ ஒரு மொழியில் திட்டிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டது. பயந்துபோன நான் அதைத் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தி தயவு செய்து என்னை விட்டு போய் விடாதே என்று கெஞ்சினேன். எனக்கு இன்னும் சிறிது சந்தோசம் தேவையாய் இருக்கிறது. தயவு செய்து என்னை விட்டு போய்விடாதே என்று கெஞ்சினேன். அது முறைத்து பார்த்து விட்டு தமிழில் பேசியது. நான் ஒரு பேய். நான் உன்னை பயம் கொள்ளச் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நீ என்னை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய். என்கிற செய்திகளை வரிசையாய் சொன்னது. நான் அந்தப் பேயிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

நான் அதனிடம் இவ்வாறு கூறினேன். 'தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ முதலிலேயே என்னிடம் இந்த விஷயத்தை கூறியிருக்க வேண்டும், ஏனென்றால்..... ஏனென்றால் ...........இதைவிட பயங்கரமான சில செயல்பாடுகளை எல்லாம் நான் தினசரி சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நிகழ்வுகளோடு ஒப்பிடுகையில் நீ ஒரு சின்னக் குழந்தை. உன்னைப் பார்த்து நான் ரசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் உன்னிடம் பயமுறுத்தக்கூடிய அளவுக்கு ஒன்றுமே இல்லை. பயமுறுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீ விரும்பினால் நீ ஒரு பெண்ணை சந்திக்க வேண்டும். அவள் வேறு யாரும் அல்ல. என் மனைவிதான் அவள். அவளை மட்டும் நீ சந்திப்பாயேயானால் நீ புரிந்து கொள்வாய். நீ ஒன்றுமேயில்லை என்பதை அவளோடு ஒப்பிடுகையில் நீ ஒரு குழந்தை."

அந்த பேயின் கண்களில் நான் கண்ணீரைக் கண்டேன். அது பரிதாபமாக நடந்து சென்றதை பார்த்த போது பாரதிராஜா படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பின்னணி இசை ஒலித்தது. ஆம் அந்த இசையை கேட்டு தான் பயந்துபோய் விழித்துக் கொண்டேன். அதிர்ந்து போன நான் அப்பொதே கடவுளிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். "கடவுளே அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதானால் 3000 வாட்ஸ் மின்சாரத்தை என்மேல் பாய்ச்சு நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அறிவுகெட்டத்தனமாக இது போன்ற அதிர்ச்சிகளை மட்டும் கொடுக்காதே" என்று.

உணர்ச்சி வசப்பட்டு அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டேன். அவர் எனது வக்கீல் தனசேகரன். அவர் எதார்த்தமாக கூறிய அந்த வார்த்தைகளை கேட்ட போது எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி தோன்றிவிட்டதை போன்றதொரு எண்ணம் ஏற்பட்டது. அவர் கூறினார் உங்களுக்கு என்னால் டைவர்ஸ் வாங்கித்தர முடியும் என்று. ஆபத்பாண்டவன் என்று எழுதி அதன் அருகில் ஈக்வல் டூ என்று போட்டால், நான் யோசிக்காமல் அதன் பக்கத்தில் எழுதிவிடுவேன் திரு.தனசேகரனின் பெயரை. அவர் என்னைக் காக்க வந்த மெசையா என்றே கருத வேண்டியிருந்தது. அவருக்காகத்தான் நான் இவ்வளவு நாளும் காத்துக் கொண்டிருந்தேனோ என்னவோ. அவர் என்னை கடைந்தேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்குள் தோன்றி விட்டது. அவர் கூறினார். "நான் கொடுக்கும் வெள்ளைக் காகிதத்தில் உங்கள் மனைவியின் கையெழுத்தை எழுதி வாங்கி வந்துவிட்டீர்களேயானால் அது போதும் உங்கள் டைவர்சுக்கு"

என்வாழ்வின் பொற்காலம் தொடங்கப்போகிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா. என் மனைவி ஒரு வாரத்திற்கு அவளது அம்மா வீட்டிற்கு சென்றிருப்பதை போல் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஆனால் இந்த இடைப்பட்ட காலங்களில் என்னைப் பாதுகாப்பதற்குரிய தற்காப்பு விஷயங்களை குறித்து விவாதித்துவிட்டு (சுமார் 4 மணி நேரம்) சென்றேன்.

ஏன் இவ்வளவு சலிப்படைந்தேன். அவள் வாயை திறந்தால் மூடுவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் எடுத்துக் கொள்கிறாள். அவ்வளவு நீண்டதொரு உரையை கேட்கும் தர்மசங்கடமான நிலைமை நிச்சயமாக ஒரு தண்டனைதான் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. குற்றம் குறை கண்டுபிடிப்பதில் அவள் கைதேர்ந்தவள். இவ்வளவு நுணுக்கமாக குறை கண்டுபிடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். எனது அலுவலக எம்.டி. கூட திருவோடு ஏந்தி பிச்சை எடுக்க வேண்டும், குறை கண்டுபிடித்தல் என்ற விஷயத்தில். அவருடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு வேகமும் விவேகமும் என் மனைவியிடம் உண்டு.

திருமணமான புதிதில் அவளை எனது இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு இந்த உலகத்தையே சுற்றினேன் ( நின்ற இடத்திலேயே ஒரு முழு சுற்று ). ஆனால் இப்பொழுது அவ்வாறு நான் செய்ய வேண்டுமேயானால் நான் எனது கைகளை இழக்க வேண்டி வரும் அல்லது ஏதேனும் மிகப்பெரிய விபத்துக்கு உள்ளாகக் கூடும். அந்த எடை பார்க்கும் மிஷினில் அன்று நான் பார்த்தேன். அவள் ஏறி நின்றது தான் தாமதம், அந்த முள் மின்னல் வேகத்தில் சுற்றி எண் 90 ஐக் காட்டியது. நான் பயப்படுவதெல்லாம் இதற்குத்தான். அவள் இப்பொழுதெல்லாம் கோபம் அதிகமானால் தனது கைகளை முறுக்கி காண்பிக்கிறாள். அன்று நான் டிஸ்கவரி சேனலில் இந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. 90 கிலோ எடையுள்ள கரடி தனது வலிமையான கைகளால் ஒரு மனிதனை தாக்கும் போது அவனது தாடை எலும்புகள் நொறுங்கி விடுமாம். என் தாடை எலும்புகள் நொறுங்கிப்போனால் நான் எப்படி வெள்ளைப்பணியாரம் சாப்பிடுவது என்றுதான் எனக்குப் புரியவில்லை.

கணவனை எந்த இந்திய மனைவியும் கைநீட்டி அடிப்பதில்லை என்று யாராவது கூறினால் தயவு செய்து நம்பிவிடாதீர்கள். அதோடு என்னைப்பொறுத்த வரை இது நகைச்சுவையான விஷயமும் இல்லை. அவள் அடுத்த ஜென்மத்தில் ஒரு குத்துச்சண்டை வீரனாகத்தான் பிறப்பாள் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமே இல்லை. அதற்கு இந்த ஜென்மத்திலேயே தனது பயிற்சியை ஆரம்பித்து விட்டாள். ஆனால் நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் என்றுதான் தெரியவில்லை. அவளது பயிற்சிக்குரிய பொருளாக கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்ததில் கடுமையான உள்நோக்கம் இருந்திருக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயம். ஆனால் இந்த விஷயத்தில் நிச்சயமாக நேர்மை இல்லை. போன ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு இந்த ஜென்மத்தில் கொடுமைகளை அனுபவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். அவர் மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால் இதுகுறித்து வழக்கு தொடரலாம்.

அழகு தேவதையாக மனைவி இருக்க குரங்கு போன்ற மற்றொரு பெண்ணை தேடும் அல்பத்தனமான ஆண்களின் வரிசையில் என்னை நிச்சயமாக சேர்க்க முடியாது. ஏனெனில் நான் ரசித்தது நடிகை நயன்தாராவை. எப்படி முடியும் ரசிக்காமல் இருக்க. நானும் மனதளவில் நேர்மையாக இருக்க எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன். ரசிக்காமல் இருக்க முடியவில்லை. என் மனைவி என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் (சண்டையிட்டுக் கொண்டிருக்கும்) வேளையில் என்முகத்தில் ஒளி வீசுகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்தான். அவர் இயல்பாக என்னை ஆக்கிரமித்து விட்டார். இந்த கொடூரமான ஒப்புதலுக்காக மன்னிக்கக் கூடிய அளவுக்கு மனம் உடையவர்களுக்கு மன்னிப்பதற்குரிய வாய்ப்புகள் தாராளாமாக அளிக்கப்படுகிறது. சுருக்கமாக மன்னித்து விடுங்கள்.....

இவை எல்லாவற்றையும் விட ஒரு மறைக்கப்பட்ட விஷயத்தை இப்பொழுது உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இருங்கள் இருமுறை எச்சிலை விழுங்கிக் கொள்கிறேன். எனது தொண்டை வறண்டுவிட்டது. அவர் ஒரு (அதாவது என் மனைவி)..... அவர் ஒரு...... (என் கால்கள் நடுங்குவதால் நான் ஒரு தொடைநடுங்கி என்ற முடிவுக்கு யாரும் வந்து விட வேண்டாம்).... அவர் ஒரு..... முற்போக்கு எழுத்தாளர்.

அவரது மொழியாற்றலை பார்த்து மயங்கித்தான் அவரை மணந்து கொண்டேன். அவரால் அழகான காதல் மொழிகளை மட்டுமே பேச முடியும் என்று நான் நம்பியது, எனக்கு கடவுளால் விரிக்கப்பட்ட வலை என்று இப்பொழுதுதான் தெரிகிறது. அதில் சிரித்துக் கொண்டே போய் விழுந்து விட்டேன் என்பதை பற்றி நினைத்துப் பார்க்கும் பொழுது, கடவுளே உம்மைக் கொலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அந்த குழுவில் நானும் ஒரு ஆளாக இருப்பேன் என்பதை இப்பொழுதே பதிவு செய்ய விரும்புகிறேன். திருமணத்திற்கு முன் என் தந்தையின் பேரின் முதல் எழுத்தை இனிஷியலாக போட்டுக் கொண்டேன். ஆனால் இப்பொழுது எனது வாய்ப்புகள் பறிக்கப்பட்டு விட்டன. எனது மகனின் பெயருக்கு முன்னாள் எனது மனைவியின் முதல் எழுத்துதான் இனிஷியலாக உள்ளது. குறைந்த பட்சம் இரண்டாவது எழுத்தாக எனது இனிஷியலை சேர்க்க்க் கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை கண்ணீரும் , கம்பலையுமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் கேட்கிறார். "ஏன் இந்த ஆணாதிக்க சமூகம் திருமணத்திற்கு பிறகு மனைவியின் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக சேர்த்துக் கொள்ளக் கூடாது" நல்ல வேளை நயன்தாரா மட்டும் இல்லையென்றால் யார் என் கண்ணீரை துடைத்திருப்பார்கள் அன்று ஏற்பட்ட கனவில். மன்னிக்கும் குணமுடையோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பொதுவாக எல்லா ஆண்களுக்கும் ஏற்படும் ஆசைதான் எனக்கும் ஏற்பட்டது. என் மனைவிக்கு ஆசையாக (வெகு நாட்களுக்குப் பிறகு சமாதான முயற்சியாக) ஒரு சேலை என்னால் வாங்கிக் கொடுக்கப்பட்டது. அதில் ஆணாதிக்கம் ஒளிந்திருக்கும் என்பதை நான் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவில்லை. சுமாராக 90 கிலோ எடை கொண்ட அவரது உடல் எடைக்கு ஆண்கள் அணியும் சட்டை, பேண்ட் அவ்வளவு நன்றாக இல்லை என்பதை என்னால் நினைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. அதைப்பற்றி விவாதிப்பதற்கு எல்லாம் ஒரு முரட்டுத் துணிச்சல் வேண்டும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அன்றிலிருந்து சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் எங்கள் தெரு முக்கு கடையைச் சேர்ந்த ஆடை தைக்கும் தொழிலாளி. அவர் நினைத்திருக்கலாம் தான் ஒரு கூடாரம் தைக்கும் தொழிலாளி இல்லை என்று. ஆனால் வருமானம் என்று வந்துவிட்டால் இந்தியத் தொழிலாளர்கள் எதற்கும் துணிந்து விடுகிறார்கள்

எனக்கு கடவுள் நம்பிக்கையில் கடுமையான குளறுபடிகள் இருப்பினும், ஒரு விஷயத்தை கண்டிப்பாக நம்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அவர்தான் சக்தி வாய்ந்த சனி பகவான். பிரபலமான அந்த ஜோஸியர்தான் இந்த நம்பிக்கைக்கு காரணம். பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் அவர் தோன்றுவார். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் சனி பகவான் பீடிப்பார் என்ற அவரது நீண்ட உரையைக் கேட்டு குழம்பிப் (நியாயமாக பயந்து) போன நான், என் வாயில் அமர்ந்திருக்கும் சனிபகவான் குறித்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். அவர் என் நாவின் மூலமாக இவ்வாறு பேசிவிட்டார். அது வீட்டு வேலை செய்வதைப் பற்றியதாக இருந்தது

என்னால் பேசப்பட்டது இதுதான். "இந்தியப் பெண்களுக்கு வீட்டு வேலை செய்வது என்பது ஆகச் சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது. உனது (என் மனைவியை ரொமான்சாக பார்த்து) உடல் எடை குறைய முயற்சி செய்து பார்க்கலாமே" ஆம், அந்த என் கடைசி ரொமான்ஸ் பார்வை குறித்து இன்றும் என்னால் நினைவு கூற முடியும். ஆனால் எனக்கு என்னவோ அந்த துணிகளை துவைப்பதுதான் மிகுந்த சிரமமாக உள்ளது. எனது உடல் எடை ஏற்கனவே குறைந்துதான் இருக்கிறது என்பதை என் மனைவியிடம் நான் எப்படி நிரூபிப்பது என்று எனக்கு புரியவே இல்லை. நடிகை நயன்தாரா நன்றாக மீன் உணவு சமைப்பார் என்று ஒரு பேட்டியில் கூறியதை நினைத்துப் பார்க்கையில் என்னால் என் கனவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் என் மனைவிக்கு மீன் உணவு சமைக்கும் பொழுதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன் என்று நயனுக்கு எழுதிய கடிதத்தை அவர் படித்திருப்பாரா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சிறப்பான கண்டுபிடிப்பை உலகுக்கு எடுத்துரைக்க ஆசைப்படுகிறேன். சப்பாத்தி மாவு பிசையும் போது நமது ஆர்ம்ஸ்கள் முறுக்கேறும் என்பதை ஜிம்முக்கு செல்லும் இளைஞர்களுக்கு கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது சேலையை அடித்து துவைப்பதை விட கடுமையான உடற்பயிற்சி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நான் மறைமுகமாக ரகசியமாக, யாருக்கும் தெரியாமல் பெருமை கொள்ளத்தக்க ஒரு விஷயமும் உண்டு, அவரது கழுத்தில் பல்வேறு அணிகலன்களுக்கு மத்தியில், என்னால் ஒரு காலத்தில் அணிவிக்கப்பட்ட திருமாங்கல்யமும் இருப்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது பெருமிதத்தில் கண்கள் கலங்கி விடுகின்றன. இந்தியப் பெண்கள் அணிகலன்கள் மீது வைத்திருக்கும் ஆசையை நான் ஆதரிக்கிறேன். சவரனுக்கு 12 ஆயிரம் ரூபாய் செலவானால்தான் என்ன?. மனைவிக்கு ஒருசவரனில் நகை வாங்கிக் கொடுக்காதவன் மனிதனே இல்லை. ஒரு வேளை அந்த அணிகலன் திருமாங்கல்யமாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகள் எப்பொழுதும் நம்பிக்கையை தருகின்றன என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.

ஒருமுறை அவரால் எழுதப்பட்ட கவிதை ஒன்று எனக்கு படித்துப் பார்க்க கொடுக்கப்பட்டது. அதை அவரே விரும்பி கொடுத்தார் என்பதை அவரது இன்முகம் உணர்த்தியது. நான் மதிக்கப்படுவது என்றாவது ஒருநாள் நடக்கும் விஷயம். எனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் இவ்வாறு சொல்லிக் கொள்ளலாம். நான் நீந்திக்கொண்டிருந்தேன் மகிழ்ச்சிக் கடலில். ஆனால் என்னுடைய ஒருமணி நேர முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயம் என்னை கவ்விக் கொண்டது. அந்த ஒருபக்க கவிதை இவ்வளவு கடினமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த கடவுளுக்கு எனக்கு சோதனை அளிப்பதே வேலையாக போய்விட்டது. இருப்பினும் நான் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். "கடவுளே எனக்கு புரிய வைத்துவிடு, தயவு செய்து என்னைக் காப்பாற்று"

என்னை காப்பாற்ற அவரால் முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு நான் எப்படி கொடுப்பது. அவர் வழக்கமாக என்ன செய்வார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். கைவிட்டுவிடுவார், ஆனால் இந்த முறை அவரை சபிக்கத் தோன்றவில்லை. காரணம் அவராலும் இக்கவிதையை புரிந்து கொண்டிருக்க முடியாது. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கொட்டிய வியர்வையை துடைத்தபடி அமர்ந்தேன். எது நடக்கக் கூடாது என்று பயந்து நடுங்குவேனோ அதுதான் வழக்கமாக நடக்கும். விதிப்படி அவ்வாறே நடந்தது. கவிதையை பற்றிய கருத்து கணிப்பு கேட்கப்பட்டது. நன்றாக இருக்கிறது என்று கூறினால் எங்கு அதைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்து விடுவாரோ என்கிற பயத்தில், சுமாராக இருப்பதாக கூறிவிட்டேன். ஆனால் இந்த ஆணாதிக்க உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கோபம் எனக்கே வந்துவிட்டது. அவர்கள் பெண்களின் கலை உணர்ச்சியை, அறிவு மேம்பாட்டை மதிப்பதே இல்லை. அவர்கள் சுயநலவாதிகள். அவர்கள் ஆக்கிரமிப்புவாதிகள்...

ஆனால் ஒன்றின் மீது எனக்கு அபார நம்பிக்கை வந்துவிட்டது. ஏழரை நாட்டு சனி என்பதெல்லாம் உண்மையில்லை, பொய், ஏமாற்றுவேலை என்று என் முன்வந்து யாரும் கூறிவிடாதீர்கள், சனிபகவான் வாழ்க. எவ்வளவுதான் வாழ்க்கையில் எதிர்வினைகள் இருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாச்சார விதிமட்டும் கடைபிடிக்கப்படாமல் இருந்திருக்குமேயானால் குடும்ப அமைப்பு என்கிற ஒன்று சிதைந்தே போயிருக்கும். அடிமனதில் ஒரு பயம் இருந்து கொண்டுதானிருக்கிறது பிரிந்து விடக்கூடாது என்பதில். இதற்கு காரணம் கலாச்சாரம் இல்லை என்று கூறிவிட முடியாது.

ஆனால் என் மனைவியை ஏமாற்றி கையெழுத்து வாங்கிய விவாகரத்து காகிதத்தை கிழித்தெறிய நினைத்ததற்கு மற்றொரு குரூரமான காரணமும் உண்டு. எனக்கு மாமியார், மருமகள் சண்டையில் என்றுமே அபார நம்பிக்கை உண்டு. எனது மகனுக்கும் என்றாவது ஒருநாள் திருமணம் நடக்கும். இரு பெண்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சண்டையிடப் போவதை நான் பார்க்கத்தான் போகிறேன். என் மனைவி அன்று ஒரு பெண்ணாதிக்கத்தை எதிர்த்து போராடப் போகிறார். அதில் தன் சொந்த ஆதிக்கத்திற்கான இவ்வளவு நாள் நியாயமற்ற போராட்டம் அப்பட்டமாக வெளிப்படப்போகிறது. அன்று ஆணாதிக்கம் என்பது ஒரு சாக்காக பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது யாராலும் கவனிக்கப்படாமல் நிரூபணமாகப் போகிறது. அன்று எல்லோருக்கும் இயல்பாக உள்ள ஆதிக்க மனப்பான்மை உணரப்படப் போகிறது. என்ன இருந்தாலும் என் மனைவி எனக்கு அழகுதான். அதில் எவ்வித சந்தேகமும் எனக்கில்லை.

- சூர்யா
ljsurya@gmail.com

நன்றி கீற்று, திண்ணை

Thursday, June 3, 2010

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை

குபுகுபுவென சூடான ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வெளியேறியபோது கத்தியானது பாதி தலையைத்தான் வெட்டியிருந்தது. கால்கள் இரண்டும் வெடுக்வெடுக்கென இழுத்துக் கொண்டன. இதயம் இன்னும் நிற்கவில்லை என்றுதான் தோன்றியது. நான் சற்று அருகில் சென்று கவனித்தபோது அவன் இதயத்துடிப்பை நன்றாக கேட்கமுடிந்தது. நான் உறுதியாகக் கூறுவேன் அவனுக்கு இது சாக வேண்டிய வயதே இல்லை. அவன் இன்னும் சிறிது காலம் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் வாழ்ந்திருப்பான். யாரைக் கேட்டாலும் தயங்காமல் கூறுவார்கள் அவன் பரம சாது என்று. அவனால் யாரும் இதுவரை தொந்தரவு அடைந்ததேயில்லை. அவன் பயந்த சுபாவம் வேறு. யாராலும் நிச்சயமாக அவனை எதிரியாக நினைக்க முடியாது. எல்லாவற்றிலும் கொடுமை அவனால் பேசக்கூட முடியாது.

அவனது உடல் துடித்துக் கொண்டிருந்தது. மெதுமெதுவாக அந்த துடிப்பு குறைந்து கொண்டிருந்தது. எனக்கு புரிந்துவிட்டது அவனது உயிர் போய்க் கொண்டிருந்தது. என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. எல்லாம் கனவு போல் இருந்தது. நான் நன்றாக புரிந்து கொண்டுவிட்டேன். இங்கு கருணை செத்துவிட்டது. நீதியும் கூட. இங்கு உயிருக்கு மரியாதையே கிடையாது. ஒரு உயிர் கொல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ளவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுற்றி நின்றிருப்பவர்களின் மனதில் சற்று கூட, வருத்தமோ, பாவ உணர்ச்சியோ இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் நிற்கிறார்கள்......... பார்க்கிறார்கள்......... அவ்வளவுதான் தெரிகிறது.
அது என்னவிதமான உணர்ச்சி என்றுகூட புரியவில்லை. சிலைகள் போல் கைகளை கட்டிக்கொண்டு நிற்பது அவ்வளவு எளிதான விஷயமாக அவர்களுக்கு எப்படி தோன்றுகிறது. அவர்கள் அனைவரும் ஒன்று போலவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தான் பயி;ற்சி பெற்றிருக்கிறார்கள் போல.

நான் கடைசியாக எதிர்பார்த்ததும், நம்பியதும் ஒரு ஆம்புலன்சைத்தான். நான் பலமுறை சாலை நெரிசலில் மாட்டிக்கொண்டு நிற்கும் ஆம்புலன்சை பார்த்திருக்கிறேன். தலையில் சிவப்பு விளக்கை சுற்றியபடி அநாதையாய் கத்திக் கொண்டு நிற்கும். அருகில் நிற்பவன் கூட இதை சட்டை செய்யமாட்டான். அவன் குறைந்தபட்சம் தனது காதுகளை பொத்திக் கொள்ளாமல் நிற்பது குறித்து நாம் சந்தோஷம் அவடைந்து கொள்ள வேண்டியதுதான். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு விஷயம் உறுதிபட்டுவிட்டது. ஒரு ஆம்புலன்ஸ் தனது அவசரச் சத்தத்தின் மரியாதையை இழந்துவிட்டது. அந்த சத்தம் தனது பொருளை இழந்துவிட்டது. அச்சத்தத்திற்கு பெரிதாக அலட்டிக்கொள்வது என்பது பைத்தியக்காரனின் செயலுக்கு ஒப்பானதாக மாறிவிட்டது.

இனி பிரயோஜனமில்லை. உயிர் போகும் பொழுது ஏற்படும் கடைசி 3 துடிப்பை பற்றி நானறிவேன். ஆம் மெதுவாக ஒரு துடிப்பு......... அதை விட மெதுவாக மற்றொரு துடிப்பு........ கடைசியாக கால்களும், உடலும் ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டன. ஆனால் வெளியே விடப்படவில்லை. வெளிவிடப்பட்டது எனது கண்ணீர்தான். உயிர் மொத்தமாக அடங்கிப் போனது. மனம் வலித்தது.

உண்மையில் மனவலியைபற்றி சொல்ல முடியாது. அது அவ்வளவு ஆழமான உணர்வு. மனம் வலிக்க ஆரம்பித்தவுடன் உடல் 2 மடங்கு எடை அடைந்து விடுகிறது. கண்ணீரைப் பற்றி சொல்வதென்றால் அது நிற்பதாகத் தெரியவில்லை. நான் எனது வீட்டின்அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு அன்று முழுவதும் அழுதேன்.

25 வருடங்களுக்குப் பிறகு... ஒரு ஞயிற்றுக் கிழமை காலை.

எனது 6 வயது பையன் இன்று கதவை தாழிட்டுக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.

நான் செய்த தவறுகள் இவைதான்.

அவன் ஆசைப்பட்டானே என்று ஒரு ஆட்டுக் குட்டியை வளர்ப்பதற்கு அவனை அனுமதித்திருக்கக் கூடாது. அல்லது அவன் செல்ல நண்பனைப் போல் வளர்த்த அந்த ஆட்டுக் குட்டியை பிரியாணி செய்வதற்காக வெட்டியிருக்கக் கூடாது. அல்லது அவ்வாறு பிரியாணி செய்துவிட்டு அவனை சாப்பிட அழைத்திருக்கக் கூடாது. 25 வருடங்களுக்கு முன் நான் வெறுமனே அழுது கொண்டிருக்கும் செயலை மட்டுமே செய்தேன். ஆனால் எனது பையன் அவ்வாறு இல்லை. சாப்பிட அழைத்தது தான் தாமதம், அறைக்குள்ளிருந்த விலையுயர்ந்த எல்.சி.டி. டி.வி உடைபடும் சத்தம் கேட்டது. கூடவே சேர்ந்து எனது இதயம் உடைபடும் சத்தமும் சின்னதாகக் கேட்டது. ஏனெனில் அந்த டி.வியின் விலை 34 ஆயிரத்து 999 ரூபாய்.

20 வருடங்களுக்குப் பிறகு கூட எந்த விதமான ஹெசிடேசனும் இல்லாமல் என்னால் ஒரு மட்டன் பிரியாணியை சாப்பிட முடியவில்லை என்பதை நினைத்துப் பார்க்கையில்..................................ஏற்கனவே உடைந்த இதயம் வேறு என்னதான் செய்யும்.

(ஒரு இதயம் இரண்டாவது முறை உடைபடுவது என்பது சாத்தியம் அல்ல)
நன்றி கீற்று

கடைசித் தகவல்


மென்மையாக உரசிச் சென்றது காற்று. கன்னக் கதுப்புகளில் பட்டுச் சென்றது காற்றா பட்டுத் துணியா என்று கேட்டால் முடிவெடுக்க முடியாமல் குழம்பிப் போவான் அவன். அப்படியொரு மென்மை, தலைமுடிகளுக்குள் அந்த தென்றல் புகுந்து விளையாடும் பொழுது அவனுக்குத் தோன்றியது இதுதான். அது நிச்சயமாக தேவதையின் கைகளாகத்தான் இருக்க வேண்டும். அது மட்டும் அருவமாக இல்லாவிட்டால். அதனுடன் கைகோர்த்துக் கொண்டு விளையாடுவான். என்னவொரு இனிமையான மணம் அது. எங்கிருந்து வீசுகிறது அது. உலகின் அத்தனை மலர்களையும் சேர்த்து வைத்து, தேர்ந்த அறிஞனால் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியம் கூட இந்த இனிமையான வாசனைக்கு முன் இரண்டடி தள்ளிதான் நிற்க வேண்டும். அவனது சுவாசம் பெற்ற பேற்றுக்கு ஈடிணையேயில்லை. அவன் ஏதோ ஒரு நதிக்கரையோரமாக படுத்திருப்பதை உணர முடிந்தது. தண்ணீரின் சலசலப்பு இனிமையான சங்கீதத்தை பிறப்பித்துக் கொண்டிருந்தது. அதனுள் தனது ஒற்றைக்கையை ஏதேச்சையாக மூழ்க விட்டான். என்ன ஆச்சரியம், அந்த தண்ணீர் ஒரு உருவற்ற ஊடகமாக அவன் கையை உள்வாங்கியது. அது மின்னியது.
அந்த கடினமான கேள்வி அவன் உள்ளத்தில் திடீரென உருவெடுத்தது. இந்த ஆற்றில் உருண்டோடுவது தண்ணீரா? இல்லை உருக்கி ஊற்றப்பட்ட வெள்ளிக் குழம்பா? ஆனால் இதைப்பற்றி யோசிப்பதற்கெல்லாம் இப்பொழுது நேரமில்லை. அவள் வரும் நேரமாகிவிட்டது. அவன் பொறுப்பற்று இவ்வாறு விளையாடுவதை மட்டும் அவள் கண்டு விட்டால் செல்லமாக கோபித்துக் கொள்வாள். அந்த செல்ல முறுவலை காண இரண்டு கண்களை மட்டும் கொடுத்த அந்த கடவுளை சபித்தால் தான் என்ன? எனத் தோன்றுவது அவனுக்கு இயல்புதான்.
அவள் அந்த வெள்ளை நிற ஆடையில்தான் எவ்வளவு அழகாக இருப்பாள். அவள் வருவதைப் பார்க்கும் பொழுது நடந்து வருகிறாளா அல்லது மிதந்து வருகிறாளா என்று கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தால், மீண்டும் குழப்பம் தான் மிஞ்சுகிறது. ஆனால் நிச்சயமாக அவளுக்கு கால்கள் உண்டு. அதில் அவள் 2 தங்கக் காலணிகள் அணிந்திருப்பதை அவன் பலமுறை பார்த்திருக்கிறானே? அவளது இடையை பார்க்கும் பொழுது............ ஓ கடவுளே! அதைச்செய்த உன் கைகளுக்கு தங்க காப்புதான் வாங்கிப் போட வேண்டும் என சங்கேத மொழியில் தனக்குள் கூறிக்கொள்வான்.
அதென்ன அன்ன நடை, ஏ, அன்னங்களே தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள். இனி அவள் நடைதான் உங்களுக்கு முன்னுதாரணம் என நதிக்கரையோரத்தில் முகாமிட்டிருந்த அன்னங்களைப் பார்த்து அவன் கூறியபொழுது, அந்த அன்னங்கள் தங்களது முகத்தை வெடுக்கொன திருப்பிக் கொண்டன பொறாமை மிகுதியால்.
அவள் சிரித்தாள். உலகில் உள்ள ஏழைகளுக்கெல்லாம் விடிவு காலம் பிறந்தவிட்ட நாள் அன்றுதான். ஆம், அவள் சிரிப்பில் இருந்து உதிர்ந்தது அத்தனையும் தங்கக் காசுகள், ஏழைகளின் கைகள் தான் எவ்வளவு சிறியது. அதை அவர்களால் அல்ல முடியவில்லை. அவர்களுக்குத் தேவை பைகள். அந்த தங்க காசுகளில் மூழ்கி அவர்களுக்கு மூச்சு முட்டியது. புத்தர் அவர்கள் முன் தோன்றி கூறிக் கொண்டிருந்தார்
‘அதிகமாக ஆசைப்படாதீர்கள் ஆளுக்கு ஒரு கை அள்ளிக் கொள்ளுங்கள் போதும்”
யார்தான் கேட்டார்கள்.அவள் தரையிலிருந்து நான்கு அங்குல உயரத்தில் தவழ்ந்து வந்து. அவனது கைகளை பற்றினாள். அவன் உடல் முழுவதும் ரத்தமானது இரு மடங்கு வேகத்துடன் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. அவளது கைகளை எடுத்து கன்னங்களில் வைத்துக் கொண்டான். திடீரென கண்கள் சொருகி சொர்க்கத்தின் வாசல் அவன் கண்களுக்கு தெரிந்தது. இருவரும் அதன் வழியாகச் சென்றார்கள். அவளுடன் பயணம் செய்ததால் தூரம், நேரம் இரண்டும் தெரியவில்லை. சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையோரமாக ஐன்ஸ்டீன் (ஆம் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தான்) ஒரு குறிப்பு அட்டையை கையில் பிடித்தபடி நின்றிருந்தார். அதில் சார்பு விதி எழுதப்பட்டிருந்தது. அவன் கவனம் திசை திரும்புவதை கவனித்த அவள், இரண்டு விரல்களால் அவனது கன்னங்களை லேசாகக் கிள்ளினாள். அவ்வளவுதான், அவனது கண்களுக்கு இப்பொழுது சொர்க்கவாசலானது இன்னும் முரட்டுத் தெளிவுடன் தெரிய ஆரம்பித்தது.
இதோ அவனது மாளிகை வந்துவிட்டது. இதென்ன கண்ணாடி மாளிகையா என்று அவன் கேட்ட பொழுது அவள் கூறினாள், அது வைரம் என்று. ஆச்சரியத்தில் அகல அகல விரிப்பதால் கண்கள் தன் அளவை பெரிதாக்கிக் கொள்ளுமா என்ன? அவள் சிரித்துக்கொண்டே அவள் தலையில் செல்லமாகத் தட்டினாள். மண்டையில் பட்டது திடப்பொருளா, திரவப்பொருளா என்ற சிந்தனை வேறு இப்பொழுது வந்து தொலைய வேண்டுமா என்று அவன் சலித்துக் கொண்டான்.
மாளிகைக்குள் அவன் நுழையும் முன் இடது காலை எடுத்து வைக்கச் சென்றவன் சற்று தடுமாறி பதறியபடி வலது காலை எடுத்து வைத்தான். அதை பார்த்துவிட்ட அவள் குறும்பாகச் சிரித்தாள். இப்படியே இன்னும் இரண்டு முறை அவள் சிரிப்பாளேயானால் அவனது இறப்பு நிச்சயிக்கப்பட்டதாக மாறிவிடும் என்பதில் எள் அளவும் அவனுக்கு சந்தேகமில்லை.அவன் அந்த மாளிகையை பிரமிப்புடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தொல்லைபடுத்தும் சிந்தனை அவனுக்குள் இந்த சூழ்நிலைக்கு சம்பந்தமேயில்லாத கேள்வியை கேட்டது. அது ஏன் ஆச்சரியப்படும் பொழுதெல்லாம் நாம் லோ ஆங்கிளில் இருந்தபடி அண்ணாந்து பார்த்தக் கொண்டிருக்கிறோம். ஏன் கீழே குனிந்து பார்த்தால் ஆச்சரியம் தோன்றாதா? அவன் வெடுக்கொன்று தரையை குனிந்து பார்த்தான். அந்த தரையில் அவள் முகம் பிரதிபலித்தது. என்ன ஆச்சரியம் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு. அவன் பிரமிப்பிலேயே இருந்தான். பிரமிப்பு உணர்விலேயே எவ்வளவு நேரம் ஒரு மனிதன் தாக்குபிடிப்பான். அதன் விளைவுகள் ஒரு மனித உடலில் எப்படிப்பட்ட் மாற்றங்களை ஏற்படுத்தும் போன்ற விஞ்ஞான குறிப்புக்களை எல்லாம் எழுதி வைத்து அதற்கு பேடண்ட் உரிமை வாங்கிக் கொள்ளலாம் என்று அவனுக்குத் தோன்றியது.
திடீரென அவனது கன்னங்களில் ஓங்கி ஒரு அரை விழுந்தது. அவனது கன்னங்களை அறைந்தது அவனது இடது கைதான். ‘ராஸ்கல் ஒரு அழகான பெண்ணை காக்க வைத்துவிட்டு அப்படி என்ன சிந்தனை வேண்டி கிடக்கிறது’ என்று அவன் உள் மனம் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் கூனி குறுகி நின்றிருந்தான்.அவள் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் சிரிப்பைப் பார்த்த பொழுது, துணிக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் தான் ஞாபகத்திற்கு வந்தது. அவைகள் தங்களது புன்னகையை நிறுத்துவதேயில்லை. அவளும் அப்படிதான். அவள் அவனது கைகளை பிடித்து கொண்டு, அவனை இழுத்தபடி ஆவேசமாக ஓட ஆரம்பித்தாள். ஒட்டு மொத்த மாளிகையையும் அவன் ஓடிக்கொண்டே சுற்றிப் பார்த்தான். சிறிது நேரத்தில் அவனுக்கு தலை சுற்றியது. இருப்பினும் அதைக் கூறி அவள் மனதை அவன் புண்படுத்த விரும்பவில்லை.வேகவேகமாக ஓடி, ஓடிபின் தொப்பொன்று ஒரு வெல்வெட் துணியால் நேர்த்தியாக தைக்கப்பட்ட, அழகிய பூ வேலைபாடுகளுடன் கூடிய இளவம் பஞ்சு பொதியில் விழுந்தான். நிதானித்துப் பார்த்த பொழுதுதான் தெரிந்தது அது அவளது படுக்கை அறை. அவனது உதடுகளுக்கிடையிலிருந்து வெளிப்பட்ட மெலிதான புன்னகையில் சிறிது காமம் தெரிந்தது. இருப்பினும் ஒரு இந்திய துணைவி, துணைவனுடன் கூடுவதற்கு முன் தனது காமத்தைப் பச்சையாக அறிவித்து விடாமல், தேக்கிக் கொண்டு, துணைவனுக்கு உணவளித்து திருப்தி செய்வாளே என்ற எண்ணம் லேசாக அவன் மனதில் உதித்தது. அதை எப்படி அவள் புரிந்து கொண்டாள்? அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் அவனை விட்டுவிலகி எங்கோ சென்றாள். பின் தன் கையில் ஒரு வெள்ளி கப்புடன் வந்தாள். அதில் வந்த வாசனை முகர்ந்து பார்த்தபின் நிச்சயித்துக் கொண்டான். அது நிச்சயமாக பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை அரைத்து கரைத்த பால் என்று.
கடைசியாக அவன் பார்த்த தமிழ் படத்தில் சரோஜாதேவி, நடிகர் திலகம் சிவாஜி கணேஷனுக்கு இது போன்றதொரு பாலை கொடுத்ததாகத்தான் நியாபகம்.பின் சௌகர்யமாக படுத்துக் கொண்டான் அந்த படுக்கையில். அந்த மாளிகை எந்த விதமான ஒளியால் நிரப்பப் பட்டிருக்கிறது என்பது புரியவில்லை. இவ்வளவு ரம்மியமான ஒளிக்கு சொந்தக்காரன் நிச்சயமாக நிலவாகத்தான் இருக்க வேண்டும். தனது நன்றியை நிலாவுக்கு சத்தம் போட்டுக் கூறினான்.அவள் உள்ளறைக்குள்ளிருந்து, மெலிதான வெல்வெட் ஆடையால் போர்த்தப்பட்டு வெளிப்பட்டாள். அவளை பார்க்கும் பொழுது டைட்டானிக் படத்தில் வரும் நடிகை கேட் வின்ஸ்லெட்டை போல் இருந்தாள். திடீரென அந்த மாளிகை கடலில் மிதக்கும் கப்பலைப் போல் அப்படியும் இப்படியுமாக ஆட ஆரம்பித்தது.
அவள் தனது வெல்வெட் ஆடையை நழுவவிட்டாள். அவனது கண்கள் நிலைகுத்தி நின்றன. அந்த நிலையிலும், அவனது சூழ்நிலை சம்பந்தமற்ற சிந்தனையானது இப்படி ஒரு குறுஞ்சிரிப்பை அவனுக்குள் உதிர்த்தது. அது... நல்ல வேளை தான் படம் வரைந்து நேரத்தை வீணாக்கப் போவதில்லை என்பது தான். ஏனெனில் அவனது உள் மனதுக்கு நன்றாகத் தெரியும், தான் படம் வரைந்தால் பெண்ணானவள் பேயை போல் தெரிவாள் என்று.அவள் அருகே வந்தாள். மேலும் அருகே, மேலும் மேலும் அருகே அவள் நாசித்துவாரத்திலிருந்து வெப்பமான மூச்சுக் காற்று வேகமாக வெளிவந்து கொண்டிருந்தது. அவன் அவளது கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டான் குறுக்காக. அவள் திமிறினாள்.
லேசாக தனது ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்தான்......... ஐயோ,....... அவளது பற்கள் ஏன் இவ்வளவு நீண்டு கோரமாக இருக்கின்றன. மேலும் அவள் உறுமிக் கொண்டு வேறு இருந்தாள். அவளுடைய காதுகள், அது ஒரு நாயின் காதுகளைப் போல நீண்டு இருந்தன. அவள் திடீரென திமிறியபடி குலைக்க ஆரம்பித்தாள்.
ஐயோ அது நாயே தான். அவன் படுக்கையிலிருந்து பொத்தென்று கீழே விழுந்தான்.அவன் விழுந்த பகுதி கருப்பான, அடர்த்தியான, மேலும் குடலை வயிற்றுக்குள்ளிருந்து வெளிக் கொண்டு வந்துவிடும் அளவிற்கு நாற்றமெடுத்த ஒரு வகை திரவம், அதை தமிழ் மொழியாம் நமது தாய் மொழியில் சாக்கடை என்று கூறுவார்கள்.
நிச்சயித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், நிச்சயமாக அவன் கட்டாயப்படுத்தி கற்பழிக்க முயன்றது ஒரு நாயைத்தான். மேலும் ஒரு தகவல் அவன் விழுந்த பகுதி சென்னைப் பட்டனத்தின் புகழ் பரப்பும் கூவம் நதிக்கரையோரம் என்பது. பின் அந்த கடைசித் தகவல்......... ஆம் அவன் கனவு கலைந்தது.
பின் குறிப்புகள்
* அவன் பெயர் பிரபு, வயது ௨௪
* சென்னை பட்டனம் அவனைக் காண்பது இதுவே முதல் முறை. அவன் கிண்டி ரயில் நிலையத்தின் அருகில் நின்று கொண்டு, குறைவான உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானங்களை ஒரு 5 மணிநேரம் ஆச்சரியம் அகலாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் விமானங்களை இவ்வளவு அருகில் பார்ப்பது இதுவே முதல் முறை. அதனால் அவன் சென்னை மக்களால் ஆச்சரியமாக பார்க்கப்பட்டான்.
* அவன் விமானங்களைப் பார்த்த ஆச்சரியம் நீங்காமல் கீழே குனிந்து பாhத்தபொழுது, யாரோ ஒரு சகோதரன் அவனது பெட்டியை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. வெகுநேர மன வேதனைக்குப் பின் இப்படியொரு முடிவுக்கு வந்தான். அடுத்த முறை ஊரிலிருந்து 3000 ரூபாய் திருடிக் கொண்டு வந்தால் அதை சத்தியமாக பெட்டிக்குள் மட்டும் வைக்கக் கூடாது என்று.
* நல்லவேளை பேருந்து கட்டணம் போக மீதி பணத்தை சட்டை பாக்கெட்டில்தான் வைத்திருந்தான். அதில் 120 ரூபாயும் சிறிது சில்லரையும் தேறும். அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பாடு கிடைக்கும் இடம் தேடி 7 உணவகங்கள் ஏறி இறங்கினான். கடைசியாக அந்த எட்டாவது கடையில், அ;ங்கு அவன் தின்ற தீனி இருக்கிறதே, முழுதாக 50 நிமிடங்கள். கடைக்காரன் அவனை அடையாளம் பார்த்து வைத்துக் கொண்டான்.
* உண்டு முடித்ததும் அவன் நினைவுக்கு வந்தது மெரீனா பீச்தான். கிண்டியில் தொடங்கியது பாதயாத்திரை. உயரமான கட்டடங்களையும், அரைகுறை உடையுடன் கண்ணுக்குக் குளிர்ச்சியாக குறுக்கும், நெடுக்குமாக செல்லும் அழகான பெண்களையும் பார்த்தபடி அடுத்த 3 மணி நேரத்தில் விசாரித்தபடி வந்தடைந்தான் மெரீனாவை. வெகுநேரம் கடலில் இறங்கி குளித்தபின் சந்தோஷமாக தனது உடைகளை மாட்டிக் கொண்டு, தலை சீவியபடி அந்த வழியாக சென்ற ஒருவரை நிறுத்திக் கேட்டான்.‘என்ன இந்த பகுதியில் ஏதோ கெட்ட வாடை அடிக்கிறது”‘அது வேற ஒண்ணுமில்ல தம்பி, பக்கத்துலதான் கூவம் நதி வந்து கலக்குது”ஆனால் இந்த கேள்வி ஏன் ஒரு 2 மணி நேரத்துக்கு முன் தனக்கு தோன்றவில்லை. நொந்து கொண்டுதான் என்ன பிரயோஜனம். தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் சீப்பை வைத்த பொழுதுதான் தெரிந்தது. மீதி இருந்த 54 ரூபாய் 75 பைசாவையும் யாரோ ஒரு அன்பு சகோதரன் எடுத்து சென்றுவிட்டிருப்பது. அந்த அன்பு சகோதரர் தான் எவ்வளவு நல்லவர். அவர் அந்த சட்டையை வைத்துவிட்டு சென்றுவிட்டாரே. நல்லவேலை கூச்ச சுபாவத்தில் போட்டிருந்த கால்சட்டையை கழற்றாமல் குளித்ததுதான் எவ்வளவு பாதுகாப்பான விஷயம்.
* நடிகை அசின் வீட்டை தேடி அலைந்ததில் இரவாகிவிட்டது. ஆம் அவன் அசினை உயிருக்குயிராக காதலித்துக்கொண்டிருந்தான். அந்த விஷயத்தில் அவனுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அசினுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை.
* அசின் வீட்டுக்கு அட்ரஸ் கேட்டு 10, 15 பேரிடம் வாங்கிய திட்டுக்களுடன் மனம் சோர்ந்தவனாய் அவன் வந்து சேர்ந்த இடம் சரவணா ஸ்டோர். அங்கு நுழைவு வாயிலில் ஒரு அழகான புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதை தடவி பார்த்து ரசித்தான். சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்கைளப் பற்றி கேட்ட பொழுது ஏன் யாரும் சரவணா ஸ்டோரை பற்றி சொல்லவில்லை என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான். அங்கு அவ்வளவு அழகான பெண்கள் இருக்க அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் பொம்மையை வெகு நேரமாக சைட் அடித்துக் கொண்டிருந்தான். அந்த பொம்மை பார்ப்பதற்கு அசினைப் போலவே இருந்தது. கடையை மூடும் நேரம் வந்துவிட்டதால் அவன் வெளியேற்றப்பட்டான்.
* பொடிநடையாக கிண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனது நம்பிக்கையெல்லாம். ஒரு லாரி ஓட்டுநரின் கருணை மிகுந்த உள்ளம் தான். இந்த காலத்தில் மந்திரிகளே காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். தனக்கென்ன, ஒரு வயதான லாரி ஓட்டுநரின் காலில் விழுந்துவிட வேண்டியது தான். தன்னை ஊரில் சென்று சேர்த்துவிடும் படி கதறிவிட வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்தான்.
* நாள் முழுவதும் அலைந்ததில், உடல் முழுவதும் சோர்வடைந்து தூக்க கலக்கத்தில் அவன் கடைசியாக வந்து சேர்ந்த இடம், காசி தியேட்டரை அடுத்த மேம்பாலத்தின் அடிப்பகுதி. அதன் வழியாகத்தான் கூவம் நதி ஓடிக்கொண்டிருந்தது. இல்லை அதை பார்க்கும் பொழுது ஓடிக் கொண்டிருப்பதைப் போல் தோன்றவில்லை. நாற்றத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு சுமாரான இடத்தை தேர்ந்தெடுத்து தூங்க ஆரம்பித்தான். அருகில் ஒரு நாய் படுத்துக் கொண்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த கவனிப்பு அவன் தூக்கத்தைக் கெடுப்பது போல் உணரவே அந்த பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டான்.
* கனவில் வந்த அந்த பெண் கூட அசினைப் போலவே தோற்றமளித்தாள். இன்னொரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்த பொழுது, நடிகை கஜோலை போலத் தெரிந்தாள். அவன் 2 வருடங்களுக்கு முன் நடிகை கஜோலைத்தான் காதலித்துக் கொண்டிருந்தான். பின் அந்த மின்சாரக் கனவு படத்தை 10 தடவைக்கு மேல் ஒருவனால் பார்க்க முடியுமானால் அதற்கு காரணம் கஜோலைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.
கொடுமை என்னவெனில், மிகக் கொடூரமாக சண்டையிட்டு வந்த தன் தந்தையின் முன் போய் அசிங்கமாக தலையை தொங்க விட்டபடி நிற்க வேண்டும். அவர்தான் எவ்வளவு சந்தோஷப்படுவார். சென்னையில்தான் நாயுடன் படுத்திருந்ததையும், கூவத்தில் தவறி விழுந்ததையும் மட்டும் மறந்தும் கூறிவிடக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான். ஆனால் அவன் தந்தைக்கென்ன தெரியாமாலா போய்விடும். பின் அவன் திருடிச் சென்ற பணத்திற்கு லீமெரிடியன் ஹோட்டலிலா தங்க முடியும்? ஆனால் அவன் உள்மனம் நிஜமான நேர்மையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. அவள்........ அந்த பெண் அசின்........ ஐயோ ‘என்னை புரிந்து கொள் அசின்......... யாரையும் அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டு விடாதே’. நானும் எத்தனை முறைதான் சபிப்பது. சென்ற முறை நான் சபித்ததை மட்டும் அந்த பாவி அஜய்தேவ்கான் கேட்டிருந்தால் என்னை துரத்தி துரத்தி அல்லவா சுட்டுக் கொன்றிருப்பான்.
நன்றி கீற்று