Sunday, January 17, 2010

லீனா


நீ அகன்ற அந்தப் பொழுது என் நிர்வாணத்தை உடைந்த கண்ணாடிக்கு வீசினேன் காற்றின் அறைகளில் அமிலத்தை கொட்டினேன் இருத்தலின் துண்டுகளை ஒன்று விடாமல் பொறுக்கித் தின்றேன் கனவுகளை விற்கும் கலைஞர்களை நாடாப் புழுக்களைப் போல் வல்லாங்கச் சொல்லி நிந்தித்தேன்கவிதைகளின் புதிர்களை உருவி நாய்களுக்கு போட்டேன் என் எலும்புகளில் வன்மம் ஏறுகிறது நீல கரப்பான் கடலறைந்து பிளக்கும் காகமென் காமம் பெருமழையில் உன் விந்து நுரைப்பைத் தேடி நீந்துகிறேன் அகப்படு