Saturday, April 3, 2010

நண்பர்கள்


‘சார் வாட் டு யு வாண்ட் சார்”

இரண்டு காபியை பேரரிடம் ஆர்டர் செய்து விட்டு மீண்டும் தனது சோகமான பார்வைக்கு பின்னே போய் ஒளிந்து கொண்டான் சிவா (சிவச்சந்திரன்). ஆதரவாக ஒரு நண்பன் இல்லையென்றால் சோகத்தை கடக்க வழியேது, எதிரே கார்த்திக் அமர்ந்திருந்தான், அந்த ரெஸ்டாரெண்ட் மாலை மங்கிய வேலையில் மெலிதாக இசையை கசியவிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் ஆழமான சோகமான மௌனம் கலையும் முன் அவர்களைப்பற்றி சிறிது தெரிந்து கொள்வது அவசியம்,

கார்த்திக், சிவா, இருவரும் சென்னை கல்லூரித் தோழர்கள், பொதுவாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் இருவகையினர் இருப்பார்கள். கேலி, கலாட்டா சைட் அடிப்பது, சினிமா, சிகரெட், கல்யாணி - ஹாட், சொக்கலால் - 555, இதற்கு நடுவில் சிறிது படிப்பு, இது ஒரு வகை, முதல் வகை, பெரும்பாலும் மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இன்னொரு வகையினர் இருக்கிறார்கள், பிரம்மாவால் அவசரத்தில் படைத்து தூக்கியெறியபட்ட இமயமலை சாமியார் தவறி போய் சென்னையில் பிறந்து விட்டால்???, அப்படி ஒரு வகையினர் கார்த்திக்கிற்கு இது வரை பீர் வாசனை எப்படி இருக்கும் என்பது கூட தெரியாது. புகை என்றால் அலர்ஜி, அதிலும் சிகரெட் புகை ஏழாம் பொருத்தம், பெண்கள் கிழக்கிலிருந்தால் இவன் மேற்கே, மகாத்மா காந்தியின் சத்தியசோதனை படித்ததிலிருந்து புலால் உண்பதை நிறுத்திவிட்டான், வாய் நிறைய வெத்தலையை போட்டு குதப்பி கொண்டிருப்பவர்களைப் பார்த்தால், இதுதான் தோன்றும் அவனுக்கு ‘எப்படி வாந்தி எடுக்காமல் இருக்கிறார்கள்@”, அதனால் இப்படி சொல்லிக்கொள்ளலாம், கார்த்திக்கிற்கு வெத்தலை பாக்கு பழக்கம் கூட கிடையாது ரொம்ப நல்லவன்,

பின் என்னதான் செய்வான், எதில் தான் திருப்தியுறுகிறான், சின்ன சின்ன திருப்தியுறுதலுக்கு விதிவிலக்காக யாரேனும் இருக்க முடியுமா என்ன? நிறைய புக்ஸ் படிப்பான் , சரியாக சொல்வதென்றால் அவன் புத்தகங்களின் மூலம் இன்னொரு உலகை சிருஷ்டித்து வைத்திருந்தான், அவ்வப்பொழுது இக உலகத்திற்கு வந்து போவான், பெற்றோர்கள் கூட பயந்தார்கள், இவன் ஏன் மற்ற மாணவர்களை போல் இயல்பாய் இல்லை, சிறு வயதிலேயே சோகையாக பிறந்து விட்டான், பொதுவாக குழந்தைகளால் பெற்றவர்களுக்கு இம்சைதான், ஆனால் கார்த்திக்கின் விஷயத்தில் அப்படியில்லை, சில மாட்டை தார்குச்சியை வைத்து குத்தினாலும் நகராது, ஏதோ நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் யோகியைப் போல,

இயற்கையில் பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது, எதிர்எதிர் குணம் படைத்தவர்களுக்கு இடையேதான் நல்ல நட்பு மலர்கிறது, ஒருவரையொருவர் ஆச்சர்யபடத்தக்க வகையில் மதிக்கிறார்கள், தங்களிடம் இல்லாத அக்குணங்களை மதித்தல் என்னும் செயல் மூலமாக நிறைவு செய்யப்பார்க்கிறார்களோ என்னவோ, சிவாவும் , கார்த்திக்கும் கல்லூரி காலங்களிலிருந்து இன்றுவரை நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

ரெஸ்டாரெண்டில் இன்று

முள் தாடி , புன்னகை தொலைந்து போன உதடுகள், வெடித்து போய் பாலம் பாலமாய் கண்கள் சிவந்து போய், தலையெல்லாம் கலைந்து போய், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் நிச்சயமாக மறந்து போயும் இப்படி மட்டும் இருக்க மாட்டான், சிவா ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், அப்படி என்ன சோகம் அவனை பீடித்து விட்டது என்கிற கேள்வி எழுமானால், ஒரே வார்த்தையில் கூறுகிறேன் அவனுக்கு திருமணமாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது, பஸ்ட் வெட்டிங் அனிவர்சரி, ஆனால் கையில் காபியுடன் , முகத்தில் தாடியுடன், மனைவி இருக்க வேண்டிய இடத்தில் நண்பன் கார்த்திக்குடன்,

‘ போன மாசம் வரை எங்களுக்குள்ள ஒரு மனஸ்தாபம் கூட வந்தது கிடையாது தெரியுமா போன 3 ஆம் தேதி, அன்னகை;குத்தான், ஆரம்பிச்சா, பேயாட்டம் ஆடுறா”

‘நீ அவள காதலிக்குறியா”

‘யெஸ் ஐ ஸ்டில் லவ் ஹர்”

‘என்ன பிரச்சனை”

‘அன்னைக்கு அவள கோவிலுக்கு கூட்டிப் போனேன், அங்க ரேவதி வந்துருந்தா”

‘ரேவதி???”‘அதாண்டா வாத்துக்கு கைகால் முளைச்சமாதிரி இருப்பால்ல, பக்கத்து கிளாஸ்ல, மஞ்சள் புடவை கட்டிகிட்டு வருவாளே அடிக்கடி”

‘நீ கூட லவ் லெட்டர் குடுத்தப்ப, அழகா சதுர சதுரம்மா கிழிச்சு கைல கொடுத்தான்னு சொன்னியே அவளா?” கிண்டலுடன் கேட்டான் கார்த்திக்,

‘அவதான்.........அவள பாத்து ரெண்டு வார்த்தை பேசினேன் , அன்னைக்கு ஆரம்பிச்சது சனி, நிம்மதியே போச்சுடா, டெய்லி விருந்து சாப்பிட்டுகிட்டு இருந்தேன், இப்போ ஒரு மாசமா பட்டினி”

‘நீ சந்தியாகிட்ட (சந்தியா சிவாவின் மனைவி) , ரேவதி மஞசள் புடவைல தேவதை மாதிரி இருப்பான்னு சொன்னியா?”

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு

‘உனக்கெப்படி தெரியும்”

‘என்கிட்டயே ரெண்டாயிரம் தடவையாவது பொலம்பியிருப்பியேடா...........இன்னும் என்னவெல்லாம் வருணிச்சயோ,

”இல்லடா அந்த டிபன் பாக்ஸ் மேட்டர விளையாட்டா சொன்னேன்”

தiலியலடித்துக் கொண்டான் கார்த்திக்,

‘டேய், நீ தாணடா சொல்வ, பொண்டாட்டிகிட்ட நேர்மையா பொய் கலப்பில்லாம நடந்துகிட்டா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு”

‘அது தப்புன்னு எனக்கு நேர்ந்த அநுபவத்திலிருந்து என்னைக்கோ புரிஞ்சுகிட்டேன்”

‘என்னடா சொல்ற , காயத்ரியுமா”

தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் கார்த்திக்,

இந்த காயத்திரி , கார்த்திக்கின் மனைவி, இரண்டரை வருடங்களுக்கு முன்னதாகவே கார்த்திக்கின் மணவாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது, இந்த விஷயத்தில் கார்த்திக் சீனியர், மனைவியிடம் எதைச்சொல்ல வேண்டும், சொல்லக்கூடாது, மறைக்க வேண்டியவை, கூடாதவை , அநுபவம் நிறைய கற்றுக் கொடுத்துவிட்டது, ஆனால் எல்லாம் கண்கெட்ட பின் சூரிய நமஷ்காரம் தான் ஆம், கார்த்திக்-காயத்திரி ஒரு வருடத்திற்கு முன் டிவோர்ஸ் அப்ளை செய்திருந்தார்கள், இன்றுடன் கெடு முடிந்து , சட்டப்படி விவாகரத்தாகி பிரிந்து விட்டார்கள் , நேராக கோர்ட்டிலிருந்து நண்பனை பார்க்க வந்திருந்தான், தன் வழி தொட்டு பின் வரும் தன் நண்பனை பார்க்கும் பொழுது, ஒரு நகைச் சுவையின் ஆரம்பத்துள் நுழைவது போல் இருந்தது,

பல சமயங்களில் கவனித்திருக்க கூடிய விஷயம்தான் இது, பொரும்பாலும் ஊமைக்கோட்டானைப் போல அமைதியாக, ஒன்றும் தெரியாத பாப்பாவை நினைவுபடுத்துபவர்கள் தான் முதலில் காதல் வலையில் விழுகிறார்கள், அதுவும் உங்க வீட்டு காதல் எங்க வீட்டு காதல் அல்ல, தெய்வீக காதல், ஒரு சைக்கோவை போல செல்பிஸ்நெஸ்சுடன், இவர்களைப் போன்றவர்கள் காதலித்தால் ஆபத்து நண்பர்களுக்குத்;தான், எங்காவது ஓடிவிடவேண்டும், இல்லையென்றால் செத்தோம், காதலை காதலியிடம் சொல்லமாட்டார்கள் வருடக்கணக்காக, ஆனால் , சொல்ல முடியவில்லையே என்று வருத்தப் படுவார்கள், காதலி வேறு யாருடனாவது அருகருகே அமர்ந்தபடி வண்டியில் செல்வதை பார்த்துவிட்டால் அவ்வளவுதான் அடுத்த ஒரு மாதம் புலம்பித்தள்ளுவார்கள். எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் கேடயமாக நண்பனைத்தான் பயன்படுத்துவார்கள், அது காதல் கடிதம் கொடுப்பதாக இருந்தாலும் சரி, மாலை வேளையில் பெண்கள் கல்லூரி வாசலில் காத்திருந்து பார்ப்பதாயிருந்தாலும் சரி,

கார்த்திக் - காயத்திரி காதலுக்கு பாலமாய் இருந்து பல்வேறு சுமைகளை சுமந்தவன் சிவா, கார்த்திக்கும் சில வீரபராக்ரம செயல்களையும் முரட்டுக் கோபத்துடன் செய்திருக்கிறான் , வேறு ஒன்றுமில்லை, ஒரு காதல் கடிதத்தை எழுதி அவள் கையில் கொடுக்காமல் அவள் முகவரிக்கு போஸ்ட் செய்துவிட்டான் (ஸ்டாம்ப் ஒட்டாமல்) கடிதம் காயத்திரியின் தந்தை கான்ஸ்டபிள் கந்தசாமியிடம் கிடைக்க, முதல் அறையை காயத்திரி வாங்கிக் கொண்டாள், பொறி கலங்கி போனவளுக்கு முதன் முறையாக விளங்கியது ஒரு முட்டாள் தன் பின்னே ஒண்ணரை வருடமாக சுத்திக்கொண்டிருப்பது, ஆர்வம் அதிகமானது அவனை பார்க்க வேண்டுமென்று, நேரம் கடந்து தன் முட்டாள் தனத்தை புரிந்து கொண்டான் கார்த்திக், வரப்போகும் பிரச்சனையை எதிர்கொள்ள தயாராயிருந்தாலும் சிவாவின் வற்புறுத்தலின் பேரில் மறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது, கான்ஸ்டபிள் கந்தசாமி சரியான கடுப்பிலிருந்தார், வலைவீசி தேடிக் கொண்டிருந்தார், கையில் கிடைத்தால் கைமாதான்,

எத்தனை நாள் தான் மறைவு வாழ்க்கை வாழ்வது, காதலி கைமாறி விட்டால் , நிலைமை மோசமாகிவிடும். யோசனை முற்றி போக ஒரு முடிவுக்கு வந்தவனாய் கிளம்பினான் காய்த்ரியின் வீட்டை நோக்கி, கலவரத்தை எங்காவது நேரில் பார்திருக்கிறீர்களா, அன்று அங்கு நடந்தது, கார்த்திக்கின் உதட்டோரத்திலிருந்து ரத்தம் வலிந்து தாடையை தாண்டி தொண்டை வரை வலிந்திருந்தது, காயத்திரியின் அம்மா, சிவகாமியம்மாள் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிந்தார், பின் ஐ.ச.pயு வில், கான்ஸ்;டபிள் கந்தசாமிக்குள்ளிருந்து சிறிது நேரம் அண்டர்டேக்கர் வெளிப்பட்டிருந்தான், நெய்பர்ஸ், அதாவது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், றுறுகு மேட்ச்சை லைவாக பார்த்து ரசித்து கொண்டிருந்தார்கள்,

சில வருடங்களுக்குள், காயத்ரி காதலித்து கர்ப்பமாகி, அபார்ஷன் ஆனது வரை கதையை டெவலப் செய்து , ஏதோ தங்களால் முடிந்த சேவையை அக்கம்பக்கத்து ஆத்துக்காரர்கள் கிளப்பி விட, சந்தியாவிற்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாகிவிட்டது. யாரோ அட்வைஸ் செய்தார்கள் கந்தசாமிக்கு இப்படி,

‘அந்த பையன பத்தி விசாரிச்சேன்ப்பா, அப்படி ஒண்ணும் மோசமானவன் இல்லை, நல்ல குடும்பம் தான், நல்லா படிச்சிருக்கான், இப்போ ஏதோ ஒரு காலேஜ்ல வாத்தியார் வேலை பாக்குறானாம், பேசாம, மான ரோஷம் பாக்காம அந்த பையனுக்ககே முடிச்சு கொடுத்துடு”

கந்தசாமி பணிந்து போக தயாரானார், வாயில் ரத்தம் வர அடித்துவிட்டோமே, அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? ஒரு அப்பனா அப்படி என்ன தவறு செய்துவிட்டேன், எந்த அப்பனாயிருந்தாலும் இதைத்தான் செய்திருப்பான், புரிந்து கொள்வார்கள், படித்தவன்தானே, தைரியமாக வீட்டை நோக்கி சென்றார், தனது மனைவியுடன் ஒரு வார்த்தை கலந்து கொள்வோம் என்று, ஆனால் அங்கு பார்த்காட்சி, என்ன மாதிரியான உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை, கந்தசாமி அதிர்ச்சியில் குழும்பி போனார், இது எதிர்பாராத அதிர்ச்சியா, இல்லை, ஆனந்தமா, இப்பொழுது, நான் கோபப்படவேண்டுமா? சந்தோஷப்பட வேண்டுமா? இப்பொழுது எதைச் செய்தால் சரி, பேசாமல் இருந்து விடுவோமா, ஆம் அமைதியாக இருப்பது தான் சரி, இந்த அளவிற்கு தன் வாழ்க்கையில் குழம்பியதே இல்லை கந்தசாமி, சிவகாமி அம்மாள் நிதானித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்,

‘இதோ பாருங்க எனக்கு என் பொண்ணு வாழ்க்கைதான் முக்கியம், உங்களோட உங்க பிடிவாதத்தோட 25 வருஷமா வாழ்ந்தாச்சு, அது என்னோட போகட்டும், இவ வாழ்க்கையாவது நல்லாருக்கட்டும்னு தான் இப்படி பண்ணேன், தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க, மன்னிக்க முடியலைன்னா கொன்னுடுங்க,”

சந்தசாமி அவ்வளவாக திரைப்படங்கள் பார்த்ததில்லையென்றாலும் ஒரு சில படங்கள் பார்த்திருக்கிறார், அப்படி பார்த்த படங்களுள் ஒன்று வேதம் புதிது, அந்த படத்திலிருந்து ஒரு காட்சி ஏனோ இந்நேரத்தில் நியாபகம் வந்தது, கன்னத்தை தடவிக் கொண்டார்,

கார்த்திக் - காயத்திரி ஜோடி மணக் கோலத்தில் கான்ஸ்டபிள் கந்தசாமி காலில் வந்து விழுந்தார்கள், ஆசிர்வாதம் செய்வதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்,

கார்த்திக்கின் காதல் நிறைவேற்றத்தில் சிவாவின் பங்கு அதீதமானது, பல்வேறு சங்கடங்களுக்கு நடுவே நண்பனுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறான், ஆனால் திருமணத்திற்கு பிறகு பொண்டாட்டிதாசனாகிவிட்டானோ? என்று சந்தேகப்படுமளவிற்கு, நண்பர்கள் மறந்து தன்னந்தனியானதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டான கார்த்திக் ,

கிட்டத்தட்ட ஒண்ணரை வருடங்களுக்குப்பிறகு சிவா தன் நண்பனை சந்திருத்திருந்தான், இங்கு நடக்கின்ற ஆச்சர்யங்களுள் இதுவும் ஒன்று, வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள் கூட மாதம் ஒரு முறை தொடர்பு கொள்வார்கள், ஆனால் சென்னையில் அடுத்த தெருவில் வசித்து கொண்டு வருடக்கணக்கில் பார்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள், சுருங்கிவிட்ட வாழ்க்கையின் கோரப்பிடியில் ஒண்ணரை வருடங்களை விழுங்கிவிட்டு, ஏதோ ஒரு சக்தியின் உந்துதலுக்குட்பட்டு இருவரும அன்று சந்தித்து கொண்டார்கள்,

சிவாவின் ஆதங்கம் என்னவென்றால், அன்று சந்தித்தபொழுது கூட காயத்ரியுடனான மனமுறிவை பற்றி கூறவில்லை, ஆனால் அன்று சந்தித்த வேளையில் சிவா சந்தோஷமான படபடப்புடன் காணப்பட்டான், அதனால் தான் சொல்லவில்லையோ என்னவோ, சிவா அன்று தான் சந்தியாவை பார்த்திருந்தான் முதன் முதலாக, கசநளா-ல் காய்கறி வாங்கி கொண்டிருந்தாளாம், அவ்வளவு காய்கனிகளுக்கு மத்தியிலும் கசநளா ஆக இருந்தது அவள் மட்டும் தானாம், சுண்டிவிட்டால் ரத்தம் வந்து விடுமாம் அப்படி ஒரு சிவப்பாம், அய்யராத்து பொண்ணாம், புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தான், இவ்வளவு புலம்பலையும் கார்த்திக்கிடம் கொட்டுவதற்கு காரணம் உண்டு, கார்த்திக்கின் மனைவி காயத்திரியும், சந்தியாவும் ஒரே பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியைகள், நெருங்கிய தோழிகள், நியாபகப்படுத்தினான். தான் எவ்வாறெல்லாம் அவர்களுடைய காதலுக்கு உதவி செய்திருக்கிறேன் என்று, கார்த்திக்கால் வேறு என்னதான் செய்ய முடியும், ஒத்துக் கொண்டான் உதவி செய்வதாக,

ஆனால் அன்று எச்சரிக்க நினைத்தான், இந்த காதல் கீதல் எல்லாம் வேண்டாம், முதலில் தேனாக இனிக்கும், பின் வேம்பாக கசக்கும், வாழ்க்கை முழுவதும் எத்தகைய உணர்வானாலும் சமன் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், எந்த ஒரு உணர்வு தலை தூக்குகிறதோ, ஆட்டம் போடுகிறதோ, அதற்கு எதிரான உணர்வை அநுவபவி;த்தே ஆக வேண்டும், காதலைக் கூட கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் நண்பா.........., இதை எப்படி புரிந்து கொள்வான், பொறாமைப்படுகிறேன் என்று நினைப்பான், ஒதுங்க பார்க்கிறேன் என்று நினைப்பான், அவன் அநுபவப்படத்தான் வேண்டும், விதிவலியது,

அடுத்த 3 மாதங்களுக்குள் எல்லாம் முடிந்து விட்டது, பின்னால் துரத்தியது, போன் பேசியது, லவ் லெட்டர் கொடுத்தது, காயத்ரிதூது, சந்தியாவின் ஆரம்ப வெறுப்பு பின் ஏற்றுக் கொள்ளுதல், ஒரு மாத, பீச், சினிமா , பார்க், முட்டுக்காடு பின் பலத்த எதிர்ப்புக்கு நடுவே ரெஜிஸ்தார் அலுவலகத்தில் நண்பர்கள் உதவியுடன் திருமணம், இரு வீட்டாருக்கும விஷயம் தெரிந்து அழுகை, அம்மாவின் மயக்கம், தந்தையின் நெஞ்சுவலி, சாபம், அனதை;தும் முடிந்து இன்றுடன் ஒரு வருடம் கடந்து விட்டது,

முதல் மூன்று மாதம் ஜெட் வேகம், வாழ்வின் இன்ப காலங்கள் அடுத்த மூன்று மாதம், ஒருவரின் தவறு இன்னொருவருக்கு தெரிய ஆரம்பித்தது, சுட்டிக்காட்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள், 7 மாதம் 10 நாட்கள், முடிந்திருந்த அன்று இரவு 10 மணிக்கு பலாரென்று ஒரு அறை, சந்தியாவின் கண்ணம் சிவந்து விட்டது, கடுமையான சண்டை, இன்று இவ்வளவும் நடந்து விட்டதை ரெஸ்டாரெண்டில் நண்பனிடம் கூறிக் கொண்டிருந்தான் சிவா நேற்று எல்லை கடந்து விட்டது சண்டை, சந்தியா கோபத்தில் டிவோர்ஸ் அப்ளை செய்து விட்டாள்,

கார்த்திக் மென்மையாக சிரித்து கொண்டிருந்தான். சம்பந்தமேயில்லாத ரியாக்ஷன் , ஏற்கனவே துன்பத்திலிருந்த சிவாவுக்கு கோபத்தில் உதடுகள் துடித்தன.

‘என்னடா நான் என் கஷ்டத்த சொல்லிகிட்டிருக்கேன் நீ பாட்டுக்கு சிரிச்சுகிட்டு இருக்க”

கார்த்திக் சிநேகமாய் சிரித்தபடி காபி டம்ளரை சிவாவை நோக்கி நீட்டினான் சியர்ஸ் செய்வதற்காக,

ஒரு வருடத்திற்குப் பிறகுஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக், தேனாம்பேட்டை சிக்னலில் எதிர்புறத்திலிருந்து, பல்சரில் அந்த இருவர், அந்த இருவரைப் பற்றியும் நன்றாகத் தெரியும், மோகன், மோசமான பெண் பித்தன், அவனுக்கு இரண்டு குழந்தைகளும் மனைவியும் உண்டு, ஆனால் அடுத்தவன் மனைவிக்காக அலைபவன், ஒரு நாள் காயத்ரியிடம் கூட செருப்படி வாங்கியிருக்கிறான், அவனும் அதே பள்ளியில்தான் பி.டி மாஸ்டர், அன்றுதான் காயத்ரியை புரிந்து கொள்ள சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. என்னதான் சண்டை போட்டாலும், டைவர்ஸ் வாங்கிக் கொண்டு பிரிந்தாலும் இதயத்தின் அடி ஆழத்தில் அதே உண்மையான அன்பு, நெகிழ்ந்து போனான்,அடி வாங்கியவன் மேலும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான், விஷயம் அறிந்து பொங்கி எழுந்த கார்த்திக், அன்றுதான் முதன் முறையாக அடிதடியில் இறங்கினான், மோகனின் ஒரு காது பிய்ந்து விட்டது. இப்பொழுது ஒட்டு போட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது, ஏதோ ஸ்போர்ட்ஸின் போது காதில் அடிபட்டுவிட்டதாக கதைவிட்டுருக்கிறான் போல,

ஆச்சர்யத்துக்கு காரணம் அவன் அல்ல பின்னே உட்கார்ந்திருந்த சந்தியாதான், அவள் இவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பாள் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை,

‘அய்யோ சிவா இப்பொழுது என்ன நிலையில் இருப்பானோ” வண்டியை விரட்டினான் வேளச்சேரியை நோக்கி, தக்சன் பிளாட்டில் சி பிளாக்கில் கடைசி பிளாட், லிப்டுக்காக காத்திருக்க பொறுமையில்லாமல் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி சென்று கதவை தட்டினான், முகம் நிறைய தாடியுடன் ஒரு உருவம் வெளிப்பட்டது,

‘எக்ஸ்கியூஸ்மி இங்க சிவச்சந்திரன்னு”

அந்த சோகமான கண்களை உற்று பார்த்தபடி கேட்டான்,

‘டேய்............டேய், சிவா என்னடா இது ஆள் அடையாளம் தெரியாம ஏன்டா இப்படி ஆயிட்ட” அமைதியாக திரும்பிச்சென்று படுக்கையில் படுத்துக் கொண்டான், அறை முழுவதும் ஆல்ஹகால் நெடி, அது அறையே அல்ல குப்பை மேடு, அங்கிருக்கும் உ,பா பாட்டில்களை எடைக்கு போட்டால் கணிசமாக ஒரு தொகைதேறும் போல, படுக்கையில் திரும்பியிருந்தவனை கட்டாயப்படுத்தி திருப்பினான்,

‘டேய் நீ இங்க இப்படி இருக்க , அங்க உன் ஒய்ப் யார் கூடயோ பைக்ல போய்கிட்டு இருக்கா.........என்னடா நடக்குது இங்க”

சிவாவின் கண்களில் சட்டென்று கண்ணீர் துளிர்த்தது, அவன் அழுது அன்றுதான் முதல் முறையாக பார்க்கிறான்,

‘அவனதான் கல்யாணம் பண்ணிக்க போறா”

அதிர்சிமேல் அதிர்ச்சியாக கொடுத்தால் என்னதான் செய்வது. இதை எப்படியாவது சரி செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்,

அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள, மீண்டும் திருமணம் செய்து கொண்ட கார்த்திக் - காயத்ரி தம்பதியினர் தங்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தினர், அதன்படி மோகனின் வண்டவாளங்களை ஆதரங்களுடன் நிருபிக்க சந்தியாவை சந்தித்து பேசலாம் என்று முடிவெடுத்து அவள் இருப்பிடத்துக்கு சென்றனர், அங்கு!!!

கால்களுக்கிடையே முகத்தை புதைத்தபடி அமர்ந்திருந்தாள் சந்தியா கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியில் எழுந்து ஓடிச்சென்று கதவில் பொருத்தப்பட்டிருக்கும் லென்சின் வழியாக பார்த்தாள், கார்த்திக் - காயத்ரி, உள்ளே வந்தார்கள் மூவரும் ஹால் சோபாவில் அமர்ந்தார்கள், காயத்ரி மோகனை பற்றி ஆரம்பித்தாள், கணவன் மனைவி இருவரும் கண்ணாபின்னாவென குற்றம் சுமத்தினார்கள், சந்தியா பேசிக் கொண்டிருக்கும் போழுதே எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவளைப் போல அசட்டையாக எழுந்து சென்றாள், அட்டாச்ட் பாத்ரும் கைப்பிடியை அழுத்தி கதவை திறந்தாள், உள்ளே விட்டத்தை பார்த்தபடி , கோணல் மாணலாக கீNழு கிடந்தான் மோகன், மார்பில் இதயப் பகுதியில் காய்நறுக்கும் கத்தி சொருகப்பட்டு உயிரை விட்டிருந்தான் , விஷயம் புரிந்து போனது,

இரண்டு நாட்களுக்கு பிறகு பத்திரிக்கைகளில் இவ்வாறு தலைப்புசெய்தி வெளியிடப்பட்டிருந்தது,

‘அடையாறு கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண்பிணம்

இரண்டு வருடங்களுக்கு பிறகுஇடம் : டெல்லி

என்னங்க வரும் போது பாப்பாவுக்கு பால் பவுடர் வாங்கிட்டு வாங்க

சிவா : ம் , அப்புறம் சோப்பு, ஜான்சன் அண்ட் ஜான்சன், பாத் ஆயில் ன்னு ஒண்ணுஒண்ணா சொல்வ, பேசாம என்ன என்ன வேணும்னு எழுதிக்கொடுத்துடு,

சந்தியா : சரி, சரி, ரொம்ப அலட்டிக்காதிங்க,.......... இன்னைக்கு அமீர்கான் படத்துக்கு கூட்டி போறேன்னு பிராமிஸ் பண்ணிருக்கிங்க நியாபகம் இருக்குல்ல,சிவா : ம், ம்,

நன்றி கீற்று

துரோகம்


இரவு மணி 10:30, இணையின் தேவை ஏற்படுத்திய இம்சையை சகித்துக் கொண்டிருந்தாள், சந்தியாவுக்கு திருமணமாகி 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. புதிதாக ருசி கண்ட பூனை. ஆனால் ராமு என்னும் ராமச்சந்திரனுக்கு அப்படியில்லை, பொதுவாக ஆணின் வேட்கைதான் அதிகமாக இருக்கும், சந்தியா கூட தனது கல்லூரி காலங்களில் தன் பின்னே சுற்றிய ஆண் பிள்ளைகளை பற்றி வெகுவாக அறிவாள், ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமாக இருந்தான், அந்த கார்த்திக், உற்று பார்க்கும் கூர்மையான பார்வை, தன்பால் கவனத்தை ஈர்க்கச்செய்யும் முயற்சி, மாதக் கணக்காக உற்று பார்த்தபடி இருந்தான், ஆணின் அந்த வேட்கையை, உற்றுப் பார்க்கும் தோரணையை, திருமணமாகி முதலிரவு அன்று ராமுவின் அடக்கி வைக்கப்பட்ட பாலுணார்வின் வெளிப்பாட்டில்தான் கண்டு கொண்டாள். நிச்சயமாக இத்தனை மாதங்களாக, தொடர்ச்சியாக, சலிப்பே இல்லாமல் உற்றுப் பார்க்க வேண்டுமானால் ஊற்றுக்கண் ஒன்று கண்டிப்பாக தேவை, கார்த்திக்கின் ஊற்றுகண் பாலுணர்வு, தேக்கி வைக்கப்பட்ட பாலுணர்வு, யாருக்குத்தான் இல்லை, இந்த ராமு, தேவைப்பட்ட போதெல்லாம் காபி குடிப்பதை போல, தேவையில்லை என்றால் கழற்றி வீசப்பட்ட சாக்ஸ்தான், உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதைத் தவிர பாலுணர்வில் காதலில் ஒன்றுமில்லையா? எனது ஏக்கம் என்ன வெறும் உடல் சார்ந்ததா? அதன் மேல் ஒன்றுமில்லையா?

அந்த வித்தியாசமான உணர்ச்சியை முதன் முதலில் கொடுத்தவன் மகேஷ், வாயில் எப்பொழுதும் போட்டு மென்று கொண்டிருக்கும் பான்பீடா, வெள்ளை வெளேர் என்கிற மைதா மாவுத்தோல், உடல் முழுவதும் எப்பொழுதும் பர்பியூம் வாசனை, கண்ணை சொருகிக்கொண்டு அவன் பார்க்கும் பார்வை, (தண்ணியடிப்பான் போல) அவன் எந்த சேட்டுக்கு மகனாக பிறந்தானோ, அப்படித்தான் முடிவுக்கு வர வேண்டியிருந்தது. அவனை பொதுவாக எல்லா பெண்களுக்கும் பிடிக்கும், எனக்குத்தான் ஏனோ பிடிக்கவில்லை, நல்ல கொழுத்த பணக்காரன் தான், ஆனால் என் ஆதர்ஷ ஹீரோ மாதவன் மாதிரி, ஆர்யா மாதிரி, மொழுக்கென்ற மைதாமாவு உடம்பு அல்ல, ஆனால் அவனும், தனக்கும், வீரம் உண்டு என்பதை ஒரு நாள் உணர்த்தி விட்டான்.

கல்லூரி விட்டு செல்லும் கடைசி பேருந்தில், அதாவது அந்த பேருந்து மட்டுமே நேரடியாக என் இருப்பிடம் செல்லக் கூடியது, கொத்து கொத்தாக தொங்கி கொண்டு வரும் கூட்டத்திற்கு நடுவே வழக்கம் போல் பிரயத்தனபட்டு ஏறி நடுவே எனக்கென்று ஒரு இடத்தை நிர்ணயித்துக் கொண்டு, வியர்வை நாற்றம் மற்றும் முடை நாற்றங்களுக்கு நடுவே சிறிதளவே வரும் ஆக்ஸிஜனை சுவாசித்தபடி சிரமபட்டுக் கொண்டிருக்க, யாரோ பின்னே உரசுவது போல இருந்தது, திரும்பி பார்த்தால் மகேஷ் அதே கூர்மையான வில்லத்தனமான பார்வை, திருமணத்திற்கு பின் அந்த பார்வையை நிதம்நிதம் சந்தித்திருக்கிறேன், அன்று மகேஷ் பின்னிருந்து இருக்க அணைத்துக் கொண்டான், எனக்கு அழுகையே வந்து விட்டது. எங்கிருந்து வந்ததோ அவ்வளவு தைரியம், அவன் கன்னங்களை பிராண்டி வைத்து விட்டேன், ஆனால் அது மிக சாதாரணம், அவன் பேருந்தில் இருந்த பயணிகளிடம் வாங்கிய அடிகளோடு ஒப்பிடும் போது, நான் பிராண்டியது ஒன்றுமேயில்லை,

இன்று வரை பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன். கணவனின் கட்டியணைத்தலுக்கும், கயவனின் கட்டியணைத்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க, கடவுள் என்கு ஒரு வரம் கொடுக்க விரும்புவாரானால், இதைத்தான் கேட்பேன் என் கணவனின் கட்டியணைத்தலில் சிறிது காதலையும், நம்பிக்கையும், மதித்தலையும் கொடு என்று, எனக்கு வித்தியாசம் தெரிய வேண்டும், கட்டியணைப்பது கணவனா கயவனா என்று, ஆனாலும் எனது பாலுணர்வுத் தேவை என்னவோ காய்ந்தமாடு.............எக்ஸட்ரா எக்ஸட்ரா,

இப்பொழுது என் விரல்களில் நகங்கள் கிடையாது, ஏன் தெரியுமா என் கணவனின் முகத்திலும் முதுகிலும் அத்தனை தழும்புகள், என் நகங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா என்ன? மகேசுக்கும், ராமுவுக்கும், ஒரு வேளை என் உடலிலேயே சற்று நேர்மையுடன் நடந்து கொண்டது, என் நகம் மட்டும் தானா?, ஒரு பெண் தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள ஆயுதமாக தன் நகங்களை கூட பயன்படுத்திக் கொள்ளலாம், இந்த வாக்கியம் நகைச்சுவையாக மாறியது எனது கணவனின் முதுகில் வலிந்த ரத்த துளிகளை டியூப்லைட் வெளிச்சத்தில் பார்த்த பொழுதுதான், என் நகங்கள் அப்பொழுது ஆயுதமாக இருந்ததா?, இல்லையென்றால்.........., இப்பொழுது யோசித்து பார்க்கும் பொழுது அது போலியாக என்குள் நானே உருவாக்கிக் கொண்ட ஆயுதமா?, கேள்விக்கு யார்தான் விடையளிப்பார்கள், கேள்விகள் புதுக்கேள்விகளை மட்டுமே உருவாக்கித் தொலைக்கின்றன,

செத்துப்போன வாழ்க்கைக்கு நடுவே சற்று பிரகாசமாக புத்துணர்ச்சியை தருவது எனது பாலுணர்வு மட்டுமே, இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு அலுவலகம் தான் முதல் மனைவிபோல, உடல் களைப்பை போக்க சிறிது மனைவி, ஏஃசி, பிரிட்ஜ் , டீ,வி, பிரட்டோஸ்ட், நீச்சல்குளம், நாய்க்குட்டி, ம் , நாய்க்குட்டி என்றதும் தான் நியாபகம் வருகிறது, சந்துரு, அந்த நாய்க்குட்டியை வாங்கித் தந்தவன் அவன்தான், என் ஆதர்ஷ ஹீரோ ஆர்யாவேதான், என் கணவனின் அலுவலக தோழர், அவனைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது இது தான், திருமண விஷயத்தில் நாம் அவசரப்பட்டு விட்டோமோ, அந்த நாய் குட்டியை தடவிக் கொடுக்கும் பொழுதெல்லாம் அவன் தான் நியாபகம் வருகிறான், கண்களில் அத்தனை கவர்ச்சி, எப்பொழுதும் சிரித்த முகம், நேர்த்தியான தலைக்கேசம், பற்பசை விளம்பரங்களில் இவனை ஏன் நடிக்க கூப்பிடவில்லை அப்படி ஒரு பளீர் சிரிப்பு, ஜீன்ஸ், டி.சர்ட்டுக்குள் இருகிப்போன உடம்பு, (பிட்னெஸ் சென்டர் போவான் போல).

எனக்கு பல வருடங்களாக இந்த பயிற்சி உண்டு, அதாவது. ஒருவன் பார்க்கும் பார்வை எத்தகையது என்பதில், சந்துரு அன்று மிகவும் சிரமப்பட்டான், என் மீதிருந்த அந்தப் பார்வையை தவிர்ப்பதற்காக, அவன் என் வயிற்றுக்கு நடுவே இருந்த ஒற்றைப் புள்ளியை பல சமயங்களில் பார்த்து விட்டு பார்வையை விலக்கிக் கொண்டான், எனக்கு என்னவோ அதை மறைக்க வேண்டும் என்று தோன்றவில்லை, அவன் என்னை அந்த சமயத்தில் மதித்திருந்தான், ராமுவை போல் அல்ல, என்னில் உள்ளது மதிக்கப்பட்டது அவனால், எனக்கு அப்படித்தான் தோன்றியது, தோன்றுகிறது , ராமுவுக்கு, அதுவும் காபி குடித்துவிட்டு தூக்கியெறியப்பட்ட டம்ளர் இரண்டும் ஒன்றுதான், கலாச்சாரம் நிர்ணயிக்கப்பட்ட பொழுது நான் அங்கு இல்லாமல் போய்விட்டேன், இருந்திருந்தால் என் வாதத்தை நான் எடுத்து வைத்திருப்பேன், இன்று மனதில் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருந்திருப்பேன், சந்துரு என்னை மன்னித்து விடு , நாம் கலாச்சாரத்துள் இருக்கிறோம், நமக்கு நாம் கொடுக்கும் மரியாதையை விட நிர்ணயிக்கப்பட்டவைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை மிக முக்கியம், மீண்டும் ஒரு முறை என்னை மண்ணித்து விடு.

மணி 11:00 தொலைக்காட்சியில் அஜித்தும் சிம்ரனும் ‘நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டிவை “ பாடிக் கொண்டிருந்தார்கள், ஸ்பிலிட் ஏஃசி தனது ஜில்லிப்பை தோல்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது, மெலிதான உடை, மெத்தைமேல் சந்தியா. நேரம் கடந்து கொண்டிருந்தது,

நள்ளிரவு நேரத்தில் பச்சைத்தண்ணீரை மொத்தமாக உடல் மேல் ஊற்றிக்கொள்வதை சில சினிமாக்களில் பார்த்திருக்கிறேன், உடலில் அப்படி என்னவொரு வேட்கை உந்தித்தள்ளுகிறதோ, திருமணத்திற்கு பிறகுதான் இப்படியொரு அதீதமான வேட்கை, தண்ணீர் கிடைக்காத மரம் காய்ந்து விடுவதை போல நானும் காய்ந்து போவேனோ என்று அவ்வப்பொழுது பயம் தோன்றுகிறது, சந்துரு (நாய்க்குட்டி) என் மடியில் படுத்து தூங்கி கொண்டிருக்கிறான், அதற்குள்; அவனுக்கு தூக்கம் வந்து விட்டது, இதற்கு மேல் காத்திருப்பது வீண், அப்படியே வந்தாலும் குறட்டை ஒலியை தவிர வேறொன்றையும் எதிர்பார்க்க முடியாது, காதல் செத்துவிட்டது, அதன் உதவியாளன் காமமும் செத்துவிட்டான், கல்யாணம் என்கிற குண்டுவெடிப்பில், பலியான நாணோ, நிர்ணயிக்கப்பட்டவைகளின் மந்தைக்குள் புத்தம் புதிய ஆடாய் திருதிருவென பார்த்தபடி, உள்ளுக்குள் ஒரே ஆதரவு, ஏற்கனவே நிறைய பேர் இங்கிருக்கிறார்கள் என்பதே, தப்பிச்சென்ற ஆடுகளை பார்க்கும் பொழுது பொறாமையாகவும் உள்ளது,

மணி 11:30, கதவு தட்டப்பட்டது, சந்தியா கதவை திறந்தாள், வெளியே ராமு, சந்துரு, போதையென்றால் போதை அப்படியொரு போதை கிட்டத்தட்ட சுயஉணர்வே இல்லாத அளவிற்கு, ராமுவை தாங்கிபிடித்திருந்தான் சந்துரு, சந்துருவின் சட்டை முழுவதும் வாந்தி எடுத்து வைத்திருந்தான். சந்தியாவின் உதவியோடு படுக்கையில் படுக்க வைத்தான், பாத்ரும் எந்த பக்கம் என்று கேட்டுவிட்டு சட்டையை கழுவிக் கொள்ள சென்றான், சந்தியாவிற்கு கிட்டத்தட்ட அழுகையே வந்து விட்டது, அவனது சட்டை பட்டன்களை தளர்த்திவிட்டாள், ஷூவை கழற்றி எறிந்தாள், தனது அறைக்குள் ஓடிச்சென்று குப்புறபடுத்துக் கொண்டு அழுதாள்,

சட்டையை துடைத்துக் கொண்டு வெளியே வந்த சந்துரு, அறைக்குள் சந்தியா அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்றான். அவள் குப்புறப்படுத்துக் கொண்டு குழுங்கி குழுங்கி அழும் தோற்றத்தை பார்த்து சிறிது தடுமாறிப் போனான், மனதை திடப்படுத்திக் கொண்டு அருகே சென்றான், சமாதானம் கூறினான் , அவள் அழுகை பெரிதாக வெடித்தது, அவன் மார்பிள் சாய்ந்து கொண்டாள், தன் முகத்தை அவன் நெஞ்சினில் புதைத்துக் கொண்டாள், விஷயம் விபரீதத்தை நோக்கி போக ராமுவின் இடத்தில் சந்துரு...

மறு நாள் காலை ராமு வழக்கம் போல் மன்னிப்பு கேட்டான். வழக்கம் போல் சத்தியம் செய்தான் ( இனி குடிக்கமாட்டேன் என்று) வழக்கம் போல் பறக்கும் முத்தத்தை தந்து விட்டு ஆபிஸ் சென்று விட்டான். சந்தியா எந்த உணர்வும் அற்று, எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்று தெரியாமல், நீண்ட நாள் கழித்து கிடைத்த நிறைவு மற்றும் முதல் குற்ற உணர்வு இவற்றிற்கு நடுவே பதில் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

என்னை மீறி எழும்பி வரும் குற்ற உணர்ச்சியை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதனால் இப்படிபட்டதொரு அடக்க முடியாத குற்ற உணர்ச்சி, என் மனதளவில் கெட்டுப் போன பொழுது இந்த குற்ற உணர்ச்சி தோன்றவில்லை அப்படியானால், மனதளவில் கெட்டுபோனது உண்மையில் கெட்டுபோனது இல்லையா?, இல்லை, அப்படியில்லை, நிச்சயமாக அப்படியில்லை, மனதளவில் கெட்டுப் போனாலும் கெட்டு போனது தான், உண்மை என்னவெனில் அது யாருக்கும் தெரியாது, நன்றாக வேஷம் போடலாம் அவ்வளவுதான் விஷயம், ஆனால் உடலளவில் கெட்டுப்போனதோ, தண்ணீருக்கடியில் தங்கமுடியா காற்று, அப்படியானால் இது குற்ற உணர்ச்சி அல்ல பயம், என்னிடம் இருந்தது பயம் மட்டுமே.

கார்த்திக் , மகேஷ் , இவர்களெல்லாம் என்னை பயமுறுத்தியிருக்கிறார்கள், அவ்வளவுதான். தற்காப்புக்காக அ;வர்களை எதிர்த்திருக்கிறேன், ஆனால் இந்த சந்துருவிடம் மட்டும் எந்த பயமும் இல்லையே, ஆம் எனக்கு இப்பொழுது தைரியம் வந்துவிட்டது போல, பிரச்சனை தைரியம் தான் என்றால் நிர்ணயிக்கபட்டவைகள் எல்லாம் எதற்காக, எதற்காக ஒரு பெண்ணுக்கான இத்தனை கட்டுப்பாடுகள், தன்னுடைய இணைக்கு மனக்கஷ்டத்தை கொடுக்கக் கூடாது என்கிற நல்லுணர்ச்சிக்காகவா?, அப்படியானால் ராமுவிடம் அது தேiவியல்லை. மனக்கஷ்டம் என்றால் அது நான் ராமுவுக்கு கொடுத்ததைவிட, ராமு எனக்கு கொடுத்ததுதான் அதிகம். அவர் என்னை ஒரு அலங்கார பொருளாக்கி விட்டார்,

சே, எனக்கும் ஒரு பிராஸ்டிடியூட்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம், எனக்கு தேவை செக்ஸ்தான் என்றால் இந்த தாலியை கழற்றி போட்டுவிட்டு வெளியில் சென்று ஊர் மேயலாமே. எனக்கு எதற்கு ஒரு கணவன், வீடு, நாய்குட்டி, கார் எல்லாம். நான் ஏமாற்றி விட்டேன், ராமு என்னை மன்னிச்சுடுங்க, உங்களுக்கு உண்மையா நடந்துக்க ஒரு வாய்ப்பு கொடுப்பிங்களா?, ராமு, நீங்க என்னதான் என்னை துச்சமா நினைச்சாலும், எனக்கு துரோகம் பண்ணதில்லை, உங்க சாப்பாட்டையே சாப்ட்டுட்டு உங்க வீட்லயே உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன், மண்ணிச்சிருங்க ராமு, என்னை மன்னிப்பிங்களா,? மன்னிப்பிங்களா?

மனதிற்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தாள். செல்போன் அடித்தது, அந்த ரிங்டோன் அது ராமுவினுடையது, வந்து விட்டாரா, தனது அறையை விட்டு ஹாலுக்குள் சென்று பார்த்தாள், செல்போனை மறந்து வைத்து விட்டு சென்று விட்டார், எடுத்தாள், அதில் பிரீத்தி என்றிருந்தது, அவளது முகம் மாறியது, எடுத்தாள், ஆன் பண்ணினாள், பேசட்டும் என்று மௌனமாக இருந்தாள்.

‘ஹாய் டார்லிங், (குரலில் கொஞ்சல்) நான் பிரித்தி......, உங்களுக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்றது...........ஹலோ, .........ஹலோ..........”

நன்றி கீற்று

Thursday, April 1, 2010

வாரத் தேவை


25 வயதிற்கு பின் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுள் பாலுணர்வும் ஒன்றாகிவிடுகிறது. உலகில் கணவன் மனைவிக்கு இடையில் நடக்காத சண்டைகளா? ஆனாலும் சேர்ந்து வாழத்தான் செய்கிறார்கள். பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள். முதன் முதலில் ஒரு குழந்தையானது பயத்தை கற்றுக் கொள்வது பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போதுதான். வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கும் அந்த குழந்தைக்குள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருக்கும். பெற்றவர்களைப் பொருத்தவரை குழந்தைகள் வீட்டை அலங்கரிக்கும் பொருள்களில் ஒன்றாகும்.

தேவராஜன் தேவிஸ்ரீ பெயர்ப் பொருத்தம் நன்றாக அமைந்துவிட அவர்கள் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்திருந்தது. யாருக்கும் கிடைக்காத பேறு தனக்கு கிடைத்து விட்டதாக நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்திருந்தான் தேவா. ஆனால் சலிப்பு என்ற ஒன்று இருக்கின்றதே.,எவ்வளவு தான் திருநெல்வேலி அல்வாவை வாய் கொள்ளும் மட்டும் தின்றாலும் திகட்டுதல் என்பது ஏற்படத்தானே செய்யும். அதற்கு ஒரு கால நிர்ணயம் கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாதம். அதாவது மோகம் முப்பது நாள் காமம் அறுபதுநாள். ஆக மொத்தம் 90 நாள், அதன் பிறகு அது ஒரு வாரத் தேவையாகிவிடுகிறது. மற்ற நாட்களில் வேறு என்னதான் செய்வது, சண்டையிடுவதைத் தவிர.

பெண்களைப் பொருத்தவரை அதிக சக்தியுடன் தயாராக இருக்கிறார்கள். ஆண்கள் தான் வாரத்தின் ஆறு நாட்களும் தோற்றுப் போகிறார்கள். அலுவல் சோர்வில் அவர்கள் மனைவியிடம் அடங்கிப் போவது என்பது இயல்பாகிவிடுகிறது. இத்தனைக்கும் நடுவில் அவளின் சகிக்க முடியாத தாக்குதல் மற்ற பெண்களுடன் அவனை ஒப்பிட்டு பேசும் குரூரமான போக்கு, திருமணமாகி 2 வருடங்கள் கடந்தாகிவிட்டது. இது தேவி கண்டுபிடித்திருக்கும் புது வித பிரம்மாஸ்திரம். அவனை ஒரே வார்த்தையில் அடக்க வேண்டுமானால் இந்த யுக்தி நன்றாக வேலை செய்கிறது. குறை கூறுவதில் அவளைத் தேர்ச்சி செய்து கொள்வதற்கு தினசரி பயிற்சியை அக்கம் பக்கத்து வீட்டுக்கார பெண்மணிகள் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்கள்.

வெகுநாள் பனிப்போருக்கு இடையில் பிறந்த பெண் குழந்தைதான் சத்தியப்பிரியா. தினசரி அவர்களுக்கிடையில் நடக்கும் சண்டை நடுவர் போல் அமர்ந்து கொண்டிருக்கும் பயந்து போன பிரியாவின் முன்னிலையில் தான்.

சென்ற வாரம் 25 ஆம் தேதி அலுவலக வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தான். ஒரு நாளில் வேலை முடிந்திருந்தாலும் மேலும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து ஆட்டம் போட்டான். காரணம் பார்வதி. அவள் அங்கேதான் அறிமுகமாகியிருந்தாள். அவளது முதல் பார்வையே மயக்குவதைபோல் இருந்தது. வார இறுதியில் அதாவது சனிக்கிழமை இரவுகளில் தேவியின் பார்வை இப்படித்தான் இருக்கும். அந்த பார்வையைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும்.

வேலையை இரண்டு நாட்கள் நீடித்தான். தேவா தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அவள் தங்கியிருந்தாள். ஒரு நாளில் ஐந்து முறையாவது அவளது பார்வைக்கு இரையாக வேண்டியிருந்தது. அவளைப் பார்த்தால் பிராஸ்டியூட் என்று சொல்லத் தோன்றவில்லை. அப்படி ஒரு குடும்பப் பாங்கான தோற்றம். அவளது பார்வையில் ஏதோ ஒரு வித கெஞ்சுதல் தன்மை இருந்தது. தன்னைக் காப்பாற்றி வாழ்வளிக்கக் கேட்கும் பார்வை. கவனிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. ஒரு பெண் ஒரு ஆணை வெற்றி கொள்ளும் இடம் வெறும் பாலுணர்வு மட்டும் அல்ல. அவளது அடைக்கலம் தேடும் பண்பும் அவனை அடிமையாக்கிவிடுகிறது. எந்த ஒரு சூழ்நிலையில் அடைக்கலம் கேட்கப்பட்டாலும் கர்ணனைப் போல் மறுக்காது கொடுத்துவிடும் தன்மை கருணையா? அல்லது தன்னலத்துடன் கூடிய பாலுணர்வு ஆக்கிரமிப்பா? ஏனெனில் இவர்கள் ஒரு ஆண் இவ்வாறு கெஞ்சும் பார்வையில் கேட்கும்போது கண்டிப்பாக மறுத்துவிடுவார்கள். அது எப்படியானாலும் அவன் கண்ணியில் சிக்கிய புலியா இல்லை மானை வீழ்த்திய புலியா என்பது அவரவர் கண்ணோட்டத்திற்குரியது.

இரண்டு நாட்களில் 75 போன் தேவியிடமிருந்து. தேவிக்கு நிலைகொள்ளவில்லை, கற்பனைக் குதிரை நாலுகால் பாய்ச்சலில் ஈரேழு உலகங்களையும் சுற்றி வந்தது. தேவா 2 நாட்களில் வந்து விடுவதாக சமாதானம் கூறிக் கொண்டே இருந்தான். அன்று இரவு ஹோட்டல் லாபியில் இருந்த தேனீர் விடுதியில் தனக்கென ஒரு இடத்தை நிர்ணயித்துக் கொண்டு அமர்ந்து கொண்டான். அவள் நிச்சயமாக பார்வையில் படுமாறு எதிர்த்தாற் போல்தான் வந்தமர்வாள்.

கடந்த இரண்டு நாட்களும் அப்படித்தான் நடந்தது. ஒரு வேளை இன்றும் அப்படி நடந்தால் அவளிடம் அடுத்த கட்ட வடவடிக்கையை தொடங்க வேண்டியதுதான். இல்லையென்றால் மூட்டையைக் கட்டிக் கொண்டு ஊரைப் பார்த்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். நினைத்தது போலவே அவள் தன் ஓரக்கண்ணால் பார்த்தபடியே அவனுக்கெதிர்த்தாற் போல் வந்தமர்ந்தாள். இவனுக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. ஏதோ புது மாப்பிள்ளை போல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளருகே செல்லலாம் என்று நினைத்து எழுந்தான். அப்பொழுதுதான் கவனித்தான் அவள் தனது கர்ச்சீப்பால் தனது கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் உதவி எதிர்பார்த்து தன்னை எதிர்நோக்கியிருக்கிறாள் என்று மட்டும் நன்றாகப் புரிந்துவிட்டது.

இனி பேசுவதற்குப் பயமில்லை. அவளிடம் கருணையுடன் பேசுவதற்கு ஒரு டாபிக் கிடைத்துவிட்டது. அவளருகே எந்தவிதமான மனப்பதற்றமும் இல்லாமல் தைரியமாக சென்றான். அருகிலிருந்த குஷன் சேரை இழுத்துப் போட்டு விட்டுக்கொண்டு அவளது கண்களை ஆழமாக உற்றுப் பார்த்தான். அதில் மிரட்சி தெரிந்தது. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. திணறினான்.

“ம்ம்ம்ம்.. உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“பார்வதி”

“நைஸ், நைஸ் நேம்”

“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா”

“இல்லை”

பொங்கி வந்த மகிழ்ச்சி சிரிப்பை முயற்சி செய்து அடக்கிக் கொண்டான்.“என் பேர் என்னன்னு தெரியுமா? உங்களுக்கு”

“தெரியும்”

“தெரியுமா ? எப்படி?”

“கீழே ரிஜிஸ்டர்ல கேட்டு தெரிஞ்சுகிட்டேன்”

“ஓ! நான் உங்களை ரெண்டு நாளா வாட்ச் பண்ணிகிட்டுத்தான் இருக்கேன். நீங்க என்ன பாக்குறதும். சிரிக்கிறதும்”

“பாத்தேன் ஆனா சிரிக்கலேயே”

“ம் மே பி. ஆனா இப்போ அழுகிறீங்க. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

அவளது பார்வை நிலைகுத்தியது. கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வலிய ஆரம்பித்தது. அவன் பதறிப்போனான். சமாதானப்படுத்த முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை. யாரும் தப்பாக நினைப்பதற்குள் இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்து எழுந்தான். அவள் அவனது கைகளை பிடித்துக் கொண்டாள். தனது கன்னங்களோடு சேர்த்து பிடித்து அழுத்திக் கொண்டாள். பிறகு நாகரிகம் கருதி சுற்றிப் பார்த்தபடி தனது அழுகையை அடக்கிக் கொண்டாள். அவனது கைகளில் தனது விசிட்டிங்கார்டை திணித்தாள். அதில் அவளது சொந்த ஊர், அட்ரஸ், செல்நம்பர் எல்லாம் இருந்தது.

“நீங்க என் வீட்டுக்கு கண்டிப்பா வரணும். நான் எதிர்பார்த்து கொண்டிருப்பேன்”

அழுது கொண்டே ஓடிவிட்டாள். அவனால் நிலை கொள்ள முடியவில்லை. தன்னை ஒரு பெண் அழைத்திருக்கிறாள் என்றால் தன்னிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

வீட்டில் தேவியின் கவனிப்பு பலமாக இருந்தது. சி,பி,ஐ தோற்றது. அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் மூளை வறண்டு விட்டது. ஒரு மாதிரியாக சமாதான முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டான். அவளை சந்திக்கப் போகும் அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். ஒரு வார வேலைக்குப் பிறகு அன்று தொடர்ந்தாற் போன்று இரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டான். ஏதோ வெளியூரில் நண்பனை சந்திக்கப் போவதாக சொல்லிவிட்டு கிளம்பினான்.

தேவிக்கு இந்த பொய்யெல்லாம் போதாதென்று நன்றாக தெரிந்திருந்தும் லூசுத்தனமாக இப்படி ஒரு பொய்யை கூறிவிட்டு சென்றான்.

ஊர் மதுரை. திருநகர். ஐந்தாவது நிறுத்தம். லக்ஷ்மி காலனி. நம்பர் 43. தேடிக் கண்டுபிடித்து சென்றான். வீட்டின் முகப்பில் நாகராஜ் பவனம் என்றிருந்தது. யார் இந்த நாகராஜ் ஒரு வேளை தந்தையாக இருக்குமோ? தனக்குள் நினைத்துக் கொண்டான். இன்று வருவதாக ஏற்கனவே போன் செய்து கூறியிருந்தான். அவன் உள்ளே நுழைந்ததுமே நன்றாக தெரிந்தது. அவனுக்கான ஏற்பாடுகள் பலமாக நடந்திருப்பது. அடுக்களையிலிருந்து ஓடி வந்தாள் சிரித்த முகத்துடன். அவனது கைகளை பற்றிக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள். உட்கார வைத்தாள். ஆசுவாசப்படுத்தினாள். குடிப்பதற்கு குளிர் பானங்களை கொடுத்தாள். உணவு பரிமாறினாள். அவனுடைய எதிர்பார்ப்பெல்லாம் வேறாக இருந்தது. இருப்பினும் உடனே ஆரம்பிக்க வேண்டாம். சற்று பொறுப்போம் என்று நினைத்துக் கொண்டான்.

அவன் நினைத்தது போலவே வீட்டில் வேறு யாருமே இல்லை. எதற்கும் கேட்டு வைப்போமே என்று கேட்டான். அவள் எதுவும் பேசவில்லை. நேராக எழுந்து சென்றாள் பீரோவை நோக்கி. அதற்குள்ளிருந்து பெரியதாக ஒரு ஆல்பத்தை எடுத்தாள். அதில் அவர்களது குடும்பத்தினருடைய அனைத்து போட்டோக்களும் இருந்தது. ஆல்பத்தை விரித்து வைத்தப்படி ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தாள். இவள் நேரம் ஆக்குவதைப் பார்த்துவிட்டு நினைத்துக் கொண்டான் இவள் தேவியை விட அதிகமாகப் பேசுகிறாள் என்று.

வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக தலையில் இடி விழுவதைப் பற்றிய அனுபவம் சில பேருக்குத்தான் உண்டு. அவள் ஆல்பத்தின் 7 ஆம் பக்கத்தை திருப்பினாள். அதில் தேவராஜின் போட்டோ இருந்தது. ஆனால் சற்று இளம் வயதில் எடுத்தது போல் இருந்தது. இது எப்படி இவளுக்கு கிடைத்தது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் அவள் கூறினாள்.

“இது தேவக்குமார்”

“இல்லை தேவராஜ். அது தான் என்னோட பேர்”

“இல்லை இது என்னோட அண்ணா தேவகுமார். அசப்பில பாக்குறதுக்கு உங்கள போலவே இருப்பார். மிலிட்ரில வேலை பார்த்தார். ஸ்ரீநகர்ல தீவிரவாதிகளோட நடந்த சண்டைல இறந்துட்டாரு”

இடி நடு மண்டையில் சென்டராக இறங்கியது. அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனது மடியில் ஆல்பத்தை வைத்தபடி உரிமையோடு அவனது அருகே நெருங்கி உட்கார்ந்தபடி அந்த கடைசி வரிகளை சொல்லும்போது அவனுக்குள் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகள் எல்லாம் செத்து விழுந்தன. அடுத்த இரண்டு மணிநேரம் கண்ணீரை விட்டுவிடாமல் கண்ணுக்குள்ளேயே அழுதான். அவளிடம் அன்பாகப் பேசினான். தான் தன் காதலிக்கு வாங்கி வந்திருந்த பரிசை (தங்க மோதிரம்) தன் தங்கைக்கு அணிவித்தான். அன்போடு விடைபெற்று சென்றான்.

இரண்டு நாட்களாகும் என்று சொல்லிவிட்டுச் சென்றவன் அடுத்த நாளே வந்தது குறித்து அதிர்ச்சியடைந்தாள் தேவி. அன்று வாரத் தேவைக்கான நாள். சனி இரவு. எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக இருக்கும் நாள். அவனிடம் அனுசரணையாகப் பேசினாள். இரவு அவனுக்குப் பிடித்தாற் போல் எப்படி எப்படி எல்லாமோ வளைந்து குழைந்தாள். அவனது செத்துப் போன உணர்ச்சி உயிர் பிடிக்கவேயில்லை. பாலுணர்வு குறித்த பக்குவத்தின் முதல்படியில் மனைவியை ஏமாற்றாமல் அவளை அணைத்துக் கொண்டு அப்படியே படுத்துக் கொண்டான்.

என்ன அதிசயம் நடந்ததோ தெரியவில்லை அடுத்து வந்த சில நாட்களில். தேவியின் குறை கூறும் தாக்குதலும் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. பாலுணர்வு குறித்த பக்குவம் மனைவியுடன் கூடிய உறவை சரியான அணுகுமுறையோடு நடத்தி செல்கிறது என்பது எவ்வளவு நிதர்சனமாக இருக்கிறது என்று உணர்ந்து கொண்டான். அவள் தன் உள்ளக் கிளர்ச்சியையும் அறிந்து கொள்கிறாள். உள்ளத்தின் கிளர்ச்சியற்ற தன்மையையும் அறிந்து கொள்கிறாள். உண்மையில் உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கையில் தான் எத்தனை விதமான ஜாலங்களை நிகழ்த்துகிறது.

அன்று இரவு சத்யப்பிரியா அமைதியாக கண்களை மூடியபடி. வாயை மெதுவாக திறந்து வைத்துக் கொண்டு தூங்கி கொண்டிருந்தாள். மணி இரவு 8:30. நிலவொளி தென்றலோடு கலந்து வீசியது,

நன்றி கீற்று, திண்ணை, உயிரோசை

ஏமாற்று ஏமாற்று


ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான். அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல பெயர் எடுத்துள்ளான். இந்த நல்ல பெயர் என்ற ஒன்று இருக்கிறதே அதை வைத்துக் கொண்டு சவரம் கூட செய்ய முடியாது. வக்கனையாக வாய் கிழிய வாழ்க்கை முழுவதும் பெருமைபட்டுக் கொள்ள வேண்டியதுதான். 5 பைசா பிரயோஜனம் இல்லாத விஷயங்களின் வரிசையில் முன்னனி வகிக்கும் விஷயமும் இதுவே. 25 வருடம் நல்ல பெயர் எடுத்தானே ஒழிய பெரிதாக சொத்து எதுவும் சேர்க்க வில்லை. வாழ்க்கையை கலைக்கு அர்ப்பணம் செய்யும்போதே வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான் அர்ப்பணிக்க வேண்டும். இத்தனை வருட அநுபவம் நிறைய கற்று கொடுத்து விட்டது.

20 வயதில் டச்சப் மேனாக வாழ்க்கையை ஆரம்பித்து இன்றுவரை பணம் என்று பெரிதாக எதுவும் சம்பாதித்து விடவில்லை. நேற்று வந்த சுண்டைக்காய் பசங்கலெல்லாம் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு காரில் இருந்து கொண்டே கையசைத்துக் கூப்பிடுகிறார்கள். 45 வயதாகிவிட்டது. இன்று ஜெயித்துவிடுவோம் நாளை ஜெயித்துவிடுவோம் என வாழ்க்கை முழுவதும் ஓட்டியாகிவிட்டது. பெண்ணின்பம் துய்க்க வேண்டிய காலங்கள் எல்லாம் பறந்தோடி விட்டது. வாழ்க்கையை நன்றாக அநுபவித்து அடங்கிய பெருசுகள் எல்லாம் அட்வைஸ் பண்ணும்போது கொலை செய்து விட வேண்டும் என கைகள் நடுங்கும். ‘உழைக்க வேண்டிய வயசுல உழைக்கணும்பா. இல்லண்ணா வாழ்க்கையே வீணா போயிடும். இந்த பொட்டச்சி பின்னால சுத்துரவனெல்லாம் வாழ்க்கைல உருப்பட்டதா சரித்திரமே இல்ல’.

இதையெல்லாம அடிவயிற்றில் எரியும் அனல் போன்ற நெருப்பு உடல் முழுவதும் பரவி கைகள் வழியாக வெளிப்பட்டு துடித்து நடுங்கி வேறு வழியில்லாமல் அடங்கும்.

இது போன்று அநுபவிக்க வேண்டியதையெல்லாம் அநுபவித்து விட்டு இளைஞர்களிடம் வேதாந்தம் பேசும் பெரிசுகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். வாழ்க்கையில் உழைக்க வேண்டிய நேரங்களிலெல்லாம் உழைத்தாகிவிட்டது ஒன்றும் நடக்க வில்லை. இங்கு ஏமாற்றிப் பிழைக்க வேண்டும். ஏமாற்றுகிறோம் என்பது வெளியே தெரியாமல் ஏமாற்ற வேண்டும். ஏமாறுகிறவன் சந்தோஷமாக ஏமாற வேண்டும். ‘நீ ஏமாறுகிறாய் ஜாக்கிரதையாக இரு’ என்று யாரேனும் அறிவுரை கூறினாலும். ‘எனக்குத் தெரியும். நீ ஒன்றும் சொல்லத் தேவையில்லை. எனக்கு சுயபுத்தி உண்டு. நான் ஏமாறுகிறவன் இல்லை’என எதிர்த்துப் பேசுகிற அளவிற்கு ஒருவனை ஏமாற்ற வேண்டும். ஏமாறுகிறவனுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும். அவனை புத்திசாலி என்று சொல்ல வேண்டும். யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள் அவனுக்குக் கிடைத்திருப்பதாக கூற வேண்டும். இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கெல்லாம் இன்னொரு பெயர் உண்டு. வியாபாரம். பச்சையாக கொச்சையாக சொல்வதென்றால் ஏமாற்றுவேலை. உலகமே இதனடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

45 வருடங்களுக்குப் பிறகு இந்த ஞனோதயம் வந்து என்ன செய்வது? வாழ்க்கையில் 70 சதவிகிதம் முடிந்து போய்விட்டதே. இளைஞனாயிருந்த போது. ஏமாற்றுகிறவனைப் பார்த்தால் கோபம் வரும். ஏமாறுகிறவனைப் பார்த்தால் அதைவிட அதிகமாக கோபம் வரும். இவர்கள் ஏன் இப்படி ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள் என்று உண்மையாக வருத்தப்பட்டதுண்டு. ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லாத உலகம் ஏற்படாதா என ஏக்கம் கொண்டதுண்டு. ஏமாற்றுக்காரர்களின் தலையைக் கொய்தாலொழிய இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று நினைத்ததுண்டு. ஆனால். ஆனால்! என்ன பிரயோஜனம் நிறம் மாற்றி விட்டார்கள். உருவம் கொடுத்துவிட்டார்கள். ஏமாற்று வேலைக்கு வேறு வடிவம் கொடுத்து விட்டார்கள். ஏமாற்றுகிறவன் நண்பன். ஏமாறுகிறவன் உயிர்த்தோழன். இருவரும் சேர்ந்து புது உலகை படைத்து விட்டார்கள். இதில் நான் மட்டும் ஏன் தனியனாக இருக்க வேண்டும். நானும் அதே குட்டையில் ஊறி ஒரு மட்டையாகி விடுகிறேன். நியாயம் கேட்பவர்களுக்கும். தர்மம் அலசுபவர்களுக்கும் ஏற்கனவே பதில் தயாராக இருக்கிறது. உண்மையில் எல்லா கெட்ட விஷயங்களுக்கும் பதில் கண்டு பிடித்து விட்டார்கள். ஏதேனும் ஒரு பொருத்தமான தோலை போர்த்திக் கொண்டு பதிலை ஞபாபகத்திற்கு கொண்டு வந்து உணர்ச்சி பொங்க சொல்லிவிட வேண்டியதுதான். அது பசுத்தோலோ புலித்தோலோ. நேரத்திற்கு தகுந்தாற்போல் எடுத்து போர்த்திக் கொள்ள வேண்டியதுதான்.

மனம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் வறட்டுத்தனமாக பதில் சொல்லமுடியவில்லை. இப்பொழுது என் மனநிலைக்கு முன் மனு சாஸ்திரமும் தோற்றுவிடும். இழந்து போன வாழ்க்கை வேதனையை கக்கி கொண்டிருக்கிறது. மனம் கூறியது ஏமாற்று ஏமாற்று. ஏமாந்தது போதும். அனைவரும் இதைத்தான் செய்கிறார்கள. அவர்கள் பதில்கள் வைத்திருக்கிறார்கள். உனக்கும் பதில்கள் கிடைக்கும். எங்கே போய்விடப் போகிறது இந்த பதில்கள் உனக்கு மட்டும் கிடைக்காமல். தைரியமாக ஏமாற்று நான் உன் கூடவே இருக்கிறேன். இன்று முதல் நான் புதிய மனிதன். நான் பாரபட்சம் பார்க்க மாட்டேன். பாவம் புண்ணியம் பார்க்க மாட்டேன்.

நான் அடுத்தவர்களுக்கு போடும் வேஷத்தை எனக்கு போட்டுக் கொண்டால் என்ன. ம் . பெரிதாக ஒன்றும் இல்லை. முகம் இடம் மாறுகிறது. நான் என்றுமே நல்லவன்தான். எனக்கு தேவைகள் என்ற ஒன்று இல்லையென்றால். எனக்கு ஆசைகள் என்கிற ஒன்று இயல்பாகவே இல்லையென்றால். யாராவது ‘புத்தர் கூறினார் ஆசைப்படாதே துன்பம் நெருங்காது’ என்று என்னிடம் கூறினால் நிஜமாகவே வாயைக் கிழித்து விடலாம் என்று இருக்கிறேன். ஏற்கனவே கடைபிடித்து பார்த்தாகி விட்டது. ஆசை அடக்கப்படும்போது தான் அதிகப்படுகிறது. பேசுகிறவர்களுக்கெல்லாம் பேசுவது என்பது பிசினஸ் ட்ரிக். அதாவது ஏமாற்றுவேலையின் தந்திரம்.

நானும் ஏமாற்ற துணிந்து விட்டேன். தனக்குத்தானே வாதம் புரிந்து கொண்டிருந்த ராகவன். தனக்குத்தானே போட்டுக் கொண்ட மேக்கப்பை கண்ணாடியில் பார்த்தான். சிரித்தான்.

‘நன்றாகத்தான் இருக்கிறது. களவும் கற்றுமற. நாலு பேரு நல்லாருக்கனும்னா என்ன வேணாலும் செய்யலாம்னு கமலே சொல்லிருக்காரு. அந்த நாலு பேர்ல இப்ப நானும் ஒருத்தன். இப்போ நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.’ நடக்க ஆரம்பித்தான். புது உத்வேகத்துடன். அவனுடைய உடையையும் நடையையும் பார்த்தால் கோடிகளில் புரண்டவன் போலத் தெரிந்தது.

ஆட்கள் அதிகமாக நடமாடும் தி.நகர். கூட்டம் தேனிக்களுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. அதோ ஒரு கூமுட்டை பெரியவர். பார்த்தாலே தெரிகிறது. அக்குளில் அழுத்தமாகப் பிடித்தபடி பை. நிச்சயமாக பணப்பைதான். அடித்து விட வேண்டியதுதான். பாவம் புண்ணியம் பார்க்கக்கூடாது. நேரம் பார்த்து அடித்துவிட வேண்டியது தான். திடீரென கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு முட்டி மோதி நகர்ந்து செல்ல பெரியவர் கூட்டத்தில் இருந்து நகர்ந்து பிளாட்பாரத்தின் ஓரமாக வந்து தனது அக்குளைப் பார்க்க அங்கே பணப்பைக்கு பதிலாக நியூஸ் பேப்பர் சொருகப்பட்டிருந்தது.

கிராமத்து ஆள் போல கூச்சம் நாச்சம் இல்லாமல் சத்தம் போட்டு கத்தி அழ ஆரம்பித்து விட்டார். வழக்கம் போல நமது தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய வழக்கமான ரவுண்டு கட்டி சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் தொழிலை ஆரம்பித்து விட்டார்கள். கழுதை செத்து கிடந்தாலும் சரி ஒரு மனிதன் கதறி அழுதாலும் சரி சுற்றி நின்று பார்த்து ரசிப்பதை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாளாக பழகி வந்திருக்கிறார்கள் நமது மக்கள். 20 மீட்டர் இடைவெளிவிட்டு சரவணா ஸ்டோர் படிக்கட்டுகளில் ஏறி நின்று கொண்டிருந்தான் ராகவன்.

அவர் கிட்டத்தட்ட மயக்கம் போடும் வரை கதறினார். போலிஸ் வந்தது. அந்த சோடா எங்கு தான் கிடைக்குமோ. நான் கடந்த 25 வருடத்தில் ஒரு முறை கூட அங்கே சோடா வாங்கியதில்லை. சோடாவை பெரியவர் முகத்தில் பீய்ச்சி அடித்தார்கள். விழித்தவர் திரும்பவும் பிதற்ற ஆரம்பித்தார் பைத்தியம் பிடித்தவர் போல. அவர் பிதற்றலிலிருந்து சில விஷயங்கள் புரிந்தது. தனது பெண்ணிற்கு திருமண நகை வாங்குவத்றகாக. ஏதோ ஒரு பட்டியிலிருந்து நிலத்தை விற்ற பணத்தோடு சென்னை வந்துள்ளார். வந்த இடத்தில் கொள்ளை போன பணம் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உயிரை எடுத்துவிடும் போல இருந்தது.

சம்மட்டியால் ஒரே இடத்தில் திரும்ப திரும்ப அடிக்கும் போது இரும்பு உருமாறுமாமே. ராகவன் உடைந்து போனான். பெரியவரை நோக்கிப் போனான். போலிஸ்காரர்களுக்கு மத்தியில் உலகை மறந்து புலம்பிக் கொண்டிருந்த பெரியவரை நோக்கி ‘பெரியவரே நீங்க கொண்டு வந்த பணப்பை ஊதா கலர் தோல் பையா” பெரியவர் எம்.ஜி.ஆரைப் பார்த்த நம்பியாரைப் போல வெடுக்கென்று தாவி அவனது கையை பிடித்தார்.

‘ஆமா தம்பி நீங்க பாத்திங்களா”

‘அதோ அந்த ரெண்டு கல்லுக்கு நடுவுல ஒரு இடுக்கு பாருங்க” அதுக்குள்ள கெடக்கு பாருங்க. சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாதது போல நடக்க ஆரம்பித்தான். பெரியவர் அவிழ்ந்து விழ இருந்த வேட்டியை கையில் பிடித்தபடி இடுக்கை நோக்கி ஓடினார். பையும் பணமும் இருந்தது. பெரியவர் சந்தோஷத்தில் அழ ஆரம்பித்தார். திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளிலெல்லாம் வயதான பெரியவர்கள் சந்தோஷத்தில் நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்து ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடுவார்கள். ஆனால் பெரியவருக்கு அவ்வாறு நடக்கவில்லை. கிராமத்தில் உழைத்த உடம்பு. எதையும் தாங்கும் என்றது. கிராமத்து ஆட்களுக்கு பொதுவாகவே நன்றி அதிகம். அந்த கூட்டத்துக்கு நடுவே ராகவனை தேடினார். துரத்திப் பிடித்தார்.

‘தம்பி தம்பி........ தம்பி. என் குலத்தையே காப்பாத்திட்டீங்க. ரொம்ப நன்றி தம்பி. உங்களுக்கு நான் ஏதாவது செய்யனும் தயவு செஞ்சு தம்பி எங்கூட ஊருக்கு வரனும். மாட்டேன்னு சொல்ல கூடாது”

‘பெரியவரே எனக்கு நெறைய வேலை கிடக்கு. பணம் கிடைச்சுடுச்சுல. சந்தோஷமா ஊருக்கு போயிட்டு வாங்க”

‘தம்பி. தம்பி அப்டில்லாம் சொல்லக்கூடாது தம்பி. வூட்டுக்கு ஒரு தடவையாவது வந்து கைய நனைச்சுட்டு போகணும். உங்களப் பாத்தா வீட்டுல எல்லாரும் சந்தோஷப்படுவாங்க”

‘பெரியவரே சொன்னா கேளுங்க. போயிட்டு வாங்க”

‘சரி. சரி. அப்டினா உங்க விலாசமாவது கொடுங்க”

பெரியவர் விட மாட்டார் போல. விலாசத்தைக் கொடுத்து தொலைத்தான்.

‘தம்பி என் மக கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் தம்பி சொல்லிபுட்டேன்”

‘ம். சரி. சரி “

தப்பிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ராகவன் தன்னைத்தானே நொந்து கொண்டான். இது 5 வது தடவை. சே. அடுத்த தடவையாவது பாவம் பாக்காம ஏமாத்திடணும். ஒவ்வொரு தடவை தப்பு செய்யும் போதும் யார் தன்னை தடுப்பது. புரியாமல் தவித்தான் ராகவன். ஒவ்வொரு முறையும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு கிளம்புவதும் பின்தனக்குள் உள்ள யாரோ ஒருவன் தடுக்க தோற்றுவிட்டு வெறுங்கையுடன் வருவதும் வழக்கமாகிவிட்டது. யாரவன்? வலிமையானவனா இருக்கானே. அவனுக்கு சமாதானம் சொல்லவே முடியலையே.

நன்றி கீற்று

ரோபோ


தகதகவென சிவந்த கண்கள். கருவிழிகளோ மேல் நோக்கி சொருகிய நிலையில். முகமெல்லாம் வழிந்தோடிய வியர்வைத் துளிகள். கலைந்து போன முடி. அது நடையா நடனமா என்று சரியாக தெரியவில்லை, அப்படியொரு இடம் நகர்தல். சட்டையில் கடைசி ஒரு பட்டன் மட்டுமே போடப்பட்டிருந்தது. சட்டையில் போடப்பட்டிருந்த கடைசி பட்டன் இழுத்துவிடப்பட்டதில் நெஞ்சருகே இருந்தது. தண்ணியடித்து தொங்கிப்போன நிலையில் தொப்பை. கைலி என்னும் ஒரு வஸ்திரம். கட்டப்பட்டிருக்கும் நோக்கமிழந்து அரை டிராயரின் உதவியுடன் மானம் காக்கப்பட்டு. அந்த உருவம் வந்து கொண்டிருந்தது. பெயர் ஆட்டோ மணி.
மணி என்று கூப்பிட்டால் மணிக்கு கோபம் வந்து விடும். ஆட்டோ மணின்னு கூப்பிடு என்று கூறுவான். அது தொழிலுடன் ஏற்பட்ட ஒருங்கிணைப்பு வேறொன்றுமில்லை. கடந்த பத்து வருடங்களாக ஆட்டோ ஓட்டுகிறான். அத்தனை டிராபிக் போலிஸ்காரர்களும் தோஸ்த் முறை. 7 முறை சிறை சென்றிருக்கிறான். அதில் 3 முறை வேறு கேஸ் சிடைக்காத போலிசுக்கு உதவி செய்வதற்காக. முதல் நாள் ரஜினி படம், கட்ஆவுட் பாலாபிசேகம், அரசியல் கூட்டங்களுக்கு ஆட்டோ டீலிங், நகர் வெளிப்புறங்களில் ஆட்டோ ரேஸ், இரவு நேர பீச் சுண்டகஞ்சி, தினந்தோறும் மட்டன் பிரியாணி, ஓல்ட்மங்க் மற்றும் ஓல்ட் காஸ்க், கிண்டி குதிரை ரேஸ் என இத்தனை பிஸியான வாழ்க்கைக்கும் நடுவே ராணிபேட்டை உமா அதிகமாக அலைய விட்டாலும் ஏற்றுக் கொண்டாள்.
அவர்களின் அதிகபட்ச கல்வித்தகுதி இருவரையும் சேர்த்து கூட்டினாலும் 5ஐ தாண்டாது. உமா 3வது பாஸ். மணி 2வது பெய்ல். அதற்காக 2 வருடம் அலையவிட்டது அதிகம்தான். முதலிரவை முட்டுக்காட்டில் திருமணத்திற்கு முன்பே முடித்து விட்டான். திருமணம் தேனாம்பேட்டை போலிஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ராணிப்பேட்டையிலிருந்து உமாவைக் கடத்தி வரும்பொழுது பின்னே துரத்தி வந்த பேட்டைவாழ் மக்கள் தேனாம்பேட்டை போலிஸ் ஸ்டேஷன் வந்தபொழுது அவர்கள் திருமணம் நடந்து முடிந்து விட்டது. இன்ஸ்பெக்டருக்குப் பின் தான் தெரிந்தது பெண் கடத்தி வரப்பட்டிருக்கிறாள் என்று. மாமன் மகள் என்று பொய் சொல்லியிருக்கிறான் மணி. இருப்பினும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருவரும் மேஜர். அது மட்டுமில்லாமல் எத்தனை முறைதான் அடிப்பது. தோஸ்த் முறை வேறு.
திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் கடந்து விட்டது. கணவன் மனைவி சண்டை காதல் சண்டை இரண்டிற்கும் நடுவே ஒரு மகள் பிறந்தாள். பெயர் செல்சியா. உலகத்தரம் வாய்ந்த படைப்பு. 24 மணி நேரத்தில் 10 மணி நேரம் அழுது கொண்டிருக்கும். 10 மணி நேரம் தூங்கும். 4 மணிநேரம் மணி Vs உமா மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும். உமா நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒத்துழைக்க மறுத்து விட்டாள். ஆட்டோகாரனின் அடாவடித்தனத்தை அடக்க. அக்கம் பக்கம் வீட்டு 35 வயது கடந்த மாமிகளின் கலந்துரையாடலுக்குப் பிறகு ஏற்பட்ட அதிரடி முடிவுதான் இது. நல்லவன் மணி. நான்கு வருடங்களாக உமாவின் மேல் வைத்திருந்த போதையை கல்யாணியிடம் ஆரம்பித்தான். பின் நெப்போலியன், மெக்டுவெல், ஓல்ட் மங்க், ஓல்ட் காஸ்க். இன்று சைதாப்பேட்டை வெஸ்ட்ஜோன்ஸ் ரோட்டில் தள்ளாடியபடி..
வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் இரவு தூங்க வேண்டுமானால் ஏதேனும் ஒரு போதை வேண்டியிருக்கிறது. உழைத்த களைப்பு கூட அவ்வளவு திருப்தியான உறக்கத்தைத் தருவதில்லை. மணியைப் பொறுத்தவரை உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ளத்து ஆரோக்கியத்துக்கும் உமாவோ. கல்யாணியோ (பியர்) தேவையாய் இருக்கிறது. மற்றபடி அவள் மேல் எந்த கோபமோ வெறுப்போ இல்லை. மகள் மேலும் மிகுந்த பாசம் வைத்திருந்தான். இப்பொழுதே செல்சியா பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்திருந்தான். தனக்குப்பின் தன் மனைவிக்கு என இன்சுயரன்ஸ் போட்டிருந்தான்.
ஆனால் அந்த அசட்டுத்தனமான காரியத்தை யார் சொல்லி செய்தாளோ உமா தினந்தோறும் குடித்து விட்டு வரும் மணியின் பெயர் இப்பொழுது ஆட்டோ மணி அல்ல, குடிகாரன் மணி. தாம்பத்யம் விட்டுப் போய் 2 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இரவு வீட்டிற்குள் அவன் செல்வதில்லை. திண்ணையிலேயே திறந்த வெளித் தூக்கம். சில சமயம் உருண்டு ரோட்டில் கிடப்பான். வீட்டில் நெளியாமல் ஒரு பாத்திரம் கிடையாது. 5 வயது மகளுடன். எதிர்கால பயம் வேறு. வாழ்க்கை கசந்து விட்டது. இனிமையான ஒரு நிகழ்வில்லை வீட்டில். வெறுமனே சாப்பிடுகிறோம். சண்டை போடுகிறோம். தூங்குகிறோம். அவ்வளவுதான்.
அன்று இரவு உணவில் பூச்சி மருந்தைக் கலந்து சாப்பிட்டு விட்டாள். இதில் அசட்டுத்தனமான காரியம் என்னவென்றால் செல்சியாவுக்கும் இரவு உணவு அதுதான். நல்ல வேளை அந்த பூச்சி மருந்து ஒரு இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் அரைகுறை பாதிப்புடன் பிழைத்துக் கொண்டார்கள். சர்வமும் அடங்கிப் போனான் மணி. ஹாஸ்பிட்டலில் உமாவின் முன் இரண்டு சத்தியங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஒன்று குடிக்க மாட்டேன். இரண்டு சண்டை போடமாட்டேன். குழந்தை செல்சியா முழித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவின் கண்களில் முதன் முறையாக கண்ணீர்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு
10 மணி நேரம் உழைப்பு. மனைவியின் சமையலில் மூன்று வேளை உணவு. தினந்தோறும் தேய்த்துப் போடும் காக்கிச் சட்டை, காக்கி பேண்ட். எண்ணெய் வைத்து படிய வாரிய தலை. மறக்காமல் நெற்றியில் சந்தனம் திருநீறு. கைநிறைய வருமானம். சாதாரண ஓட்டு வீட்டிலிருந்து நல்லதொரு டைல்ஸ் பதிக்கப்பட்ட மாடிகளுடன் கூடிய வீட்டிற்கு குடிபெயர்ப்பு. செல்சியாவின் கான்வென்ட் ஆரம்பக்கல்வி. வாழ்க்கைமுறையே மாறிவிட்டது. வாடா போடாவென மரியாதையில்லாமல் கூப்பிட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர்கள் கூட வாப்பா போப்பா என மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். குடிகாரன் மணி என்கிற பெயர் மறைந்து மிஸ்டர்.ஆட்டோ மணி ஆனார். சமுதாயம் மதிக்க ஆரம்பித்தது. அந்தஸ்து கிடைத்தது.
அக்டோபர் 10 அதிகாலை
வேளைஇன்று செல்சியாவின் பிறந்த நாள். அதிகாலை நேரம் மணியின் கையில் ஒரு லிஸ்டை திணித்தாள் உமா.
‘சீக்கிரம் போய் வாங்கிட்டு வாங்க. செல்சி குட்டி எந்திரிக்கறதுக்குள்ள எல்லா பலகாரமும் பண்ணிரனும். ம்....... அப்படியே. அந்த முக்குல அயர்ன் பண்ணுவான்ல (யோசித்தான்) அதாங்க கிருஷ்ணா அயர்ன கடை. (நியாபகம் வந்தது) என்னோட ரவிக்கை நாலு தர்றேன் அயர்ன் பண்ணிட்டு வந்துருங்க. அப்புறம் மண்ணென்ணெய் தீந்து போச்சு. ஒரு பதினோரு மணிக்கு கால் பண்றேன். உங்க ஸ்டாண்ட் பக்கத்துலதான ரேஷன் கடை. இரண்டு டின்ன உங்க ஆட்டோல வச்சுருக்கேன் மறந்துறாதிங்க. சரி சீக்கிரம் போய்ட்டு வாங்க”
மணி 8:30....... மணியின் கையில் காபியை திணித்தாள். பழகிப்போனது அந்த ஆடை விழுந்த ஆறிப்போன காப்பி. ஒண்ணரை மணி நேரத்துக்கு முன் போட்ட காபி. இருப்பினும் அன்பு மனைவி கையால் போட்ட காபி அல்லவா !!!! ஆறிப்போன காபியின் கசப்பும் சர்க்கரையின் இனிப்பும் கலந்து அது என்ன சுவை???. யோசனையில் இருக்கையில் உமாவும் செல்சியாவும் எங்கோ கிளம்பி கொண்டிருந்தார்கள்.
‘என்னங்க. நானும். செல்சியாவும் போத்திஸ் போறோம். எங்கள அங்க இறக்கி விட்டுருங்க. பட்டுப்புடவை 20% தள்ளுபடில போட்டிருக்கான். அப்படியே செல்சிக்கு ஒரு பவுன் நகை வாங்கலாம்னு இருக்கேன். அதனால மத்தியானத்துக்கு நீங்க வெளில சாப்டுக்கோங்க. சரியா.”
மணி 9:00
‘என்னங்க சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. பொம்பள நானே கிளம்பிட்டேன். நீங்க ஏன் இவ்வளவு நேரமாக்குறிங்க. “
மணி 9:20
ஆட்டோ மேட்டுப்பாளைம் தாண்டி ஸ்ரீநிவாசா தியேட்டர் வளைவில் சென்று கொண்டிருந்தது.
‘என்னங்க அந்த ஓரத்துல நிப்பாட்டுங்க.......... அந்த அம்மாகிட்ட 3 முழும் பூ வாங்குங்க......... சீக்கிரம் வாங்க டைம் ஆகுது.”
ஆட்டோ டி நகர் போக்குவரத்துகளுக்கு நடுவே புகுந்து போத்திஸ் முன் நின்றது.
‘என்னங்க நான் மதியம் கால் பண்றேன். மறக்காம வந்து பிக் அப் பண்ணிக்குங்க. அப்புறம ரேஷனுக்கு போக மறந்திராதிங்க”
செல்சி அப்பாவுக்கு டாட்டா காட்டியது.
மணி 11:45
ரேஷன் கடைக்கும் போர் முனைக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு இடங்களிலும் கத்தி சண்டை நடக்கும். மணிக்கு ஆறு மாத ப்ராக்டிஸ் இதில் உண்டு. தனக்குரிய 2 லிட்டர் மண்ணெண்ணையை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.
மணி 1:15
மணியின் செல்போன் ஒலித்தது.
‘என்னங்க இன்னும் அரைமணி நேரத்துல நாங்க பர்சேஸ் முடிச்சிருவோம். 1:30க்கெல்லாம் வந்துருங்க சரியா.”
மணி 2:15
உமா, செல்சி இருவரும் வீட்டில் வந்து இறக்கி விடப்பட்டார்கள்.‘என்னங்க உதயம் போய் 3 டிக்கெட் புக் பண்ணிருங்க . 3:45க்கெல்லாம் ஸ்டாண்டுல இருந்து வந்திருங்க. மறந்திராதிங்க இன்னைக்கு சினிமாவுக்குப் போறோம்”
மணி 3:30
பட்டுப்புடவையில் ஜொலித்தாள் உமா. செல்சியா அந்த கவுனில் குட்டி தேவதை போல இருந்தாள்.‘என்னங்க இந்த கர்சீப்ப பாக்கெட்ல வச்சுக்குங்க. தள்ளுபடில வாங்குனது. அந்த பூ டிசைன் ரொம்ப நல்லாருந்தது. உங்களுக்காகத்தான் வாங்கினேன்.”
மணி 5:30
சினிமா தியேட்டரில் ஐஸ்கிரீமை குதப்பியபடி செல்சி.
‘டாடி எனக்கு ஆய் வருது”
இரவு மணி 8:00
‘என்னங்க தோசை மாவு ஒண்ணரை கிலோ வாங்கிட்டு வாங்க”
மணி 10:30
‘என்னங்க........என்ன்ன்னனனங்ங்ங்ககக............ஏன் இவ்ளோ தள்ளி படுத்துருக்கிங்க. இந்த பக்கம் திரும்பி படுங்க. (மௌனம்). ரொம்ப நாள் ஆச்சுல........ நாம சந்தோஷமா இருந்து.”
மணி 12:00
வியர்வைத் துளிகளுடன் திரும்பி படுத்துக் கொண்டாள்.
மணி இந்த ஆறு மாத காலத்தில் மொத்தமாக மௌனமாகி விட்டான். வாழ்க்கை சரியாக போய் கொண்டிருந்தது. ஆனால் ஏதோ ஒரு குறை உமாவுக்கு. என்னவென்று சொல்லத் தெரியவில்லை. மணி ஏதோ பொம்மைத்தனமாக நடந்து கொள்கிறானோ? மிகச்சிறந்த ஜப்பானிய விஞ்ஞானியின் கண்டுபிடிப்பைப் போல மூளை, சதை, ரத்தம், நரம்பு, தோல், இவற்றுடன் பாசம், காதல், அன்பு இவைகளையும் சேர்த்துக் கொண்டு ஒரு ரோபோவை போல. முன்பு அவன் அணைத்தலில் ஒரு ஆண்மையின் ஆக்கிரமிப்பு இருக்கும். ஆனால்........ இப்பொழுது...... உமாவால் யூகிக்க முடிகிறது, உணர முடிகிறது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. வாழ்க்கை சரியாகத்தான் செல்கிறது. ஆனால் ஏதோ ஒரு குறை. மிகப்பெரிய குறை. கணவனின் ஆக்கிரமிப்பில் கிடைத்த சுகம். அவன் அடங்கிய நிலையில் கிடைக்கவில்லை. வாழ்க்கையின் மொத்தமான ஒரு பாதி இழந்து விடப்பட்டது தெரியாமல் உமா-மணியின் மீதி காலங்கள் கண்டு கொள்ளப்பட முடியாத மெலிதான நிறைவின்மையுடன் சென்று கொண்டிருந்தது.
nandri keetru

காதல்



முதல் காதல் கொடுத்த தோல்வியில் விரக்தி அடைந்து, விரக்தியின் உச்சத்தில் வெறித்தனமாக போராட, வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ராகவன், வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள ஆரம்பித்திருந்தான். கிட்டத்தட்ட 7 வருடங்கள் வாழ்க்கையில் வீணாய் கழிந்திருந்தது.

மீண்டும் அதே போன்றதொரு சூழ்நிலை, பழைய நியாபகங்களை கிளறிவிடும் விதமாக அந்த பெண் ராகவனை துரத்திக் கொண்டிருந்தாள். காதலிப்பதாக கூறினாள். இரண்டு முறை அறை வாங்கியும் அவளுக்கு உறைக்கவில்லை. அவள் தன் காதலை நிருபிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

அன்று ரெஸ்டாரெண்டில் காபி குடித்துக் கொண்டிருந்தான். பாதி காபியை அப்படியே வைத்துவிட்டு எழுந்து ஓட ஆரம்பித்தான். காரணம் சந்தியா சுற்றி வளைத்து மடக்கிவிட்டாள். அவர்களுக்குள் காரசாரமான விவாதம். தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருக்கும் நமக்கு ஒன்றுமே கேட்கவில்லை. உற்றுப் பார்த்தால் சந்தியாவின் கண்களில் இருந்து வழிந்த அந்த சொட்டு கண்ணீர் தெளிவாக தெரிந்தது. சிறிது அருகில் செல்வோம். இருவரும் கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டார்கள். கடைசி டயலாக்கையாவது கேட்டுவிடுவோம்,

ராகவன் : என்ன காதலிக்கறதுக்கு உருப்படியா ஏதாவது ரெண்டு காரணம் சொல்ல முடியுமா உன்னால?........ ம், உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் காதலிக்கிறது ஒரு ஹாபியா போச்சு.

சந்தியா மூஞ்சூறு பார்ப்பது போல் உர்ரென்று பார்த்துக் கொண்டிருந்தாள். பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் சந்தியாவைப் பார்க்கப் பிடிக்காமல், திரும்பி நடக்கப் போனான். தாவிச் சென்று அவன் சட்டையை பிடித்து திருப்பி அவன் முகத்தை நேருக்கு நேராக நோக்கி,

சந்தியா : என்ன ரெண்டு காரணம் தெரியணுமா உங்கள காதலிக்கிறதுக்கு? ம், கேட்டுக்கோங்க முதல் காரணம் எனக்குத் தெரியாது. ரெண்டாவது காரணம் எனக்கு சுத்தமா தெரியாது. நான் உங்கள காதலிக்கிறேன் அவ்வளவுதான். போதுமா?

அழுது கொண்டே ஓடி விட்டாள். கோபத்தில் சுருங்கிப் போயிருந்த ராகவனின் முகத்தில் பூ மலர்ந்தது போல் மெதுமெதுவாக புன்னகை மலர்ந்தது.ராகவன் : (மனதிற்குள்) குழந்தைத்தனத்தை ரசிக்காமல் இருக்க முடியல.

நன்றி கீற்று

கமலா



கமலாவிற்கு காலை ஐந்து மணியிலிருந்து வேலை ஆரம்பமாகி விடும். வாசல் தெளித்து கோலம் போடுவதிலிருந்து. காபி. சமையல் என ஒரு சுற்று முடித்து கடைக்குட்டி வித்யாவிற்கு பல் தேய்த்து விட்டு. குளிப்பாட்டி. சாதம் ஊட்டி பள்ளிக்கு செல்லும் ஆட்டோவில் திணிக்கும் வரை பெண்டு நிமிர்ந்து விடும். இதற்கு நடுவில் அவள் வாங்கிய திட்டுக்கள். ஏற்பட்ட டென்ஷன்கள்.

1 . கணவன் சரவணன் - அடியே காபில ஏண்டி இவ்ளோ சர்க்கரைய அள்ளி போடுற. ஒரு அளவு தெரியாதா உனக்கு முண்டம்.

2. மகன் ரமேஷ் - அம்மா எனக்கு காபி வேணாம்மா டீ தான் வேணும்.

3. மகள் வித்யா - அம்மா எனக்கு பல்லு தேய்ச்சு விடு.

4. கணவன் சரவணன் - கமலா சுடுதண்ணி வைடி குளிச்சுட்டு சீக்கிரம் ஆபிஸ் போகணும்

5. மகன் ரமேஷ்- அம்மா என் ஜாமிண்ட்ரி பாக்ச பாத்திங்களா. எங்கம்மா காணோம் நேத்து நைட்டு இங்கதான வச்சேன்.

6.மகள் வித்யா - அம்மா எனக்கு கால் கழுவி விடும்மா. அம்ம்ம்மாhhhh..........

7. கணவன் சரவணன் - அடியே கமலா நேத்தே சொன்னேன்ல. சட்டைய தொவச்சா தேச்சு வைக்கணும்னு. ம்?. நான் இப்போ கசங்கி சுருங்கி போன சட்டைய தான் ஆபிஸ் போட்டு போகணுமா. இதுல பட்டன் வேற இல்ல. நல்லா உக்காந்து சீரியல் மட்டும் பாரு. இந்த வேலைய எல்லாம் செஞ்சுறாத முண்டம்.

8.மகன் ரமேஷ் - அம்மா என்னோட பனியனை காணோம் எடுத்து தாங்க.......மம்மிமிமி

9. வித்யா - அம்மா எனக்கு தலை சீவி விடுங்க.

10. கணவன் சரவணன் - அடியே அந்த பேப்பர்காரன் வந்தான்னா காசு கொடுக்காத எதா இருந்தாலும் என்கிட்ட பேசிக்க சொல்லு. ராஸ்கல் 7 மணிக்கு பேப்பர் போட சொன்னா. 9 மணிக்கு போடுறான்.

11. மகன் ரமேஷ் - அம்மா சைக்கிள்ள காத்து கம்மியா இருக்கு.

12. மகள் வித்யா - அம்மா ஆட்டோ வந்திடுச்சு

13. கணவன் சரவணன் - அடியே டிபன் பாக்ஸ் கட்னயாடி.

மணி 9.15 அடை மழை விட்டது போல் இருந்தது. மூச்சு வாங்க ஆரம்பித்தால். இதயம் லேசாக பலவீனம் அடைந்தது போல் உணர்ந்தால். 3 பேரின் தேவைகளை நிறைவேற்ற 300 வேலைகள் செய்;ய வேண்டியது இருக்கிறது. தனக்குள் சந்தோஷமாக சளித்துக் கொண்டாள். நிதானமானவளாய் பல் துளக்க ஆரம்பித்தாள். குளித்தாள். சாப்பிடும் போது மணி 11:00 டீ.வி யை போட்டாள். ஏதோ ஒரு சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. சீரியலை பார்க்கவும் கணவனின் சட்டை நியாபகம் வந்தது. தேய்க்கலாம் என்று எடுத்து வைத்தாள்.

காலை 5 மணியிலிருந்து 9 மணி வரை கமலாவிற்கு நடந்த அனைத்து விஷயங்களும் சீரியலில் வரும் அந்த பெண்ணுக்கு நடந்து கொண்டிருந்தது. தன்னைப் போன்ற ஒரு பெண்ணை டீ.வி யில் பார்க்கும் போது கமலாவால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அயன் பண்ணும் வேலையை மறந்து போனாள். தனக்கு ஒரு பார்ட்னர் கிடைத்து விட்டதாக உணர்ந்தாள். சீரியலுடன் ஏற்பட்ட அந்த மானசீகமான உறவு அவளுக்கு மயிலிறகால். மெதுவாக தடவிகொடுத்தது போல் இருந்தது. பலவீனம் அடைந்த இதயம் சிறிது வலிமை பெற்றது.

ஆபிசில் திரு. சரவணன்

பைல்களுக்கு மத்தியில் தலையை புதைத்துக்கொண்டு. கால்குலேட்டர் உடன் கடந்த இரண்டு மணி நேரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். வழக்கமாக வரும் அந்த தலைவலியும் வந்து தொலைத்தது. தலைவலி வரும் நேரம் அவருக்கு சரியாக தெரியும் என்பதால் அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே டீ சொல்லி விட்டார். இந்த ஆபிஸை பொருத்தவரை டீ வேண்டுமென்றால் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சொல்லிவிட வேண்டும். சில சமயம் ஒரு மணி நேரம் ஆகலாம். சில நேரங்களில் மறந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. டீ சொன்னவுடன் கிடைப்பதற்கு இங்கே என்ன கமலாவா இருக்கிறாள்.”சேய். இந்த ஆபிஸில் யாருக்கும் பஞ்ச்வாலிட்டியே கிடையாது. நாடு எப்படி உருப்படும்” நொந்து கொண்டார் திரு. சுரவணன்.

மேனேஜர் அறையிலிருந்து கலவரமான முகத்துடன் ப்யூன் முருகன் வெளிப்பட்டான். நேராக சரவணணை நோக்கி வந்தான்.

“சரவணன் சார். மானேஜர் சார் உங்கள கூப்பிடுறார். ரொம்ப கோபமா இருக்கார்’

திரு. சரவணன் பைல்களில் இருந்து நான்கை உருவிக்கொண்டு மானேஜர் அறைக்கு ஓடினார்.

“மே ஐ கம் இன் சார்”“கம் இன்” உள்ளே நுழைந்தார். பவ்யமாக நின்றார்.

“யோவ் என்னையா அக்கவ்ண்ட்ஸ் பாக்குற பக்கத்துக்கு 2 மிஸ்டேக். இப்டி பாத்தா எப்டியா உருப்படும் இந்த கம்பெனி.”

“சார் ஐ வில் செக் இட் சார்”

“ஆமாய்யா வாழ்க்கை புல்லா செக் பண்ணிகிட்டே இரு. நீ பாக்குற பைல்ல எல்லாம் எப்படியா நம்பி கையெழுத்து போடுறது. நீ பாக்குற பைல்ல எல்லாம் திரும்ப செக் பண்றதுக்கு எனக்கு என்ன தனியா சம்பளம் தர்றாங்களா என்ன?”

“சாரி சார்”

“போய்யா போய் ஒழுங்கா கணக்க பாருய்யா”முகத்தில் படிந்த வியர்வையை துடைத்துவிட்டு சீட்டில் வந்தமர்ந்தார் சரவணன்.

“ஒரு மனுஷன இவ்வளவு டென்ஷன் ஆக்குனா எப்படி சரியா கணக்கு போட முடியும். அவனவனுக்குத்தான் தெரியும்” இதயபகுதி கலவரத்திலிருந்து விடுபட்டிருந்ததால் லேசாக வலியை உணர்ந்தது.

“சார் இந்தாங்க சார் டீ”

அந்த கண்ணாடி கிளாஸில் பாதி அளவு நிரம்பியபடி பிரவுன் கலரில் ஒரு திரவம் இருந்தது. “கடந்த ஒரு மணி நேரமாக இதற்காகாவா காத்திருந்தோம் சேய்” அதை எடுத்து உதட்டோரமாக கொண்டு சென்று ஒரு உறிஞ்சு உறிஞிசினார். அதன் சுவை அவருக்கு அழுகையையே வரவளைத்துவிட்டது.

திரு. சரவணன் மனதிற்குள்ளாக இவ்வாறு கூறிக்கொண்டார். “கமலா யூ ஆர் வெரி கிரேட். இனிமே உன்ன திட்டவே மாட்டேன்.”

அவரது அடி மனதில் இருந்து அந்த வார்த்தை வந்தது.

பள்ளிக் கூடத்தில் ரமேஷ்

மாணவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். ஆசிரியர் அழுகு மலையிடம் அடி வாங்கி கொண்டிருந்தார்கள். ரமேஷ் 7 வது ஆளாக நின்று கொண்டிருந்தான். கசாப்பு கடைகளில் எல்லாம் ஒரு ஆடு வெட்டப்படுவதை மற்ற ஆடுகள் பார்த்துக் கொண்டிருக்கும். நல்ல வேளை அவற்றிற்க்கு ஆறாவது அறிவு இல்லை என்பதால் அதிகமாக கலவரத்தை உணருவதில்லை. ஆனால் மனிதனுக்கு அப்படியில்லை. அந்த கசாப்பு கடைக்காரர் சாரி அந்த ஆசிரியர் தனது சிலம்பாட்ட திறமையை பிரம்பின் மூலமாக அந்த பையன் மேல் பிரயோக படுத்திக் கொண்டிருந்தார். 7 வதாக நின்று கொண்டிருந்த ரமேஷ் தூக்குத் தண்டனை கைதியை போல வெறித்து பார்த்து கொண்டிருந்தான். 2 வது பையன். 3 வது பையன். 4வது. 5. 6. திடீரென்று பிரம்பு பிய்ந்து விட்டது. ஆசிரியர் ஒரு பையனை எழுப்பினார். பக்கத்து கிளாசில் இருந்து ஒரு பிரம்பை வாங்கி வருமாறு கூறினார். ரமேஷ் கலவரமானான். ஏனென்றால் பக்கத்து வகுப்பறையில் பிரம்பில் விளக்கெண்ணெய் எல்லாம் தடவி மாட்டை அடிக்கும் பிரம்பை போல் வைத்திருப்பார்கள். ரமேஷ்க்கு யூரின் முட்டிக்கொண்டு வந்தது.

ஆசிரியரின் வெறித்தனமான தாக்குதல் ஆரம்பமானது. அடிபட்ட ஒவ்வொரு இடமும் நெருப்பாய் வலித்தது. அடி வாங்கிமுடித்து வந்தமர்ந்தான். இவ்வளவு வலியிலும். இவ்வளவு வேதனையிலும் அவனது உள் மனம் சந்தோஷத்தில் குதூகலமாக இருந்தது.

காலை 9:00 மணிக்கு நடந்த விஷயத்தை யோசித்து பார்த்தான். அனைவரும் பிரேயரில் இருந்தார்கள். ரமேஷ் மட்டும் வகுப்பறையில் டெஸ்க்குக்கு அடியில். தனது ஜாமின்ட்ரி பாக்ஸை திறந்தான். ஏற்கனவே இரண்டு காம்பஸ் வாங்கி வைத்திருந்தான். அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு. ஆசிரியர் உட்காரும் சேரின் அடியில் சொருகினான். சற்று கடினமாக இருந்தது. பிரேயர் முடிந்ததும் மாணவர்களோடு மாணவனாக வந்தமர்ந்து கொண்டான்.

மணி 9:15. ஆசிரியர் அழகு மலை. ரஜினி காந்தை போல வேகமாக நடந்து வந்து நச்சென்று உட்கார்ந்தார். கிட்டதட்ட ஒரு இன்ச் உள்ளே இறங்கிவிட்டது. துள்ளிக்குதித்து தரையில் விழுந்த அழகுமலையின் முகம் கோபத்தில் இன்னும் அசிங்கமாக மாறியது. இந்த அற்புத காட்சி இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று ரமேஷ் நினைக்கவில்லை. பிரம்பை எடுத்துக்கொண்டு சண்டைக்கு தயாரானார் அழுகுமலை. அதன் பின் நடந்தது தான் இவ்வளவும்.

ரமேஷின் இந்த பழிவாங்கும் படலம் இதற்கு முன்னர் அழகு மலை தாக்கிய தாக்குதலுக்கு பதில தாக்குதல் தான். ரமேஷிற்கு திருப்தியாக இருந்தது. அந்த ஒரு இன்ச் இரும்பு ஊசி எவ்வளவு ஆழமாக உள்ளே இறங்கியிருக்கும். சே நினைத்து பார்க்கும் பொழுதே இன்பமாக இருக்கிறதே. அம்மா மட்டும் இந்த ஜாமின்ட்ரி பாக்ஸை எடுத்து தராமல் இருந்திருந்தால் இந்த இனிமையான விஷயம் நடந்திருக்குமா. தேங்யூ மம்மி.

திவ்யா தனது வகுப்பில்

எல். கே. ஜி வகுப்பறையில் வாயில் விரலை வைத்துக் கொண்டு திரு திருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் திவ்யா குட்டி. ஏ. பி. சி. டி. நேற்று பார்க்காமல் எழுதி முடித்து சாதனை படைத்து விட்டாள். இன்று இ. எப். ஜி. ஹெச். எழுத வேண்டும். அந்த கடிணமான வேலை இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகி விடும். திவ்யா மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டாள். அனைவரும் நோட்டை எடுத்து விரித்து வைத்துக் கொண்டார்கள். பென்சிலை எடுத்துக் கொண்டார்கள். திவ்யா எப்படியும் இ எழுதி முடிப்பதற்குள் பென்சில் முனையை உடைத்து விடுவாள் என்று கமலத்துக்கு தெரியும். எனவே 3 பென்சில்களை ஏற்கனவே முனை கூர்மையாக்கி வைத்திருந்தாள். திவ்யா குட்டி எப்பொழுதும் தனது படைப்பை அழுத்தி அழுத்தம் திருத்தமாகத்தான் எழுதுவார்கள். ஆகவே பென்சில் முனை உடைவது என்பது சகஜமான விஷயம். அவர்கள் நோட்டின் ஒரு பக்கத்தில் எழுதினால் அடுத்த 10 பக்கங்களில் அந்த பதிவு இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது. நமது முன்னோர்கள் எழுத்தாணி உபயோகித்தவர்கள் தானே. அதன் பதிவு குழந்தைகளிடம் இருக்கத்தானே செய்யும்.

விசில் ஊதியதும் எழுத ஆரம்பிக்க வேண்டும். மிஸ் இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துக் கொண்டிருந்தார். “யாரும் மற்றவர்கள் நோட்டை திரும்பி பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தா அடி தான் கிடைக்கும்.” ஸ்கேலை உயர்த்தி காட்டுகிறார்.”உங்களுக்கு தெரிஞசத எழுதுங்க. யாரும் காப்பி அடிக்க கூடாது ழ.மஇ”“ழம அளைளளளளள”

விசில் ஊதப்பட்டது. ஊதிவிட்டு பக்கத்து வகுப்பறை அளைள உடன் கதை பேச கிளம்பி விட்டார்கள்.

நேரம் சென்று கொண்டே இருந்தது. திவ்யா குட்டி. தலைநிமிரவே இல்லை சீரியசாக தனது பதிவை செதுக்கி கொண்டிருந்தாள். அரை மணி நேரம் கடந்து விட்டது. கதை பேசி முழத்து விட்டு வந்தமர்ந்தார்கள் அளைள. அனைவரிடமும் நோட் வாங்கப்பட்டது. திருத்தப்பட்டது. திவ்யா அழகாக பொறித்திருந்தாள். ஆனால் ஒரு சின்ன குழப்பம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு டைரக்ஷனில் எழுதியிருந்தாள். ஆகையால் நோட்டை நான்கு கோணத்தில் இருந்து பார்க்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு ஏற்பட்டது. திவ்யா இருபது நிமிடத்திலேயே எழுதி முடித்துவிட்டாள். மீதி பத்து நிமிடம் என்ன செய்வது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பி கூட பார்க்கக் கூடாது. ஆகையால் எழுதியது மேலேயே திரும்ப திரும்ப எழுதி வைத்தாள். அவள் கொடுத்த அழுத்தத்தில் பாதி நோட் வீணாகி விட்டது.

திவ்யாவுக்கு எப்பொழுதுமே ஒரு வருத்தம். தான் எவ்வளவு தான் சரியாக டெஸ்ட் எழுதினாலும் இந்த முட்டை கண் மிஸ் தன்னை திட்டிக் கொண்டே இருக்கும். அதற்கு நான் சரியாக எழுதுகிறேன் என்கிற பொறாமை. அவள் நினைத்தது போலவே மிஸ் கூப்பிட்டு திட்ட ஆரம்பித்தாள். திட்டுக்களை வாங்கிவிட்டு கோபத்துடன் வந்தமர்ந்தார்கள்.

“நான் எழுதுறது எங்க மம்மிக்கு மட்டும் தான் புரியுது. இந்த மிஸ்க்கு புரியவே மாட்டேங்குது. எங்க மம்மி மாதிரி நல்ல மம்மி இங்க யாருமே கிடையாது.” உர்ரென உட்கார்ந்து கொண்டு மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

மாலை மணி 6:30 கமலாவின் கலவரமான நேரங்கள் ஆரம்பமானது

.1 . கணவன் சரவணன் - அடியே கமலா இது என்ன காபி தண்ணியா இல்ல கழனித் தண்ணியா?

2 . மகன் ரமேஷ் - அம்மா டி.வி ரிமோட்ட பாப்பா புடுங்கிட்டு தர மாட்டேங்கறா.

3. மகள் வித்யா - அம்மா எனக்கு ஜட்டி போட்டு விடுங்க.-

சூர்யா

நன்றி கீற்று